உங்கள் வருகைக்கு நன்றி

இருதய நோய்கள் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் ஏன்

வியாழன், 1 டிசம்பர், 2011


இந்திய மக்கள் தொகையில் 10 விழுக்காடு நபர்களுக்கு இருதய நோய் உள்ளதாக ஹைதராபாதில் நடைபெற்ற இருதய நோய் தடுப்பு குறித்த கருத்தரங்கில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.சுமார் 4 விழுக்காடு கிராமப்புற மக்களுக்கு நெஞ்சுப்பை தசைகளுக்கு குருதி ஓட்டத்தை வழங்கும் நாளத்தில் நோய் (Coronary Artery Disease) இருப்பதாகவும் அந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2016ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 6 கோடியே 80 லட்சம் பேர் இருதய ரத்த நாள நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்று இந்த கருத்தரங்கில் கணிக்கப்பட்டுள்ளது.மேலும் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு ஆகிய நோய்களுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உடல் எடை சிறிய அளவில் அதிகரித்தாலும், மன அழுத்தம் மற்றும் புகைப் பழக்கம் ஆகியவற்றாலும் இருதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று அந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இருதய ரத்த நாள நோய்கள் மற்ற பிரதேசங்களைக் காட்டிலும் தெற்காசிய பகுதி மக்களை பாதுக்கும் வாய்ப்பு 4 மடங்கு அதிகம் என்று இந்த 2 நாள் கருத்தரங்கின் முதல் அமர்வில் விவாதிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

சத்தம் குறைக்க வேண்டும்....

கார் பஸ்சின் ஹாரன் ஒலி, சைரன், அங்குமிங்கும் இரைந்து கொண்டே செல்லும் லாரிகள், டிரக்குகள், தொழிற்சாலையிலிருந்து வரும் கடுமையான சத்தங்கள், வெடி வெடிக்கும் சத்தங்கள் போன்றவை, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பை அதிகரிக்கும் என ஒரு டென்மார்க் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த ஆராய்ச்சியில் 51,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர். பெரும் சத்தம் உடலில் சுரக்கும் சில வேதிப்பொருள்கள் மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் Steroid அளவை அதிகரிப்பதால் மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு அதிகரிக்கிறது.

நல்ல தூக்கம் வேண்டும்....

ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது இரவில் தூங்க வேண்டும், ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மற்றவரைக்காட்டிலும் 48 சதவீதம் அதிகமாக மாரடைப்பு, 15 சதவீதம் அதிகமாக பாரிச வாதம் ஏற்படுகிறது. கொஞ்சமாக தூங்குபவர்கள் அதிக பசியினால் அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, உடல் பருமன், கொழுப்பு அதிகரிக்கும். அதே நேரத்தில் அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கும் மேல் தூங்குபவர்களுக்கு மற்றவரை காட்டிலும் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சாத்தியக்கூறு அதிகம்.

"டயட் சோடா'' தவிர்க்கவேண்டும்.......

சமீபத்தில் கலிபோர்னியாவில் செய்த ஆராய்ச்சியில் ஒன்று டயட் சோடா குடிப்பவர்களுக்கு மற்றவரைக்காட்டிலும் 48 சதவீதம் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு  என்று நிறைய கறுப்பு திராட்சை வயலட் நிற கத்தரிக்காய், முட்டைக்கோஸ், நாகப் பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு ரத்தக்கொதிப்பு வரும் வாய்ப்பு குறைவு. 1,34,000 பெண்கள், 47 ஆண்கள் உணவு பழக்கங்களை 14 வருடம் சோதித்து ஆராய்ந்ததில், மேற்குறிப்பிட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, ஆக்ஸிகர ணத்தை குறைக்கக் கூடிய பொருளான (antioxidant) "ஆத்ராசீனியஸ்' என்ற பொருள் இதயநோய், ரத்தக்கொதிப்பு வருவதை தடுப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு சாக்லேட்.....

இதிலுள்ள கோகோ ரத்தக்கொதிப்பை குறைக்கும். ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் காக்கும். ரத்தம் உறைவதை குறைத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கும். குறிப்பாக, குறைந்த அளவில் அதாவது ஒரு நாளுக்கு 6.7 கிராம் அளவில் கறுப்பு சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு ரத்தக்குழாயை பாதிக்கும். "CRP'' என்ற புரதப் பொருள் ரத்தத்தில் குறையும். இந்த "CRP'' மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் நோயை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. சாக்லேட்டில் உள்ள பிளாசனாய்டு என்ற பொருள். ரத்தக் குழாயின் உள்ளே உள்ள செல்களை பாதுகாக்கும் மற்றும் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கக்கூடிய ACE என்ற வேதிப்பொருளின் செயல்பாட்டை குறைத்து ரத்தக்கொதிப்பை குறைக்கும்.


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets