உங்கள் வருகைக்கு நன்றி

மூட்டு வளியும், சிகிச்சை முறையும்

வெள்ளி, 9 டிசம்பர், 2011

முதிய வயதில் ஒருவருக்கு ஏற்படும் பெரும் பிரச்சினை... மூட்டுவலி. கீல்வாதம் அல்லது மூட்டு அலற்சி என்றும் இது அழைக்கப்படுகிறது. முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானம், அதிகப்படியான உடல் எடை போன்ற காரணங்களால் ஏற்படும் மூட்டுவலியை முழுமையாக குணப்படுத்த முடியாது.

தொடர் சிகிச்சையின் மூலம் அதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம். ஓய்வெடுத்தல், எடை குறைத்தல், உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரணி சிகிச்சைகள்தான் இதற்கான சிகிச்சை முறைகள். சரி,

ஒருவருக்கு மூட்டு வலி எப்படி ஏற்படுகிறது?

உடலில் உள்ள எலும்புகள் இணைகின்ற இடங்களை `மூட்டு' என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மூட்டின் இணைப்புகளையும் மூடி இருக்கும் ரப்பர் போன்ற அமைப்பு குருத்தெலும்பு எனப்படும். இது `குஷன்' ஆகவும், அதிர்ச்சியைத் தாங்கும் அமைப்பாகவும் செயல்படுகிறது. அதனால், எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கின்றது.

இந்த குருத்தெலும்பு ஸினோவியல் என்னும் பசை போன்ற திரவத்தால் மசகுத் தன்மை அடைகிறது. இந்த திரவம் மூட்டுக்கள் இதமாக இயங்க உதவுகிறது. மூட்டுவலியின்போது, மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பில் தேய்வு ஏற்படுகிறது. அப்போது குருத்தெலும்பில் உலர்ந்த நிலை ஏற்படுவதால், அதன் காரணமாக எலும்பு மூட்டுகளில் வலியும், வீக்கமும் உண்டாகிறது.

எலும்பு மூட்டு இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள், கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது, தசைநார் பாதித்தல், கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை போன்று வீக்கம் காணப்படுதல், கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது, எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல், சுளுக்கு, மூட்டுகளை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள், மூட்டுகளில் நோய் தொற்றுவது, மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் ரத்த கசிவு ஏற்படுவது, இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள்... இதுபோன்ற காரணங்களால் ஒருவருக்கு மூட்டுவலி ஏற்படும்.

வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து ஓய்வெடுத்து வந்தால் அதிகப்படியான மூட்டுவலியை குறைக்கலாம். மூட்டுவலியை கட்டுப்படுத்த மேலும் சில வழிமுறைகளும் உள்ளன. அவை...

* வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளுக்குப் பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

* கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம்.

* ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தை செலுத்தலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்க உதவியாக இருக்கும். இந்த வகை பாண்டேஜ்களை மருந்துக் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

* மூட்டுகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து தூங்கலாம். மூட்டுவலியை கட்டுப்படுத்த உடற்பயிற்சி மற்றும் ஓய்வு இரண்டும் முக்கிய அம்சங்கள். சரியான முறையில் இந்த இரண்டையும் செயல்படுத்தினால் மூட்டுகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

டாக்டர் அல்லது உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை மற்றும் கண்காணிப்பின் கீழ் உடற்பயிற்சியை செய்து வரவேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போலவே, தொடர்ந்து நன்கு ஓய்வு எடுப்பதும் அவசியம். இது உங்கள் தசைகளுக்கும் ஓய்வு தருகிறது.

அதோடு, உணவு முறையிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்து மற்றும் அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

இல்லையென்றால், இவற்றை மிக குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முக்கியமாக உங்கள் உணவில் தானியங்கள், பருப்பு வகைகள், புத்தம்புது பழங்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெறட்டும்.

மூட்டு வலி, முதுகு வலிக்கு புதிய மானுவல் சிகிச்சை

இன்றைய காலகட்டத்தில் உடலில் உண்டாகும் வலிக்கான காரணத்தைக் கண்டறிய நேரமில்லாமல் வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்தி நாம் தாற்காலிகத் தீர்வைத் தேடுகிறோம்.
இதனால் நிரந்தர வலி வர நாமே காரணமாகின்றோம். மூட்டு எலும்புத் தேய்மானம், தசைநார்கள் பலவீனம் வருவதற்கு மனச் சோர்வு, உடல் சோர்வு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மூட்டுத் தேய்மானம் காரணமாக முதுகுத் தண்டின் நடுவில் உள்ள வட்ட வடிவமான ஜவ்வு வெளியே வந்தும், தசை நார்கள் கிழிந்தும் தீராத வலி ஏற்படுகிறது. இதற்கு செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகூட நிரந்தரமான தீர்வல்ல என்கிறார்கள்.
ஆனால் அயல்நாடுகளில் பிரபலமாக உள்ள "மானுவல் தெரப்பி' எனும் சிகிச்சையை எளிதாக செய்து கொள்ளலாம். வெறும் கைகளின் துணைகொண்டு தீர்வு காணமுடியும்.
எக்ஸ்-ரே, ஸ்கேன் மூலம் வலிக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து வலுவிழந்த தசை நார்களை வலுப்படுத்ததவும், வெளியே வந்துவட்ட ஜவ்வை அதன் சாதாரண நிலைக்குக் கொண்டு சேர்க்கவும், எங்கள் கைகளைக் கொண்டு குறிப்பிட்ட இடங்களில் முறைப்படுத்தி சிகிச்சை செய்யப்படுகிறது.
நோயாளிகள் தாங்களே செய்து கொள்ளுமாறு, சில எளிய பயிற்சிகளும் உள்ளன. நோயாளிகளின் வலியைப் பொருத்தே, சிகிச்சையின் நேரமும், கால அவகாசமும் நிர்ணயிக்கப்படுகின்றன.
மானுவல் தெரப்பி' சிகிச்சை முறை பிசியோதெரப்பி சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டது. எந்தவித மருந்துகளையும் கொடுப்பதில்லை. எளிமையான மிகக் குறைந்த செலவிலான இந்த சிகிச்சை முறையின் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு,
உயர் ரத்த அழுத்த நோய்-சர்க்கரை நோய் போன்ற நோய்களிலிருந்து குணம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு...
டாக்டர் வேம்பன் சிவகுமார்,
ஸ்பைன் அண்ட் பெயின் கேர் கிளினிக்',
சென்னை.
செல்பேசி: 9840303156, 9600190001

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets