உங்கள் வருகைக்கு நன்றி

இதன் பெயர் ஸ்பைருலினா.

ஞாயிறு, 5 மே, 2019

மாஸ்டர் டிகிரிமுடித்த நான்சிங்கப்பூர் போய்ஹோட்டல் நடத்தினேன். ஹோட்டலுக்கு வரும் நிறைய பேர்கையில், 'சயனோ பாக்டீரியாஎன்ற மாத்திரை டப்பா வைத்திருப்பர். பச்சை கலரில் இருக்கும் அந்த மாத்திரை அல்லது 'கேப்ஸ்யூலைசாப்பிட்ட பிறகேகாலை உணவு சாப்பிடுவர்.இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, 'இதன் பெயர்ஸ்பைருலினா. ஊட்டச்சத்துதாதுச்சத்துபுரதம் நிறைந்தது. இதை தொடர்ந்து சாப்பிட்டால்உடலுக்கு எதிர்ப்புச்சக்தி கிடைக்கும். சீனாதாய்லாந்து நாடுகளிலும்இந்தியாவிலும் அதிகளவு உற்பத்தி ஆகிறதுஎன்றார்.அப்போது முதலேஇதன் மீதான ஆர்வத்தால்அதுபற்றிய தகவல்களை திரட்டிஸ்பைருலினா வளர்ப்புபணம் கொழிக்கும் தொழில் என்பதை அறிந்தேன். 
கடந்த,2011ல்,- ஊர் திரும்பியதும்மூன்று ஆண்டு அலைந்து திரிந்துபயிற்சி
 எடுத்துஸ்பைருலினா வளர்ப்பதற்காகஇடம் தேடினேன்.கடந்த, 2015ல்இந்த, 8 ஏக்கர் நிலத்தை வாங்கிதண்ணீர்மின் வசதிகளை ஏற்படுத்திஸ்பைருலினா வளர்ப்புக்கான தொட்டிகளை அமைத்தேன்.உற்பத்தி செய்த ஸ்பைருலினாவைபள்ளிபள்ளியாக ஆசிரியர்களை சந்தித்துஇதுகுறித்து எடுத்து சொன்னேன். அவர்கள் வாயிலாகமாணவர்களிடம் சொல்ல வைத்தேன். நிறைய ஆசிரியர்கள்தொடர்ந்து வாங்க ஆரம்பித்தனர்.இப்பகுதியில் இருக்கும் சில டாக்டர்களும்நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். நண்பர்களும்உறவினர்களும் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறிவாங்க வைக்கின்றனர். அதனால்விற்பனை நல்ல படியாக நடக்கிறது.தமிழகம் மட்டுமின்றிஹரியானா மாநிலத்தில் சில நகரங்களுக்கும்குஜராத் மாநிலம்ஆமதாபாத்துக்கும் ஸ்பைருலினாவை அனுப்பி வருகிறேன். இதை பவுடராக மட்டுமல்லாமல், 'கேப்ஸ்யூல்பேஸ் பேக்சாப்ட் ஜெல்மற்றும் சாக்லேட்கடலை மிட்டாய்தலைக்கான எண்ணெய் எனமதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாகவும் தயாரித்து விற்கிறேன். தற்போதுசோப்புஷாம்பூவும் தயாரித்துள்ளேன். இன்னும் விற்பனை செய்ய ஆரம்பிக்கவில்லை. நேரடி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் என, 150 கிலோ விற்பனை மூலம்இதர செலவுகள் போகமாதம், 2.50 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. பண்ணையை விரிவுபடுத்தி வரும் நிலையில்மாதம்டன்னுக்கு மேல்ஸ்பைருலினா உற்பத்தி பண்ணலாம். அந்த இலக்கை அடைந்தால்,25 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் எடுத்து விடுவேன்.

சுருள்பாசி எனப்படும், 'ஸ்பைருலினா' வளர்ப்பு பண்ணை நடத்தி வரும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா: தொடர்புக்கு:97887 91706

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets