உங்கள் வருகைக்கு நன்றி

செயற்கை சிசேரியன்

செவ்வாய், 6 டிசம்பர், 2011


சிசேரியன் என்றால் கர்ப்பப் பை பாதையில் குழந்தை பிரசவிக்க முடியாத நிலையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை தான் சிசேரியன். 

மு‌ற்கால‌த்‌தி‌ல் எ‌த்தனையோ க‌ர்‌ப்‌பி‌ணிக‌ள், ‌பிரசவ நேர‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சி‌க்க‌ல்களா‌ல் உ‌யி‌ரிழ‌‌க்கு‌ம் அவல‌ம் இரு‌ந்தது. ஆனா‌ல், இ‌ந்த ‌சிசே‌ரிய‌ன் எ‌ன்ற வர‌‌ப்‌பிரசாத‌த்தா‌ல் தா‌‌ய்மா‌ர்க‌ளி‌ன் தலை எழு‌த்து‌க்க‌ள் மா‌ற்‌றி அமை‌க்க‌ப்ப‌ட்டன.

ஆனா‌ல் இ‌ந்த ‌சிசே‌ரிய‌ன் முறையே த‌ற்போது பல தா‌ய்மா‌ர்க‌ளி‌ன் க‌ரு‌ப்பையை கூறுபோட பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌வது வேதனை‌க்கு‌ரியது.

அதை‌ப்ப‌ற்‌றியதுதா‌ன் இ‌ந்த செய‌ற்கை ‌சிசே‌ரிய‌ன். ‌சிசே‌ரியனே இயற்கை முறை அல்லாமல் செயற்கைதான், இதில் என்ன செயற்கை சிசேரியன் என்று கேட்கலாம்.

அதாவது, சுகப்பிரசவத்திற்கு வழி இருந்தும் தவறான நோக்கத்துடன் செய்யப்படும் சிசேரியன்களைத்தான் செயற்கை சிசேரியன் என்கிறோம்.

முதலில் கர்ப்பிணிகளின் தரப்பில் இருந்து பார்க்கலாம். மன அள‌வி‌ல் பலவீனமாக இருக்கும் பெண்கள், அவர்களது உறவினர்கள் சொல்வதைக் கேட்டு கேட்டு பிரசவத்தின் போது பயங்கரமான வலி இருக்கும் என்பதை நினைத்து பயப்படுவார்கள்.

அதன் காரணமாக, மருத்துவர்களிடம் சுகப்பிரசவத்திற்கு காத்திராமல், சிசேரியன் செய்துவிடச் சொல்லும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அது இல்லாமல், சில குடும்பத்தினர் புத்திசாலித்தனமாக(?!) செய்வதாக நினைத்துக் கொண்டு ஜோதிடர்களை ஆலோசித்து நல்ல நாள், கிழமை பார்த்து அந்த தேதியில் குழந்தை பிறந்தால் நல்லது என்று மருத்துவர்களிடம் அந்த நாளில் சிசேரியன் செய்து குழந்தையை பிரசவிக்க விரும்புகின்றனர். இதுவும் இயல்பாக நடந்து கொண்டுதான் உள்ளது.

இன்னும் சொல்வதற்கு முடியாத எத்தனையோ காரணங்கள் உள்ளன. நெருங்கிய உறவினருக்கு திருமணத்திற்காக அதற்கு முன்பே சிசேரியன் செய்வது, சித்திரை, கத்திரியில் குழந்தை பிறக்கும் தேதி வந்தால், அது குடும்பத்திற்கு ஆகாது என்பதால் சித்திரை பிறக்கும் முன்பே சிசேரியன் என்பது போல எத்தனையோ காரணங்களை குடும்பத்தினரே உண்டு பண்ணுகின்றனர்.

இவர்கள் இப்படி என்றால், ஒரு சில மருத்துவமனைகள் தங்களது கட்டட வளர்ச்சிக்காக சிசேரியனை சிறப்பாக செய்கின்றனர்.

எத்தனையோ தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் என்று எழுதிக் கொடுத்துள்ளனர். அவர்கள் அவசரத்திற்கு சென்ற அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் ஆகி தாயும், சேயும் சுகமாக வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
------------------------------------------------------------
என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உறுவாகும் ?" என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இப்படித்தான் செய்வான்" என்று (இறைவன்) கூறினான். 3:40
திருக்குர்ஆன் தமிழாக்கம் ‍ http://www.onlinepj.com/ 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets