உங்கள் வருகைக்கு நன்றி

தண்ணீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தண்ணீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தண்ணீர் பட்டபாடுன்னா இதுதாங்க !

செவ்வாய், 24 ஜூலை, 2012


உயிரினங்கள் அனைத் தும் வாழ இன்றியமையாதது தண்ணீர். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஜீவராசிகளின் உயிர் நாடியாய் உள்ள தண்ணீர் இப்போது பல்வேறு வகைகளில் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் குடிநீருக்காக 3-வது உலகப்போர் ஏற்படும் என்று உலக நாடுகள் எச்சரிக்கை மணி அடித்துள்ளன. 

எனவே நாம் நீராதாரங்களை காப்பதை முக்கிய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். நீர் மாசுபட்டால் அனைத்து நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். உயிர் காக்கும் தண்ணீரின் அவசியத்தையும், அவற்றின் பயன்பாடுகளையும்,தண்ணீரைப்பற்றிய அரிய தகவல்களையும் இங்கு காண்போம். 
இந்தியாவில் குடிநீர் தேவை......... 

* இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்தியாவில் 82 சதவீதம் விவசாயத்திற்கும், 10 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 8 சதவீதம் மக்கள் பயன்பாட்டிற்கும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. 


* அமெரிக்கா ஒரு நாளைக்கு 346000 மில்லியன் காலன் தண்ணீரை பயன்படுத்துகிறது. 


* அமெரிக்கா தனது நாட்டில் உள்ள தண்ணீரில் 80 சதவீதத்தை விவசாயத்திற்கும், மீதியை மின் உற்பத்திக்கும் பயன்படுத்துகிறது. 


* அமெரிக்க குடிமகன் ஒரு நாளைக்கு 80 முதல் 100 காலன் தண்ணீரை பயன்படுத்துகிறான். 

மனிதனும் தண்ணீரும்.......... 

* மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. 


* பிறக்கும் குழந்தையின் எடையில் 80 சதவீதம் தண்ணீர்தான். 


* மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் 8 டம்ளர்   தண்ணீர் குடிக்க வேண்டும். 


* தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் தானாக வெளியேறும்.

உலகமும் தண்ணீரும்.......... 

* உலகத்தில் 70 முதல் 75 சதவீதம் பகுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பூமிக்கு மேல் உள்ள நீராதாரங்களை விட நிலத்தடி நீரே சுத்தமானது. சுகாதாரமானது. 


* ஆண்டாண்டு காலமானாலும் தண்ணீரின் அளவு மாறப்போவதில்லை. உலகம் தோன்றியது முதல் அதே அளவு தண்ணீர்தான் உள்ளது. 


* உலகில் உள்ள மொத்த தண்ணீரின் அளவு 326 மில்லியன் கியூபிக் மைல்ஸ். 

குடிநீரின் அவசியம்.......... 

* ஒரு மனிதன் உணவு சாப்பிடாமல் ஒரு மாதம் வாழ முடியும். ஆனால் ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீர் குடிக்காமல் வாழ முடியாது. 


* மனித உடல் சீராக இயங்க கண்டிப்பாக தண்ணீர் தேவை. 


* தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான சக்தியை அளிக்கிறது. 


* சுத்தமான தண்ணீரை குடிப்பதன் மூலம் நோய் தடுப்பாற்றலை பெறலாம். 


* தண்ணீர் அதிகம் குடித்தால் தலைவலி வராது. 


* ஆரோக்கியமான - அழகான தோற்றத்துக்கு தண்ணீர் அவசியம். 


* உணவு செரிக்கவும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதும் தண்ணீரின் தலையாய பணி. 


* உடலுக்கு தேவையான சத்துக்களை அந்தந்த பாகங்களுக்கு எடுத்துச் செல்ல தண்ணீர் அவசியம். 

பழங்கள்-காய்கறிகளில்.......... 

* உலகின் சராசரி மழை அளவு 850 மி.மீ. 


* உலகின் தட்பவெப்ப நிலையை பேணிக் காப்பதில் தண்ணீரின் பங்கு அதிகம். 


* விலங்குகளின் ரத்தம், தாவரங்களின் திசுக்கள் ஆகியவற்றில் தண்ணீரின் அளவு அதிகம். 


* நீரின்றி அமையாது உலகு. 


* தக்காளியில் 95 சதவீதமும், மாங்காயில் 65 சதவீதமும், தர்பூசணியில் 95 சதவீதமும்,அன்னாசியில் 87 சதவீதமும் தண்ணீர் உள்ளது. 

அதிர்ச்சி தகவல்கள்......... 

* உலகில் 1.5 பில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். 


* தண்ணீர் தொடர்பான நோயால் ஆண்டுக்கு 4 மில்லியன் மக்கள் மரணத்தை தழுவுகிறார்கள். 


* அசுத்தமான தண்ணீரே காலராவுக்கு மூல காரணம். இதன் மூலம் 43 சதவீதம் பேர் மரணத்தை தழுவுகிறார்கள். 


* வளரும் நாடுகளில் நிகழும் மரணங்களில் 98 சதவீதம் தண்ணீரால் ஏற்படுகிறது. 


* சுகாதாரமற்ற  தண் ணீரை குடிப்பதால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலராவால் மடிகிறார்கள். 


* ஆப்பிரிக்க வாழ் பெண்கள் ஒருநாளைக்கு 16 மணி நேரத்தை தண்ணீர் தேடி அலைவதிலேயே செலவழிக்கிறார்கள்

Read more...

மழை நீரை சேமிப்பது காலத்தின் கட்டாயம்.

புதன், 21 மார்ச், 2012

 (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. (அல்குர்ஆன்:24:43)

தமிழ் நாட்டின் முன்னாள் முதன் மந்திரி ஒரு சட்டம் கொண்டு வந்தார். ஒவ்வொருவரும் கட்டாயமாக மழைநீர் சேமிப்புக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும். புது வீடுகள் கட்ட முனைவோர் அவர் செய்யப் போகும் மழை நீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை வரைபடத்தில் காட்டினால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் அவர். அந்த உத்தரவினை மிகச் சிலரே ஆர்வம் காட்டினர்.  
அந்த உத்தரவுகள் வந்த உடன் அவசர அவசரமாக சென்னைவாசிகள் மண்ணில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதற்குள் நான்கு கற்களைப் போட்டு வீட்டுக் கூரைகளிலிருந்து வரும் மழை நீர்க் குழாய்களை அதற்குள் விட்டு மூடிவிட்டார்கள். இந்த வேலை செய்து தந்தவர்களின் காட்டில் நல்ல பண மழை பெய்தது. ஒரு நல்ல மழை பெய்த உடன் மூடியிருந்த பள்ளத்தைத் திறந்து கொண்டு மீண்டும் மழை நீர் சாக்கடைகளைத்தான் சென்றடைந்தது

மழைநீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது.

நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிரப்பி பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க்குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும். இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.


விளக்கப் படம் - மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் முறை
RainWaterHarvesting.jpg


சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும்,  தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும்,  தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

 June Water Feature.jpg

இவைகள் தமக்குள்ளும்,  தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை,  தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து,  கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.

ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும்,  தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.
 Water Rhapsody 007      Water Rhapsody 008

உதாரணமாக, சில பகுதியில் மூன்று அடி ஆழத்திலும்,  சில பகுதியில் 60 அடி ஆழத்திலும்,  ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது.  மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.
மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள்,  மழை நீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

வாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்:

 


மழை நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும்,  அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும்,  தமிழக மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்.
ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.
இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.
Rainwater Harvesting 

அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து,  இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.
ஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து,  தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

Read more...

இன்று உலக தண்ணீர் தினம்


நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. அத‌ற்கு‌ம் ம‌னித இன‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை.

1993ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு இ‌ன்று வரை கொ‌ண்டாடி‌த்தா‌ன் வ‌ரு‌கிறோ‌ம். ஆனா‌ல் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி ‌தி‌ண்டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எ‌ந்த வகை‌யிலு‌ம் அகல‌வி‌ல்லை.

ம‌க்க‌ள் தொகை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்க, அவ‌ர்களு‌க்கு‌த் தேவையான குடி‌நீ‌ர் தேவையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. தேவையை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌நீரை‌க் குடி‌க்கு‌ம் ‌நிலை‌க்கு பல பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர். அத‌ன் ‌விளைவு கடுமையான நோ‌ய்க‌ள்.

 மு‌‌ந்தைய கால‌த்‌தி‌ல் கோடை‌க் கால‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் ‌வீ‌ட்டு‌க்கு வெ‌ளியே பானையோ அ‌ல்லது ஒரு பா‌த்‌திரமோ வை‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌ப்பா‌ர்க‌ள். வ‌ழி‌யி‌ல் செ‌ல்வோ‌ர் அ‌ந்த ‌நீரை‌க் கு‌டி‌த்து தாக‌ம் ‌தீ‌‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்ற ந‌ல்ல நோ‌க்க‌த்தோடு. ஆனா‌ல் அதுபோன‌ற்தொரு கா‌ட்‌சியை த‌ற்போது நா‌ம் எ‌ங்காவது பா‌ர்‌க்க இயலுமா?

காண முடியு‌ம், வாச‌லி‌ல் குட‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் அவை ‌நீ‌ர் ‌நிர‌ம்‌பி அ‌ல்ல, ‌நீ‌ர் ‌நிர‌ப்ப, எ‌ப்போதாவது வரு‌ம் குழா‌ய் ‌நீரு‌க்கு‌ம், குடி‌நீ‌ர் லா‌ரி‌க்காகவு‌ம் கா‌த்‌திரு‌க்கு‌ம் குட‌ங்க‌ள் அவை.

முத‌லி‌ல் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் எ‌ன்ன தெ‌ரியுமா? ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டு‌ம், த‌ற்போது எ‌த்தனை குள‌ங்க‌ள் இரு‌ந்த இட‌த்‌தி‌ல் அடு‌க்கு மாடி‌க் குடி‌யிரு‌ப்புக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளன, ஏ‌ரிக‌ள் இரு‌ந்த இட‌ங்க‌ள் எ‌த்தனை கால‌னிக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அ‌ங்கே தே‌ங்‌கி ‌நி‌ற்க வே‌ண்டிய ‌நீ‌ர் எ‌ங்கே செ‌ன்று ‌நி‌ற்கு‌ம்? ‌நினை‌த்து‌ப் பா‌ர்‌த்ததா ம‌னித சமூக‌ம்? ‌நீ‌ர் இரு‌ந்த இட‌த்தை கா‌லி செ‌ய்து ‌வி‌ட்டு அ‌ங்கே நா‌ம் குடிபோனோ‌ம். த‌ற்போது குடி‌நீ‌ர் இ‌ல்லை எ‌ன்று அலை‌ந்து கொ‌ண்டிரு‌ப்பது‌ம் நா‌ம்தா‌ன்.

70 ‌
விழு‌க்காடு பர‌ப்பளவு ‌‌நீ‌ர் இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் 97.5 ‌விழு‌க்காடு க‌ட‌லி‌ல் இரு‌க்கு‌ம் உ‌ப்பு ‌நீ‌ர்தா‌ன். ‌மீது‌ம் 2.5 ‌விழு‌க்காடு அள‌வி‌ற்கு‌த்தா‌ன் ‌நில‌த்தடி ‌நீ‌ர் உ‌ள்ளது. இ‌தி‌லு‌ம் துருவ‌ப் பகு‌திக‌ளி‌ல் ப‌னி‌ப்பாறைகளாகவு‌ம், ப‌னி‌த்தரையாகவு‌ம் மா‌றி‌ப் போ‌யிரு‌க்‌கிறது எ‌ஞ்‌சியு‌ள்ள 0.26 ‌விழு‌க்காடு ‌நீரை‌த்தா‌ன் உலக ம‌க்க‌ள் அனைவரு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன், ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

‌ 
நில‌த்தடி ‌நீரை‌ப் பாதுகா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் மாசுபடாம‌ல் இரு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டியது‌ம் ம‌னித சமுதாய‌த்‌தி‌ன் கடமையா‌கிறது.

இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்க‌ள், குடி‌நீரு‌க்காக ஒருவரை ஒருவ‌ர் கொ‌ன்று‌ப் போடு‌ம் நிலைதான் ஏற்படும்.

எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

தண்ணீர்த்துளிகள்

* உலகளவில் ஒவ்வொரு நாளும், தூய்மையற்ற குடிநீரைப் பருகுவதன் மூலம் 25ஆயிரம் பேர் இறப்பதாக, ஐ.நா., சுற்றுப்புற திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

* நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு ஒரு லிட்டருக்கு 0.75 முதல் 1.5 மில்லிகிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

* 
இந்தியாவின் நகர்ப்புறங்களில் சராசரியாக 64 சதவீத மக்களுக்கே, வீட்டுச் சேவை இணைப்புகள் மற்றும் பொது குடிநீர் நிலைகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

* 
நபர் ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்பது தேசிய இலக்கு. ஆனால் நகரங்களுக்கு ஏற்ப 37 முதல் 298 லிட்டர் வரை வழங்கப்படும் அளவு மாறுபடுகிறது.

* 
பழுதான சேவை இணைப்புகள், குழாய்கள், மீட்டர் இணைப்புக் கோளாறுகளால் 70 சதவீத தண்ணீர் வீணாகிறது.

Read more...

நாம் பயன்படுத்தும் தண்ணீரைப் பற்றி தெரிந்து கொள்வோமே

ஞாயிறு, 25 டிசம்பர், 2011


முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.

இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.

ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ....
 1.
சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?
நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.

2. 
புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?
குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.

3. 
பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?
குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.

4. 
வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?
காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.

5. 
சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?
நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.

6.
நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?
இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.
7. 
போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?
தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

8. 
கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?
சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்


·         நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.
·         நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)
·         தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.
·         கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
·         புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.

உதவி இயக்குநர், (நில வேதியியல்)
நிலவேதியியல் உட்கோட்டம்,
தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,
தரமணி, சென்னை-600113
போன்:044-22541373

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets