2024 க்கு பின் உலகம் இந்தியர்கள் வசமே ஏன் ? ஆனால் சினா ?
ஞாயிறு, 18 டிசம்பர், 2011
உலக மக்கள் அனைவரையும் காக்கும் பொறுப்பு, 2024 க்கு பின் இந்தியர்கள் வசமே வரும்,'' என, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் கூறினார். ஒருவர் நல்ல விஞ்ஞானியாக வருவது எளிது. நல்ல மனிதனாக வருவது கடினம். தற்போதைய சூழலில் நாடு வளர்ச்சி பெற அறிவியலுக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியல் தொழில்நுட்பம் இன்றி முன்னேற்றம் என்பது சாத்தியமே இல்லை. சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட அறிவியல் தேவைப்படுகிறது.
அடுத்து வரும் ஐந்தாண்டு திட்டத்தில் மாணவர்கள் ,கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் பி.ஹச்.டி. , ல் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் மார்க் எடுத்தால், 87 ஆயிரம் வீதம் ஆயிரம்பேருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளன. இது தவிர, பிஎச்.டி. ,முடித்த பிறகு அவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் உள்ள உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை கொடுத்து ,5 வருடம் ஆராய்ச்சி செய்வதற்கான செலவு நிதியும் வழங்கப்படும். இதை அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் 30 லட்சம் பேருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலக மக்கள் தொகையை ஆராய்ச்சி செய்து பார்த்ததில், இந்தியாவிற்கு ஒரு தனித்தன்மை உள்ளது. 54 சதவீத இந்தியர்கள் 34 வயதுக்கு கீழ்பட்டவர்களாக உள்ளனர். இதன்படி பார்த்தால்,"" 2024 க்கு பிறகு உலக மக்கள் அனைவரையும் காக்கும் பொறுப்பு இந்தியர்கள் வசமே வரும்'' என, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதற்கு மாணவர்கள் தற்போதே கடுமையாக உழைக்க வேண்டும். எந்த விஷயத்திலும் முற்போக்கான செயல்பாடுகள் வேண்டும். எண்ணங்களில் எழுச்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்,என்றார்.
சினாவில் பெண்கள் இறக்குமதி!
சினாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ளது. எனவே, அந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிகின்றனர். பெண் குழந்தையாக இருந்தால் அதை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. எனவே, திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் லட்சக்கணக்கான சீன இளைஞர்கள் தவித்து வருகின்றனர். எனவே, இக்குறையை போக்க தங்களது பக்கத்து நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் வடகொரியாவில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது. முதலில் 36 ஆயிரம் மணப்பெண்கள் பக்கத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளனர். தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் ஆண்களை விட 13 சதவீதம் பெண்கள் குறைவாக உள்ளனர்.
சீனாவுக்குள் மணப்பெண்களாக அனுப்பும் பணியை பௌத்த மத நாடாகவும் இராணுவ சர்வாதிகாரமிக்க நாடாகவும் உள்ள பர்மா மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் பெண்பிள்ளைகளின் வீதம் குறைவென்பதால் அங்குள்ள ஆண்கள் பர்மாவிலிருந்து பெண்களை விலைக்கு வாங்கிக் கட்டாயமாகத் திருமண பந்தத்திற்குள் திணிக்கின்றனர்.
அபா எனும் சிறுமிக்கு 12 வயதுதான். சீன எல்லையைக் கடந்து யுனான் மாகாணத்திற்குள் சென்றபோது தான் வீட்டிலிருந்து பிரிந்துவந்திருப்பதாக நினைத்திருந்தாள். ஏனைய பெண்களைப் போலவே சில வருடங்களின் பின்னர்தான் இவள் தனது குடும்பத்தினரை மீண்டும் சந்தித்திருந்தாள். சீனாவில் இருந்தபோது இவளுக்குத் தொடர்ச்சியான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன. குடும்பத்துடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அத்துடன் அவளை வாங்கிய குடும்பத்தின் மகனையே அவள் திருமணம் செய்யவேண்டியிருந்ததையும் உணர்ந்தாள். தான் 20,000 யுனானிற்கு (1880 பவுணிற்கு) விற்கப்பட்டதாகவும் வாங்கப்பட்டபோது சிறியவளாக இருந்ததால் வளர்ந்தபின் அவர்களது மகனைத் தான் திருமணம் செய்யவேண்டுமெனக் கூறப்பட்டதாகவும் கூறினாள். நல்லவேளையாகத் தான் மிகவும் சிறியவளாக இருந்ததால் தப்பித்ததாகவும் வயது கூடியவளாக இருந்திருந்தால் தற்போது திருமணம் முடித்துவைக்கப்பட்டிருப்பாள் எனவும் கூறினாள்.
பர்மாவின் பெரும்பாலான பெண்களிற்கு நல்லதொரு வாழ்க்கையோ முடிவோ கிடைப்பதில்லை. முடிவில் இவர்கள் தற்கொலையைத்தான் மேற்கொள்கின்றார்கள். வருடாந்தம் பர்மாவிலிருந்து சீனாவிற்கு பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடத்திச்செல்லப்படுகின்றார்கள். சீனாவில் 30 வருடங்களாக நிலவும் 1 குழந்தைக் கொள்கையினால் அங்கு ஆண்பிள்ளைகளே கூடுதலாகப் பிறப்பதால் பால்ரீதியான சமநிலை அங்கு இல்லாமற்போயிருந்தது. 120 ஆண்களுக்கு 100 பெண்களே உள்ளனர். இது 2020 இல் 24 மில்லியன் ஆண்களுக்கு மனைவியரைப் பெறமுடியாத நிலை ஏற்படுமென சீன சமூகவிஞ்ஞான அமைப்புக் கூறியுள்ளது. உலகிலேயே மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகவும் உணவுப்பற்றாக்குறை காணப்படுவதாலும் பெண்களை சீனாவிற்கு இலகுவாகக் கடத்திச்செல்லக்கூடிய நிலை இங்கு காணப்படுகின்றது. இவ்வாறு கொண்டுசெல்லப்படும் பெண்களின் விலை 6000 இலிருந்து 40,000 யுனான் (560-3750பவுண்) வரையும் அவர்களின் தோற்றத்தைப் பொறுத்துக் காணப்படுகின்றது. யுனான் மாகாணத்தில் பணிபுரியும் ஒரு கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கையின் தலைவர் ஆண்கள் ஒரு நலமான, இளவயதான, குழந்தைகளை உருவாக்கக்கூடிய பெண்களையே விரும்புகின்றார்களென்றும் இவர்கள் பெண்களை ஒரு பிள்ளைகளை உருவாக்கும் இயந்திரமாகவே நடத்துகின்றனர் என்றும் கூறினார்.
சீனாவுக்கு அண்டை நாடுகளிலிருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
சீனாவில் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்விளைவாக அங்கு ஆண், பெண் பாலின விகிதாசாரத்தில் மிகப் பெரும் ஏற்றத்தாழ்வு தோன்றியுள்ளது. 100 பெண்களுக்கு 118 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதாசாரம் அமைந்துள்ளது. பெண்களின் விகிதம் குறைந்துவிட்டதால், திருமணத்துக்கு பெண்கள் கிடைக்காமல் ஆண்கள் தவிக்கின்றனர். இதனால் சீனாவின் அண்டை நாடுகளான மியான்மர், லாவோஸ், வியத்நாம் ஆகிய நாடுகளிலிருந்து பெண்கள் அதிகளவில் கடத்தி வரப்படுகின்றனர்என சீன பாதுகாப்புத்தறை தெரிவித்துள்ளது. சீன நாணய மதிப்பில் 20,000 யுவானிலிருந்து 50,000 யுவான் வரை இப்பெண்கள் விற்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் இந்தக் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு சீன எல்லையில் பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.