உங்கள் வருகைக்கு நன்றி

அரசு உதவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு உதவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி ?.

சனி, 14 ஜனவரி, 2017

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும்(வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லதுமூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பிவைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்குதோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில்நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி,சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும்,தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய்.கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூடஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp


Read more...

தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்.

வியாழன், 22 டிசம்பர், 2016

தமிழ்நாட்டில் ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்கத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவிப் பணம் அளிக்கப்படுகிறது
ஆதரவற்ற முதியோர்
தமிழ்நாடு அரசு, கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிட்டு வரையறை செய்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாட்டில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச் சான்றுகளைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்துச் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
* அரசு பதிவு பெற்ற மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
* இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த மாமன்ற /நகர்மன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பம் ஆய்வு
இந்த விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின்பான பரிந்துரையின் பேரில் வட்டாட்சியர் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ400 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) வழியாக அளிக்கப்படுகிறது.

Read more...

தமிழக அரசு, மகப்பேறு உதவி தொகை வழங்கும் திட்டம்.

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை வழங்கும் திட்டம் சுகாதாரத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் மகப்பேறு உதவி தொகை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 7 மாத கர்ப்ப காலத்தில் இருந்து குழந்தை பிறந்த 3 மாதம் வரை இந்த உதவி தொகை பெற முடியும். 

குழந்தை பிறக்கும் முன் முதல் தவணையாக 4 ஆயிரம் ரூபாய், மகப்பேறு காலத்தில் 4 ஆயிரம் ரூபாய், மூன்றாவது தவணையில் 4 ஆயிரம் ரூபாய் என உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை எப்படி பெறுவது, யார், யாருக்கு கிடைக்கும். அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு சார்பு மருத்துவமனைகளில் (நகராட்சி, மாநகராட்சி மருத்துவமனைகள்) சிகிச்சை பெறுபவர்களுக்கு, குழந்தை பெற்றவர்களுக்கு மகப்பேறு உதவி தொகை வழங்கப்படும்.

முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு உதவி திட்டத்தில் உதவி பெற முடியும். 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குழந்தை பெற்றால், தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்றால் இந்த திட்டத்தில் உதவி கிடையாது. சிலர், குழந்தை பெற்ற பின்னரே உதவி தொகை கேட்டு விண்ணப்பம் தருகிறார்கள். 

முன்கூட்டியே விண்ணப்பித்தால், கர்ப்பிணிகள் உதவி தொகை பெற்று பயன்பெற முடியும். விண்ணப்பதாரர்கள் எங்கே குழந்தை பிறக்கிறதோ அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு சார்பு மருத்துவமனைகளில் விண்ணப்பிக்கலாம். பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்று விட்டால் அங்கேயுள்ள முகவரி மூலமாக விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பதாரர்களுக்கு தடையின்றி உதவி தொகை வழங்கப்படுகிறது. 

Read more...

ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக தமிழக அரசு, நலத்திட்டங்கள்

ஏழைப் பெண்களின் திருமணத்துக்காக தமிழக அரசு, நலத்திட்டங்கள் சிலவற்றைச் செயல்படுத்தி வருகிறது. தகுதி உடைய ஏழைக் குடும்பத்தினர் அந்தத் திட்டங்களின்பலனைப் பெறுவது எப்படி?

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.

ஏழைத் தாய்மார்கள் தங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்யவும், பெண் கல்வியை மேம்படுத்தவும் தமிழக அரசு திருமண உதவித் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு வருவாய் 24 ஆயிரத்துக்குக் குறைவான ஏழைப் பெண்கள் பயனடையலாம்.

யாருக்கு வழங்கப்படுகிறது?
இந்தத் திட்டத்தில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படித்துத் தேறிய, தேறாத மாணவிகள், பிரைவேட்டாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆன பெண்களின் தாய் அல்லது தந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், தாலிக்கான அரை பவுன் 22 கேரட் தங்கக் காசும் அரசு வழங்குகிறது. மலைவாழ் இனத்தினர் எனில் ஐந்தாம் வகுப்பு பாஸ் பண்ணினாலே போதுமானது.

இரண்டாவது பிரிவில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலோ, தொலைதூரக் கல்வி அல்லது அரசு அங்கீகரித்த திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா முடித்த பெண்கள் திருமணத்துக்காக 50 ஆயிரம் ரூபாய் பணமும், அரை சவரன் தங்கக் காசும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மணமகளுக்கு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஒரு குடும்பத்தில், ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்படும்.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
திருமண தினத்துக்கு முன்னதாக 40 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் உதவி வழங்கப்படும். வெகு அபூர்வமான கேஸ்களில், திருமண நாளுக்கு முந்தைய தினம் விண்ணப்பித்தாலும் உதவி அளிக்கப்படும். திருமண நாளன்றோ, அல்லது அதன் பிறகோ வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. 
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?

மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அப்பகுதியின் தாலுகா அலுவலர், கிராமப் பகுதிகளில் ஊராட்சிஅல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலர்கள், சமூக நல அபிவிருத்தி அதிகாரிகள், கிராம நல அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது டிகிரி / டிப்ளோமா மதிப்பெண் சான்றிதழ், வருமான சான்றிதழ், திருமண அழைப்பிதழ் இவற்றை இணைத்து விண்ணப்பித்தால் உதவித் தொகை வழங்கப்படும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவைகள் மறுமண உதவித் திட்டம்:
கணவனை இழந்த பிறகு மறுமணம் செய்துக் கொள்ளும் எவரும் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதிலும் இரண்டு வகை உண்டு. முதல் வகையில், எந்தவிதமான கல்வித் தகுதியும் கிடையாது. அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, 15 ஆயிரம் ரூபாய்க்கான தேசிய சேமிப்புப் பத்திரம், தாலிக்கு அரைப் பவுன் தங்கம் வழங்கப்படும்.
பட்டதாரிப் பெண்கள், டிப்ளோமா படித்தவர்களுக்கான இரண்டாவது வகையில், தாலிக்கு அரைப்பவுன் தங்கத்துடன், உதவித் தொகை 50 ஆயிரம் வழங்கப்படும். இதில் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு தேசிய சேமிப்புப் பத்திரமும் வழங்கப்படும்.
மறுமணம் செய்து கொள்ளும் விதவைப் பெண்ணுக்கு குறைந்த பட்சம் 20 வயதும், அவர் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு அதிக பட்சம் 40 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. மறுமணம் செய்து கொண்ட ஆறு மாதங்களுக்குள் விதவை என்பதற்கான சான்றிதழ், மறுமணத்துக்கான அழைப்பிதழ், கணவன், மனைவியின் வயது சான்றிதழ் ஆகியவற்றோடு இரண்டாம் பிரிவில் உதவி பெறுவதற்குரிய கல்வித் தகுதி சான்றிதழ் ஆகியவற்றோடு மாவட்ட சமூக நல அதிகாரி அல்லது சமூக நல விரிவாக்க அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். 15 நாட்களுக்குள் உதவித் தொகை கிடைக்கும்.

ஈ.வெ.ரா. மணியம்மை நினைவு ஏழை விதவைகளின் பெண்கள் திருமண உதவித் திட்டம்.

24 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக ஆண்டு வருமானம் கொண்ட ஏழை விதவைத் தாய்மார்கள், தங்கள் பெண்ணின் திருமணத்தை நடத்திட மணியம்மை பெயரில் தமிழக அரசு உதவித் தொகை வழங்குகிறது. மணப்பெண்ணுக்கு 18 வயது நிறைந்திருக்க வேண்டும்; அதிக பட்ச வயது வரம்பு இல்லை. ஒரு குடும்பத்தில் ஒரு மகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும். இதர விதிமுறைகள் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண உதவித் திட்டத்தைப் போன்றதே.

தாசில்தாரிடமிருந்து பெற்ற விதவைச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், மகளின் வயதுச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கத்தின் விதவை பென்ஷன் பெறும் பெண்கள் விண்ணப்பத்துடன் விதவை, வருவாய் சான்றிதழ் இணைக்கத் தேவை இல்லை.


அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம்

பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள், திருமண வயதை அடையும் நேரத்தில், அவர்களின் திருமணத்துக்காக தமிழக அரசு அன்னை தெரசாவின் பெயரால் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்திலும் கல்வித் தகுதி தேவையில்லாத ஒரு பிரிவு, பட்டப்படிப்பு, டிப்ளோமா படிப்பு முடித்த பெண்கள் என இரு பிரிவுகள் உண்டு. ஆதரவற்ற பெண் அல்லது அவரது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18. அதிக பட்ச வயது வரம்பு இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
திருமண நாளுக்கு முன்னதாக 40 நாட்களுக்குள் அவர் வசிக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.யின் சான்றிதழ் அல்லது தாய், தந்தை இருவரது இறப்புச் சான்றிதழ், தாசில்தாரிடமிருந்து பெற்ற மணமகளின் அல்லது பாதுகாவலரது வருமான சான்றிதழ், வயது சான்றிதழ், பிரிவு 2ல் பயன்பெற விரும்புகிறவர்கள் டிகிரி / டிப்ளோமா சான்றிதழ் இவற்றோடு மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட சமூக நல அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள், தகுதியானவர்களுக்கு உதவித் தொகையும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்படும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets