உணவு தொழில்நுட்பமும், பால் வளத் தொழில்நுட்பமும்
வியாழன், 29 நவம்பர், 2018
திருவள்ளூர் மாவட்டம்,
அலமாதி - கொடுவேளி எனும் பகுதியில் இயங்கி வரும்,
உணவு மற்றும் பால் வளத் தொழில் நுட்ப கல்லுாரி முதல்வர்,
த.பாஸ்கரன்: 2006ல்,
நான்கு ஆண்டு, பி.டெக்.,
படிப்பில், உணவு
தொழில்நுட்பமும், 2014 முதல்,
பால் வளத் தொழில்நுட்பமும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும்,
உணவுத் தொழில்நுட்பத் துறையில்,
எம்.டெக்., மற்றும்
பிஎச்.டி., முதலிய ஆராய்ச்சி படிப்புகளும்
உள்ளன.அகில இந்திய தொழில்நுட்பக் கழகம், 2008ல்,
இப்பட்டப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை வழங்கியது. தேசிய
வேளாண் ஆராய்ச்சிப் படிப்புகளும் இங்கு உண்டு. செயல்வழிக் கற்றலுக் காக,
பால், பழங்கள்,
காய்கறிகள் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் நிலையம்,
சாக்லேட் தயாரிக்கும் தொழில் மையம் உள்ளிட்ட,
பல மையங்கள் இருக்கின்றன.பால் பதப்படுத்தும் நிலையத்தில்,
பாலைப் பதப்படுத்துவதோடு மட்டும் இல்லாமல்,
பாலேடு, வெண்ணெய்,
நெய், ஐஸ்கிரீம்,
குல்பி, பன்னீர்,
பால்கோவா போன்ற பொருட்கள் செய்வதற்கு தேவையான அனைத்து
வசதிகளும் உள்ளன. இறைச்சி பதப்படுத்தும் தொழில்நுட்பக் கூடத்தில்,
இறைச்சி யின் தன்மையை அறிவதற்கான சோதனைக்கூடம் உள்ளது.
இறைச்சியை மதிப்புக் கூட்டும் முறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.இங்கு
செய்யப்படும் ஆராய்ச்சியின் விளைவாக உருவாகும் தொழில்நுட்பங்கள்,
சிறு, குறு தொழில்
செய்வோருக்கு பயிற்சி மூலம் சென்றடைய வழி செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசுத்
திட்டங்களில், உணவுத் தொழில் நுட்பத்
துறையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்திய அரசின் பாரத அபிவிருத்தி
திட்டத்தில், விவசாயி களுக்குப் பாலில் உள்ள
கொழுப்புச் சத்து மற்றும் கொழுப்பு இல்லா மற்ற திடப் பொருட்கள் போன்றவற்றைக்
கண்டறிவது குறித்த, விழிப்புணர்ச்சி
பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுதவிர, இங்குள்ள
சமுதாய மையத்தின் மூலமாக, நிலமற்ற
விவசாயிகள், தங்கள் மாடுகளை இம்மையத்தில்
வைத்துப் பராமரித்துக் கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.மாணவர்கள் இறுதி
ஆண்டுப் படிப்பின் போது, உணவுப்
பொருட்களைத் தயாரித்து, பல்கலைக்கழக
விற்பனை மையத்தில் விற்பனை செய்து, 'அனுபவக்
கற்றல்' திட்டத்தில் லாபம் ஈட்டுகின்றனர்.
இதனால், தன்னம்பிக்கையுடன் தொழில்
முனைவோராக உருவாக வாய்ப்புக் கிடைக்கிறது.இத்தகைய சிறப்பான செயல்பாடுகளைப்
பாராட்டி, 2017ல்,
கல்வி - தொழில் துறை இணைப்புக்கான விருதை,
அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் வழங்கியுள்ளது.மேலும்
விபரங்களை, உணவு மற்றும் பால்வளத்
தொழில்நுட்பக் கல்லுாரி, அலமாதி -
கொடுவேளி, சென்னை - 52
என்ற முகவரியிலும், 044 - 27680214/15 ஆகிய தொலைபேசி எண்களிலும் அறியலாம்.