உங்கள் வருகைக்கு நன்றி

அதிக செலவில்லாமல் அருமையான வருமானம் !

சனி, 17 டிசம்பர், 2011


உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள, அகர் மரம் வளர்ப்பு குறித்து கூறும் தர்மேந்திரா: என் சொந்த ஊர், கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரையாக, விவசாயம் தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று, விவசாயம் சார்ந்த புதிய உத்திகளையும், தொழில்நுட்பங்களையும், புது ரகச் செடிகளையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி ஒருமுறை இந்தோனேசியாவிற்குச் சென்ற போது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர், அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். அதை பயிரிட எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு, முதலில், குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து, எங்கள் சொந்த எஸ்டேட்டில் பயிரிட்டேன். செலவில்லாமலேயே, நல்ல வருமானம் கிடைத்தது. சந்தன மரம் 20 ஆண்டுகளில் கொடுக்கும் வருமானத்தை, அகர் மரம், 10 ஆண்டிற்குள் கொடுத்து விடுகிறது. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது அகர் மரம். சந்தன மரத்தை விட, 10 மடங்கு சந்தை மதிப்பு கொண்டது. இன்றைய சந்தை விலை நிலவரப்படி, ஒரு கிலோ அகர் மரத்தின் விலை, தரத்தைப் பொறுத்து, 50 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையும், ஒரு கிலோ அகர் எண்ணெயின் விலை, 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் வரைக்கும், அதன் தரத்தைப் பொறுத்து விற்கப்படுகிறது. இந்த மரத்திலிருந்து, 500 வகையான வாசனை திரவியங்கள், அகர்பத்திகள், விலையுயர்ந்த சோப்புகள் மற்றும் பல வகையான பொருட்களும், மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. அகர் மரம் பயிரிட்ட பின், அறுவடை வரையிலும், விவசாயிகளுக்கு எவ்விதச் செலவையும் கொடுப்பதில்லை. ஆண்டிற்கு, 125 - 750 செ.மீ., வரையிலான மழையளவும், கடல் மட்டத்திலிருந்து, 300 முதல், 1,500 மீட்டர்கள் உயரமுள்ளதுமான பிரதேசங்கள் தான், அகர் மர வளர்ப்பிற்கு ஏற்றவை. தொடர்பிற்கு: தர்மேந்திரா: 94484 34561

அகர் மரத்தின் மையப்பகுதியில் சந்தன மரத்தில் இருப்பதுபோல வாசனை மிகுந்த வைரப்பகுதி உருவாகும். இந்த வைரப்பகுதியை அரைத்து அகர் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இம்மரங்களை தென்னை, பாக்கு, மா, மலைவேம்பு, சந்தனம், சவுக்கு மற்றும் பல வகையான தோப்புகளிலும் கலந்து பயிர் செய்யலாம். பத்து ஆண்டுகள் வளர்ந்த ஒரு அகர் மரம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யலாம்.
சந்தன மரங்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளர்க்க சுதந்திரம் உண்டு. அறுவடை செய்திட வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். வறண்ட பாறை நிலங்களில் கூட வளமுடன் வளர்ந்து பலகோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் தெய்வீக மரமாகும். வீடுகள், தோட்டங்கள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் அதிக பராமரிப்பு இன்றி வளர்க்கலாம். வளர்க்க அனுமதி பெற வேண்டியது இல்லை. அச்ச மின்றி வளர்க்கலாம். ஏக்கருக்கு 450 மரங்கள் வளர்க்கலாம். பதினைந்து ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு சந்தன மரம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யலாம். மலைவேம்பு, குமிழ்தேக்கு, ஆஸ்திரேலியாவின் தேக்கு ஆகிய மரங்கள் வேகமாகவும் உயரமாகவும் வளர்ந்து பயன்தரக் கூடியவை. ஐந்து அடி இடைவெளி யில் சந்தனம் உள்ளிட்ட அனைத்துவகை மரங்களையும் நடவு செய்யலாம். ஏக்கருக்கு 900 மரங்கள் வளர்க்கலாம். மேல் குறிப்பிட்ட அகர், சந்தனம், மலைவேம்பு, குமிழ்தேக்கு, ஆஸ்திரேலியாவின் தேக்கு, தென்னை, மா, சப்போட்டா, நெல்லி, பேரிச்சை மற்றும் பல வகையான மரங்களை தேவையான இடைவெளியில் கலந்து நடவு செய்தபின் வாழை, மஞ்சள், வெங்காயம், கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறி பயிர்களையும், வேலிமசால் மற்றும் தீவனப்புல் வகைகள் என தேவையானவற்றை ஊடுபயிர் செய்வதன்மூலம் குறுகியகால வருமானமும், மரங்களின்மூலம் நீண்டகால வருமானமும் மிகப்பெரிய அளவில் பெறமுடியும். அதிக நிலப்பரப்பு உள்ள விவசாயிகளும் நிறுவனங்களும் சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த நீரினை பயன்படுத்தி மரங்களை வளர்ப்பதன்மூலம் பொருளாதார மேம்பாட்டையும் சுற்றுச்சூழல் இயற்கை வள மேம்பாட்டையும் உருவாக்கலாம். கலாமின் வல்லரசுக்கனவை நனவாக்கலாம்.
எனவே இனி சந்திலும் பொந்திலும் சந்தனம் வளர்ப்போம். முடிந்தால் சந்திர மண்டலத்திலும் சந்தனம் வளர்ப்போம். சும்மா இருப்பது சுகமே அல்ல. சுகமாய் இருக்க சந்தன மரமாய் வளர்த்திடுவோம் சுகவனமாய் அமைத்திடுவோம் இந்தியத் திருநிலத்தை. இதுவே நமதினிய சுப வார்த்தை. இனி இதற்கே நமதுயிர் வாழ்க்கை என செயல்படுவோம். வளம் குவிப்போம். அசோலா என்னும் அற்புத கால்நடை தீவன விதைகள் மற்றும் அனைத்து வகை மரங்கள் வளர்ப்பு குறித்த விரிவான ஆலோசனைகளும் கன்றுகளும் வன மரவிதைகளும் ஆய்வுப் பண்ணை முகவரியில் பெறலாம். ஏ.சந்தனமோகன், நிறுவனர், பிரபஞ்ச வளர்ச்சி கழகம், சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை, கந்தம்பாளையம், காமநாயக்கன்பாளையம், சூலூர், கோயம்புத்தூர்-641658.

ஏ.சந்தனமோகன், 98429 30674. 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets