உங்கள் வருகைக்கு நன்றி

மக்கள் தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மக்கள் தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனிதன் இந்தப் பூமியில் வாழவேண்டும் என்றால்

வெள்ளி, 15 ஜூன், 2012


நம் எல்லோருக்குமே வீடுதான் மிகவும் பாதுகாப்பான இடம். வீடுகளின் வடிவத்திலும் வசதியிலும் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் வீடு என்பது நமக்கு எக்காலத்திலும் அன்பிற்குரியது. சரி, இந்த வீடு எனும் கற்பனை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது என்று தெரியுமா? வீட்டின் சரித்திரத்தை அறிவதற்கு நாம் கடந்த காலத்தைப் பார்க்கவேண்டும்.

மனிதன் இந்தப் பூமியில் வாழவேண்டும் என்றால் இயற்கையின் சவால்களை எதிர்கொண்டே தீர வேண்டும். கடுங்குளிரிலும், கடுமையான வெப்பத்திலும், பெருமழையிலும் மனிதர்கள் வாழ்வது சிரமம். அதுபோன்ற பருவ நிலைகளில் என்ன வேண்டும்? பாதுகாப்பாக வசிப்பதற்கு ஒரு இடம் வேண்டும். தாக்க வரும் மிருகங்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும். இதுபோன்ற கட்டாயங்கள் ஏற்படும்போதுதான்,மனிதனுக்கு வீடு என்பது இன்றியமையாத்     தேவையாகியது.

அப்போது மனிதன் முதன் முதலாக, ஒரு வசதியான தங்குமிடத்தைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான். மரத்தின் அடிப் பகுதியோ, அல்லது மரக்கிளைகளின் மறைவோ, குகையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முதலில் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும். எனவே மனிதன் அப்படிப்பட்ட ஒரு இடத்தைக் கண்டுபிடித்தான்.
மனிதன் முதன் முதலில் தங்கத் தொடங்கியது குகைகளில்தான். இன்றும் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் சில பகுதிகளில் குகைகளில் மனிதர்கள் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு மனிதன் தான் வேட்டையாடிப் பிடித்த மிருகங்களின் தோலையோ மரக்கிளைகளையோ விரித்து அதன் கீழே தங்குவதற்கு முயன்றான். பிறகு இந்த விரிப்பு என்பது நான்கு புறங்களாகவும், உயர்ந்த மேற்பகுதியுடையதாகவும் வளர்ச்சியடைந்தது. அப்போது அது ஒரு கூடாரமாகியது.

நீங்கள் சர்க்கஸ் கூடாரத்தைப் பார்த்திருப்பீர்களே, ஏறத்தாழ அதுபோல இருந்தது. சில நாடோடிகள் சாலையோரங்களில் அமைக்கின்ற கூடாரங்களையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். பழங்காலத்து மனிதர்கள் மிருகங்களின் தோலையும் மரக்கிளைகளையும் பயன்படுத்திக் கூடாரம் அமைத்தார்கள் என்றால் இக்காலத்தில் உள்ளவர்கள் கனமான கேன்வாஸ் துணிகளையும். மரச்சட்டங்களையும், இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்திக் கூடாரம் அமைக்கிறார்கள். இன்றும் வனப் பகுதிகளுக்கோ, மலைப் பகுதிகளுக்கோ ஆய்வுக்காகச் செல்லும் விஞ்ஞானிகள் கூடாரம் அமைத்துத் தங்குவது உண்டு. உல்லாசப் பயணம் செல்பவர்களும் மற்றவர்களும்கூட கூடாரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

பிறகு மனிதர்களின் அறிவு விரிவடைந்தது. தங்களுக்குக் குகைகளைவிடவும்,    கூடாரங்களைவிடவும் நல்ல தங்குமிடங்கள் வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. அப்போது அவர்கள், தாங்கள் வாழும் சுற்றுப் புறத்திலிருந்து கிடைத்த இலை தழைகளையும், கிளைகளையும், மிருகங்களின் தோல்களையும் பயன்படுத்தி புதுவிதமான வீடுகளை உருவாக்கினார்கள். இன்றும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் மனிதர்கள் இவ்வகையான வீடுகளைக் கட்டுவதுண்டு. அடுத்தபடியாக மரங்களைப் பயன்படுத்தி வீடு கட்டினார்கள். பழங்கால மனிதர்கள் வீடு கட்ட கற்களை உபயோகப்படுத்தவில்லை. மிகவும் முக்கியமான கட்டடங்களைக் கட்டுவதற்காகத்தான் அக்காலத்தில்   கற்களைப் பயன்படுத்தினார்கள். புராதன எகிப்தியர்கள் வீடு கட்டுவதற்கான கற்களையும் காரைப் பூச்சையும் கண்டுபிடித்த பிறகு வீடுகள் கட்டுவதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

பழங்கால வீடுகள் பல வடிவங்களில் இருந்தன. நாடுகளுக்கும் அதன் பருவ நிலைகளுக்கும் ஏற்ற வகையில் வீட்டின் வடிவமும், அதைக் கட்டப் பயன்படுத்துகின்ற பொருட்களும் மாறுகின்றன. வெப்ப நாடுகளில் கட்டப்பட்ட வீடுகள் ஏறத்தாழ பெட்டி வடிவத்தில் இருந்தன. வெள்ளை நிறச் சுவர்களைக்கொண்டிருந்தன. சன்னல்கள் மூடப்பட்டிருந்தன. இவ்வகையான வீடுகளின் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும்.
பனி பொழிகிற நாடுகளில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் மிகவும் சரிந்திருக்கும். ஏன் இப்படி? பனி பொழியும்போது வடிந்து இறங்க வேண்டும் அல்லவா, அதற்காகத்தான். தட்டையான கூரையாக இருந்தால் பனி அங்கேயே குவிந்து கிடக்கும். அளவுக்கு அதிகமாக பனி சேரும்போது கூரை அப்படியே விழுந்துவிடக்கூடிய அபாயம் உண்டு.

எதிர்பாராத வகையில் திடீர் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்படுகிற சில நாடுகள் இருக்கின்றன. "ஹோயாங்ஹோ' நதியை சீனாவின் துயரம் என அழைப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். எதிர்பாராத நேரத்தில் அந்த நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அப்போது இரு கரையிலும் உள்ளவையெல்லாம் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும். இத்தகைய நதிகள் இந்தியாவிலும் உண்டு. அங்கெல்லாம் மிக உயரமாகத்தான் வீடுகளை அமைப்பார்கள். வெள்ள ஆபத்து ஏற்படக்கூடிய இடங்களில் நாட்டப்பட்டிருக்கும் தூண்களின் மீதுதான் வீடுகளை அமைப்பார்கள்.

நீங்கள் பூகம்பத்தைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். பொதுவாக நம் நாட்டில் இவ்வகையான இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதில்லை. ஆனால் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதிகளில் உள்ள வீடுகளை, மிகவும் எடை குறைந்த பொருட்களைப் பயன்படுத்தித்தான் கட்டுவார்கள். இவை மிகவும் செலவு குறைந்த வீடுகளாக இருக்கும். இவை பூகம்பத்தில்   இடிந்து விழுந்தாலும் யாருக்கும் பெரிய ஆபத்தோ,  பெரிய பண நஷ்டமோ ஏற்படாது.

பனிக்கட்டி மட்டுமே கிடைக்கக்கூடிய ஆர்ட்டிக் பிரதேசங்களில் வசிக்கின்ற       எஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளைக் கொண்டுதான் வீடுகள் கட்டுகிறார்கள். இதுபோன்ற வீடுகள் "இக்ளூ' என்று அழைக்கப்படுகின்றன. பனிக்கட்டியை செங்கற்கள் வடிவத்தில் வெட்டி எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.    இக்ளூ கட்டி முடிக்கப்பட்ட பிறகு எஸ்கிமோக்கள் அதன் உள்ளே சென்று, மிருகக் கொழுப்பை எண்ணெயாகப் பயன்படுத்தி நெருப்பு உருவாக்குகிறார்கள். அந்த வெப்பத்தில், இக்ளூவின் உட்பகுதியிலிருக்கும் பனி சற்று உருகும்; கட்டும்போது ஏற்பட்ட இடுக்குகளிலும் பிளவுகளிலும் ஒழுகும். அப்போது சட்டென்று கதவைத் திறந்து, துருவக்காற்றை  உள்ளே விடுவார்கள்.
நனைந்திருக்கின்ற பனிக்கட்டிகள் குளிர்ந்து உறைந்து, இடுக்குகள் அடைபட்டுப்போகும். வெளியே எவ்வளவு குளிராக இருந்தாலும் உள்ளே கதகதப்பாக இருக்கும்.
சீனாவைச் சேர்ந்த மீனவர்கள், "ஹெüஸ் போட்டுகள்' எனப்படும் படகு வீடுகளில்தான் துறைமுகங்களிலும் நதிகளிலும் வசிக்கிறார்கள். இதுபோன்ற படகு வீடுகளை கேரளத்திலும், காஷ்மீரிலும் நிறையப் பார்க்கலாம்.
சைபீரியாபோன்ற குளிர் நாடுகளில் மனிதர்கள் உருவாக்குகின்ற வீடுகளைக் குழி வீடுகள் என்று அழைக்கலாம். சுவர்களின் மேற்பகுதியும், மேற்கூரையும் மட்டுமே தரை மட்டத்தில் இருக்கும். வீட்டின் மற்றப் பகுதிகள் தரை மட்டத்திற்குக் கீழேதான் இருக்கும்.
ஜிப்ஸிகள் என்று அழைக்கப்படுபவர்கள் நாடோடிகள். அவர்கள் தாங்கள் பயணம் செய்யும் வண்டிகளிலேயே தங்கிக்கொள்வார்கள்.
இந்தியாவில் சில பிரதேசங்களில் கொல்லர்களும், ஆசாரிகளும் தங்கள் பணிக் கருவிகளுடன் கை வண்டிகளைத் தள்ளியபடி தங்கள் குடும்பத்துடன் பயணம் செல்வது வழக்கத்திலிருந்தது. குடிசை அமைப்பதற்குத் தேவையான பொருட்களைச் சுமந்து பயணம் செல்லும்    நாடோடி மேய்ப்பர்கள் தமிழ் நாட்டில் உண்டு. இவர்கள் தங்கள் கால்நடைகளுடன் புதிய மேய்ச்சல் இடங்கள் தேடிச் செல்வார்கள். தங்களுக்கு ஏற்ற இடத்தை அடைந்த பிறகு அங்கேயே குடிசை அமைத்துத் தங்குகிறார்கள். இவர்களின் குடிசை "பட்டிக் குடிசை' எனப்படுகிறது.

கீற்று வேய்ந்த வீடுகள் உள்ளன. ஓடுபோட்ட வீடுகளும் உண்டு. காங்கிரீட் கட்டடங்களும் இருக்கின்றன. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் கூரை அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் தகரக் கூரை அமைக்கப்பட்ட வீடுகளும் இருக்கின்றன. ஆனால் ஆஸ்பெஸ்டாஸ், மற்றும் தகர வீடுகளில் கோடைகாலத்தில் வசிப்பது மிகவும் சிரமம். பல வீடுகள் கொண்ட ஒரு கட்டடத்திற்கு, அடுக்கு மாடிக் குடியிருப்பு என்று பெயர். நகரங்களில் நிறைய அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உள்ளன. நகரங்களில் மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருக்கும். எல்லோரும் தனித்தனியாக வீடு கட்டுவதற்கு இடம் இருக்காது. அப்போது மக்கள் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் குடியேறுகிறார்கள்.
ஆனால் நம் நாட்டில் தங்க இடம் எதுவும் இல்லாமல் தெருவோரங்களில் வசிப்பவர்கள் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். மனிதர்கள் வசிப்பதற்குக் கொஞ்சமும் தகுதியற்ற இடங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் எண்ணற்றோர் உள்ளனர்.

Read more...

2024 க்கு பின் உலகம் இந்தியர்கள் வசமே ஏன் ? ஆனால் சினா ?

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

உலக மக்கள் அனைவரையும் காக்கும் பொறுப்பு, 2024 க்கு பின் இந்தியர்கள் வசமே வரும்,'' என, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கூறினார். ஒருவர் நல்ல விஞ்ஞானியாக வருவது எளிது. நல்ல மனிதனாக வருவது கடினம். தற்போதைய சூழலில் நாடு வளர்ச்சி பெற அறிவியலுக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியல் தொழில்நுட்பம் இன்றி முன்னேற்றம் என்பது சாத்தியமே இல்லை. சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட அறிவியல் தேவைப்படுகிறது.

அடுத்து வரும் ஐந்தாண்டு திட்டத்தில் மாணவர்கள் ,கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் பி.ஹச்.டி. , ல் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் மார்க் எடுத்தால், 87 ஆயிரம் வீதம் ஆயிரம்பேருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளன. இது தவிர, பிஎச்.டி. ,முடித்த பிறகு அவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் உள்ள உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை கொடுத்து ,5 வருடம் ஆராய்ச்சி செய்வதற்கான செலவு நிதியும் வழங்கப்படும். இதை அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் 30 லட்சம் பேருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உலக மக்கள் தொகையை ஆராய்ச்சி செய்து பார்த்ததில், இந்தியாவிற்கு ஒரு தனித்தன்மை உள்ளது. 54 சதவீத இந்தியர்கள் 34 வயதுக்கு கீழ்பட்டவர்களாக உள்ளனர். இதன்படி பார்த்தால்,"" 2024 க்கு பிறகு உலக மக்கள் அனைவரையும் காக்கும் பொறுப்பு இந்தியர்கள் வசமே வரும்'' என, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதற்கு மாணவர்கள் தற்போதே கடுமையாக உழைக்க வேண்டும். எந்த விஷயத்திலும் முற்போக்கான செயல்பாடுகள் வேண்டும். எண்ணங்களில் எழுச்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்,என்றார்.  

சினாவில் பெண்கள் இறக்குமதி!

சினாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ளது. எனவே, அந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிகின்றனர். பெண் குழந்தையாக இருந்தால் அதை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது.  எனவே, திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் லட்சக்கணக்கான சீன இளைஞர்கள் தவித்து வருகின்றனர். எனவே, இக்குறையை போக்க தங்களது பக்கத்து நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் வடகொரியாவில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது. முதலில் 36 ஆயிரம் மணப்பெண்கள் பக்கத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளனர். தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் ஆண்களை விட 13 சதவீதம் பெண்கள் குறைவாக உள்ளனர்.


சீனாவுக்குள் மணப்பெண்களாக அனுப்பும் பணியை பௌத்த மத நாடாகவும் இராணுவ சர்வாதிகாரமிக்க நாடாகவும் உள்ள பர்மா மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் பெண்பிள்ளைகளின் வீதம் குறைவென்பதால் அங்குள்ள ஆண்கள் பர்மாவிலிருந்து பெண்களை விலைக்கு வாங்கிக் கட்டாயமாகத் திருமண பந்தத்திற்குள் திணிக்கின்றனர்.
அபா எனும் சிறுமிக்கு 12 வயதுதான். சீன எல்லையைக் கடந்து யுனான் மாகாணத்திற்குள் சென்றபோது தான் வீட்டிலிருந்து பிரிந்துவந்திருப்பதாக நினைத்திருந்தாள். ஏனைய பெண்களைப் போலவே சில வருடங்களின் பின்னர்தான் இவள் தனது குடும்பத்தினரை மீண்டும் சந்தித்திருந்தாள். சீனாவில் இருந்தபோது இவளுக்குத் தொடர்ச்சியான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன. குடும்பத்துடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அத்துடன் அவளை வாங்கிய குடும்பத்தின் மகனையே அவள் திருமணம் செய்யவேண்டியிருந்ததையும் உணர்ந்தாள். தான் 20,000 யுனானிற்கு (1880 பவுணிற்கு) விற்கப்பட்டதாகவும் வாங்கப்பட்டபோது சிறியவளாக இருந்ததால் வளர்ந்தபின் அவர்களது மகனைத் தான் திருமணம் செய்யவேண்டுமெனக் கூறப்பட்டதாகவும் கூறினாள். நல்லவேளையாகத் தான் மிகவும் சிறியவளாக இருந்ததால் தப்பித்ததாகவும் வயது கூடியவளாக இருந்திருந்தால் தற்போது திருமணம் முடித்துவைக்கப்பட்டிருப்பாள் எனவும் கூறினாள்.
பர்மாவின் பெரும்பாலான பெண்களிற்கு நல்லதொரு வாழ்க்கையோ முடிவோ கிடைப்பதில்லை. முடிவில் இவர்கள் தற்கொலையைத்தான் மேற்கொள்கின்றார்கள். வருடாந்தம் பர்மாவிலிருந்து சீனாவிற்கு பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடத்திச்செல்லப்படுகின்றார்கள். சீனாவில் 30 வருடங்களாக நிலவும் 1 குழந்தைக் கொள்கையினால் அங்கு ஆண்பிள்ளைகளே கூடுதலாகப் பிறப்பதால் பால்ரீதியான சமநிலை அங்கு இல்லாமற்போயிருந்தது. 120 ஆண்களுக்கு 100 பெண்களே உள்ளனர். இது 2020 இல் 24 மில்லியன் ஆண்களுக்கு மனைவியரைப் பெறமுடியாத நிலை ஏற்படுமென சீன சமூகவிஞ்ஞான அமைப்புக் கூறியுள்ளது. உலகிலேயே மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவும் உணவுப்பற்றாக்குறை காணப்படுவதாலும் பெண்களை சீனாவிற்கு இலகுவாகக் கடத்திச்செல்லக்கூடிய நிலை இங்கு காணப்படுகின்றது. இவ்வாறு கொண்டுசெல்லப்படும் பெண்களின் விலை 6000 இலிருந்து 40,000 யுனான் (560-3750பவுண்) வரையும் அவர்களின் தோற்றத்தைப் பொறுத்துக் காணப்படுகின்றது. யுனான் மாகாணத்தில் பணிபுரியும் ஒரு கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கையின் தலைவர் ஆண்கள் ஒரு நலமான, இளவயதான, குழந்தைகளை உருவாக்கக்கூடிய பெண்களையே விரும்புகின்றார்களென்றும் இவர்கள் பெண்களை ஒரு பிள்ளைகளை உருவாக்கும் இயந்திரமாகவே நடத்துகின்றனர் என்றும் கூறினார்.
சீனாவுக்கு அண்டை நாடுகளிலிருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
சீனாவில் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்விளைவாக அங்கு ஆண், பெண் பாலின விகிதாசாரத்தில் மிகப் பெரும் ஏற்றத்தாழ்வு தோன்றியுள்ளது. 100 பெண்களுக்கு 118 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதாசாரம் அமைந்துள்ளது. பெண்களின் விகிதம் குறைந்துவிட்டதால், திருமணத்துக்கு பெண்கள் கிடைக்காமல் ஆண்கள் தவிக்கின்றனர். இதனால் சீனாவின் அண்டை நாடுகளான மியான்மர், லாவோஸ், வியத்நாம் ஆகிய நாடுகளிலிருந்து பெண்கள் அதிகளவில் கடத்தி வரப்படுகின்றனர்என சீன பாதுகாப்புத்தறை தெரிவித்துள்ளது. சீன நாணய மதிப்பில் 20,000 யுவானிலிருந்து 50,000 யுவான் வரை இப்பெண்கள் விற்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் இந்தக் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு சீன எல்லையில் பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets