குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட்டால அதன் பயன் ?
வியாழன், 1 டிசம்பர், 2011
கர்ப்பப்பையின் வாயில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பில் சென்னை மாநகரம் இந்திய அளவில் முதலிடத்திலும், உலகளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சென்னை எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது போல புற்றுநோயிலும் முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறது.
நகர்ப் புற மக்களிடமே இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயைப் போல் மார்பகப் புற்றுநோயும் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. மமோகிராஃபி என்ற சிகிச்சையின் மூலம் இதைக் குணப்படுத்தலாம்.
அன்றாட வாழ்க்கையில் சீரான உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தல் அவசியம். காலை உணவைத் தவிர்க்கவோ அல்லது காலம் தாழ்த்தியோ சாப்பிடக் கூடாது. காலை உணவைத் தவிர்ப்பதன் மூலம் எடை குறையும் என்ற கருத்து தவறானது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளை அதிக அளவில் சாப்பிடக் கூடாது. தினமும் காலையில் உடற்ப யிற்சி, தியானம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட வேண்டுமாம்.
*******************************************