ஸ்பைருலினா பாசி வளர்ப்பு
செவ்வாய், 27 டிசம்பர், 2011
வேகமாக பரவி வரக் காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். வைட்டமின் பி12 என்ற சத்து இதில் உள்ளது.ரத்தசோகையை நீக்கும். மாத்திரை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாசியைத் தூள் செய்து எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குளிர்பானம் போலவும் குடிக்கலாம். இந்த பாசியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறன் கூடும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக இந்தப்பாசி பயன்படுகிறது. மாட்டுத்தீவனம் தயாரிக்கும்போது இந்தபாசியைக் கலந்து தயாரித்தால் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
விரைவில் பருவத்துக்கு வரும். பால் கொடுக்கும் திறனும் அதிகரிக்கும். மீன்களுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் ஸ்பைருலினா பாசியைக் கலந்தால் அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும். அலங்கார மீன்களுக்கு கொடுத்தால் அவை பளபளவென இருக்கும். 60 முதல் 65 சதம் புரதச்சத்து உள்ள பாசி. கிலோ ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விலைபோகும்.
சமீபகாலம் வரை கால்நடைத் தீவனம் தயாரிப்பவர்கள் சீனாவில் இருந்துதான் இந்த பாசியை இறக்குமதி செய்துவந்தார்கள். தற்சமயம் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய உற்பத்திக்கு மதிப்பு கூடி இருக்கிறது. ஸ்பைருலினா பாசி விற்பனை குறித்து மேலும்
தகவல்பெற தொடர்பு முகவரி:
டாக்டர் கி.ராவணேஸ்வரன், உதவி பேராசிரியர் மற்றும் "பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை காலனி, சென்னை-5. தொலைபேசி: 044-2555 6750'.