கடின உழைப்பு, நடைபயிற்சி செய்துவந்தால் ஏற்படும் பயன்.
சனி, 3 டிசம்பர், 2011
உடற்பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன. கடின உழைப்பும், நடைபயிற்சியும் இலகுவில் நமது உணவு ஜீரணம் ஆகவும், உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன.
மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது.
சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது. நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது.
பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம்.
வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.
நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி ஆபத்து இல்லாப் பயிற்சி எனலாம். நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுநர்கள் தேவை இல்லை.
நடைப்பயிற்சிக்கு தனியான மைதானம், இடம் தேவை இல்லை. நடை நமது வாழ்வின் ஓர் அங்கம். வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனை நுகர முடியும். அனுபவிக்க முடியும். வேறு எந்த உடற்பயிற்சியிலும் நடைபயிற்சியில் உள்ள பயன்கள் இல்லை.
நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும். அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது. அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.
தினமும் 30 நிமிடம் உங்களுக்கு பிடித்த பயிற்சியை செய்ய வேண்டும். ஒரே மூச்சில் செய்ய முடியாவிட்டால் 2-3 முறையாகக் கூட செய்யலாம். மொத்த அளவு குறைந்தது 30 நிமிடம் வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி என்று நாம் தனியாக செய்ய வேண்டியதில்லை. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலேயே அவை அடங்கியுள்ளன. அவற்றில் சில....
* நடத்தல்
* படியேறுதல்
* தாய் சி எனப்படும் சீன உடற்பயிற்சி
* யோகாசனப்பயிற்சி
* மெதுவாக ஓடுதல்
* நடனமாடுதல்
* சைக்கிள் ஓட்டுதல்
* இலகுவான தோட்டவேலைகள்
* இலகுவான விளையாட்டுகள்
தினசரி ½ மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.. இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடம் நடக்கலாம்.
உடற்பயிற்சி உடலுக்கு பயிற்சி அவசியம்தான். ஆனால் அந்தப் பயிற்சியே மிதமிஞ்சிப் போனால் நோயாகவும் மாறக்கூடும். எனவே எப்போதெல்லாம் உடற்பயிற்சி தேவையில்லை என்பதைத் தெரிந்து கொள்வதும் மிகவும் அவசியம்! ‘சின்ன தலைவலி, ஜுரம் அல்லது சளி என்றால் கூட உடற்பயிற்சியை நிறுத்துவிட வேண்டும்.
இதைத்தான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். களைப்பாகவோ டென்ஷனாகவோ உணரும் நேரங்களில் உடற்பயிற்சியை அறவே தவிர்க்க வேண்டும். ரிலாக்ஸாக அமர்ந்து மனதுக்குப்பிடித்த எதையாவது செய்யுங்கள். உடலில் எங்காவது காயம்பட்டால் அந்தக் காயம் பெருங்காயமாகாமல் தடுக்க உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்துங்கள்.
குணமடைந்தபிறகு மீண்டும் ஜிம் போகலாம். வாரம் 5 நாட்கள் என தினம் சுமார் 30 நிமிடங்களுக்கு அல்லது 10,000 அடி நடக்க வேண்டிய அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் எல்லா நாட்களும் செய்தால் இன்னும் நல்லது. சொல்லப் போனால் தினமும் உடற்பயிற்சி செய்தாலே முழுப் பலன்கள் கிடைக்கும்.
நடை பயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 5 கிலோமீட்டர் வரை செல்வதாகும். நான்கு மணிநேரம் நீந்துவதும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்குச் சமமானதே. அல்லது 20 கிலோ மீட்டர் சைக்கிள் மிதிப்பதும் இதற்குச் சமமானதே. நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைபயிற்சியின்போது உடலிலுள்ள எல்லாத் தசைத் தொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். இரத்த சுழற்சியும் உடலின் எல்லாபாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.