உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகளை அளவுக்கு மீறி தொந்தரவு செய்தால்

புதன், 21 டிசம்பர், 2011

இந்த காய் சாப்பிடு.. அந்த காய் சாப்பிடு..’’ என்று குழந்தைகளை அளவுக்கு மீறி தொந்தரவு செய்தால் அவர்கள் சாப்பிடும் அளவு குறைந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சாக்லேட், ஐஸ்கிரீம்.. எவ்வளவு கொடுத்தாலும் பிள்ளைகள் சாப்பிடுவார்கள். சோறு என்றாலே எரிச்சலாவார்கள். நாலு வாய் சோற்றை அரை மணி நேரமாக சாப்பிடுவது இதன் வெளிப்பாடு. 

இதுபற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அப்பலேச்சியன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர். 4 வயது குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆராய்ச்சி முடிவில் கூறப்பட்டிருப்பதாவது: அதிக சத்துள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டு. ஆனால், ‘இதை சாப்பிடு. 

அதை சாப்பிடு. இதில் நிறைய சத்து இருக்கிறதுஎன்று பெற்றோர் திரும்ப திரும்ப சொல்லும்போது, அந்த உணவு மீது அவர்களுக்கு வெறுப்பு வருகிறது. அதை தவிர்க்க ஆரம்பிக்கின்றனர். ஒரு காய், பழம் அல்லது உணவு பொருளை குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிடு.. சாப்பிடுஎன்று பல முறை கட்டாயப்படுத்துவதைவிட, அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது. இதில் ஏதோ சத்து அல்லது ருசி இருப்பது போல தெரிகிறது. சாப்பிட்டுத்தான் பார்க்கலாமேஎன்ற முடிவுக்கு வந்து அவர்களாகவே சாப்பிடுவார்கள்.
இவ்வாறு ஆய்வு ரிப்போர்ட் கூறுகிறது.

பீஃப் (மாட்டு இறைச்சி) சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

தொடர்பாக அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலை ஆராய்ச்சியாளர் பென்னி க்ரிஸ் எதர்டன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக, எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வழக்கமான உணவுடன் மிக குறைந்த அளவு கொழுப்பு சத்துள்ள பீஃப் கொடுக்கப்பட்டது. 4 வாரங்களுக்கு பிறகு, அவர்களது கொழுப்பு அளவு 10 சதவீதம் குறைந்து இருந்தது. இதன்மூலம், தினமும் 110 கிராம் முதல் 150 கிராம் வரை பீஃப் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பு கரைகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாட்டு இறைச்சியில் உடலுக்கு தேவையான பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் உள்ளன. மிதமாக எடுத்துக் கொள்வதால் இதயமும் வலுப்பெறுகிறது. இதய நோய்கள் வராமலும் தடுக்க முடியும். இவ்வாறு ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets