உங்கள் வருகைக்கு நன்றி

தமிழக அரசு, மகப்பேறு உதவி தொகை வழங்கும் திட்டம்.

வியாழன், 22 டிசம்பர், 2016

தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை வழங்கும் திட்டம் சுகாதாரத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் மகப்பேறு உதவி தொகை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 7 மாத கர்ப்ப காலத்தில் இருந்து குழந்தை பிறந்த 3 மாதம் வரை இந்த உதவி தொகை பெற முடியும். 

குழந்தை பிறக்கும் முன் முதல் தவணையாக 4 ஆயிரம் ரூபாய், மகப்பேறு காலத்தில் 4 ஆயிரம் ரூபாய், மூன்றாவது தவணையில் 4 ஆயிரம் ரூபாய் என உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை எப்படி பெறுவது, யார், யாருக்கு கிடைக்கும். அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு சார்பு மருத்துவமனைகளில் (நகராட்சி, மாநகராட்சி மருத்துவமனைகள்) சிகிச்சை பெறுபவர்களுக்கு, குழந்தை பெற்றவர்களுக்கு மகப்பேறு உதவி தொகை வழங்கப்படும்.

முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு உதவி திட்டத்தில் உதவி பெற முடியும். 17 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குழந்தை பெற்றால், தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்றால் இந்த திட்டத்தில் உதவி கிடையாது. சிலர், குழந்தை பெற்ற பின்னரே உதவி தொகை கேட்டு விண்ணப்பம் தருகிறார்கள். 

முன்கூட்டியே விண்ணப்பித்தால், கர்ப்பிணிகள் உதவி தொகை பெற்று பயன்பெற முடியும். விண்ணப்பதாரர்கள் எங்கே குழந்தை பிறக்கிறதோ அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு சார்பு மருத்துவமனைகளில் விண்ணப்பிக்கலாம். பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்று விட்டால் அங்கேயுள்ள முகவரி மூலமாக விண்ணப்பிக்க கூடாது. விண்ணப்பதாரர்களுக்கு தடையின்றி உதவி தொகை வழங்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets