உங்கள் வருகைக்கு நன்றி

கண்களை சுற்றி மஞ்சள் வளையம், ஆபத்தான் அறிகுறி.

புதன், 21 டிசம்பர், 2011


கண்களை சுற்றி மஞ்சள் வளையம் இருந்தால் அது இதயநோய் அறிகுறியாக இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த பாதிப்புக்கு ஸேந்தலாஸ்த்மாஎன்று பெயராம். இதன் பாதிப்பு மற்றும் தன்மையை பொறுத்து நோயின் தீவிரம் இருக்கும் என்கிறது ஆராய்ச்சி. கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆனி டைபஜாயர்க் தலைமையில் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 1976 முதல் 2009-ம் ஆண்டு வரை நடந்த இந்த நீ....ண்ட ஆய்வில் 20 முதல் 93 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சுமார் 13 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர். 

மஞ்சள் வளையம் மற்றும் கண்ணின் பாப்பாவில் புள்ளிகள் இருந்த ஏராளமானோர் இதய பாதிப்பின் பிடியில் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய சிகிச்சை மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைத்தது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியது: ஸேந்தலாஸ்த்மா’... ஆண், பெண் என பாலின வேறுபாடின்றி எல்லாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ள குறிப்பிட்ட ஒருவகை கொழுப்பு செல்களே இத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது ஒரு சிறிய புள்ளியாக கண்ணில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால் வலி, உறுத்தல் எதுவும் இருக்காது. உடனடியாக பார்வை பாதிப்பும் ஏற்பட்டு விடாது. 

இத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டால் பெரும்பாலானவர்கள் தோல் நோய் நிபுணர்களைத்தான் அணுகுவார்கள். ஆனால், இதற்கு கண் டாக்டரைத்தான் அணுக வேண்டும். பொதுவாக 70 முதல் 79 வயது வரை உள்ளவர்களுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்படும். ஆனால், வயது வித்தியாசமின்றி ஸேந்தலாஸ்த்மாபாதிப்பு இருந்தால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியங்கள் ஆண்களுக்கு 12 சதவீதமும், பெண்களுக்கு 8 சதவீதமும் அதிகரிக்கும். இந்நோய் பாதிப்புள்ளவர்களுக்கு வாழ்நாளில் சுமார் 10 ஆண்டுகள் வரை ஆயுள் குறையுமாம். 

பொதுவாக 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இத்தகைய நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. உடலில் அதிக கொழுப்பு சத்து உள்ளவர்களை ஸேந்தலாஸ்த்மாஅதிகம் தாக்கக்கூடும். கண்களை சுற்றியோ அல்லது கண்களுக்குள்ளோ மஞ்சள் நிற புள்ளிகள் இருப்பவர்கள் ரத்த கொழுப்புஅளவுகளை முறைப்படி பரிசோதித்து கொள்ள வேண்டும். 

இந்தப் பரிசோதனையில் பாதிப்பின் அறிகுறி தெரிந்தால் ஆரம்ப நிலையில் உரிய மருந்துகள் மூலம் நிவாரணம் எளிதாகும். புள்ளிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. சிலருக்கு இந்தப் புள்ளிகள் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். அவற்றால் எந்த பாதிப்பும் இருக்காது. உடல் பருமன், உயர் ரத்தஅழுத்தம், உடலில் அதிக கொழுப்பு, புகைப்பழக்கம் போன்றவற்றால் ஏற்படும் இந்த பாதிப்பை உரிய மருத்துவ சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets