உங்கள் வருகைக்கு நன்றி

பேப்பர் கவர் தயாரிப்பு தொழில்

செவ்வாய், 27 டிசம்பர், 2011


சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் பேப் பேக்ஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் தனராஜ். அவர் கூறியதாவது: பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன்.

பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. என் அப்பா பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை துவங்கினார். அதன் பிறகு நானும் பேப்பர் கவர் தயாரிக்க துவங்கினேன். பொள்ளாச்சியில் இது போல 13 நிறுவனங்கள் உள்ளன.  கோவையில்கூட இந்தளவு இல்லை. பொள்ளாச்சியில் இயங்கும் பெரும்பாலான பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவை சந்தை இடமாக கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நான் கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை குறி வைத்து உற்பத்தியை துவக்கினேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்று வருகிறேன். படிப்படியாக உற்பத்தி அதிகரித்துள்ளது. 

பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் பிற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம். 


செலவு, வருவாய்

ஒரு நாளில் 200 கிலோ பேப்பர் வீதம் மாதத்தில் 25 நாளில் 5 டன் பேப்பரில் கவர்கள் தயாரிக்கலாம். ஒரு கிலோ பேப்பர் ரூ.29 வீதம் 5 டன்னுக்கு ரூ.1.45 லட்சம், வாடகை ரூ.2500, மின்கட்டணம் ரூ.1000, 3 தொழிலாளர்கள் சம்பளம் ரூ.15 ஆயிரம். இதர செலவுகள் ரூ.5 ஆயிரம் என மாதத்துக்கு ரூ.1.68 லட்சம். கவர்கள் 100 எண்ணிக்கை வீதம் சராசரி விலை:  6 செமீ அகலம், 10 செமீ நீளமுள்ளவை ரூ.30, 7ஜ்12 ரூ.36, 9ஜ்13ரூ.46, 10ஜ்16ரூ.65, 12ஜ்19 ரூ.85, 14ஜ்18ரூ.100, 14ஜ்22ரூ.115, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33 ஆகியவை ரூ.150, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37 ஆகியவை ரூ.230, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39  ரூ.250, 31ஜ்44ரூ.480, 36ஜ்48  ரூ.570க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை விலையோடு, உற்பத்தி செலவை ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 10 சதவீத லாபம் அல்லது மாதம் சராசரியாக ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். கடைகளில் நேரில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தால் கூடுதல் விலைக்கு விற்கலாம். லாபமும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.


கட்டமைப்பு : 20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட ஷெட். இதை 3 பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் இயந்திரம், மற்ற பகுதிகளில் அலுவலகம், ஸ்டோர் ரூம் என பயன்படுத்தலாம். வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். ஒரு எச்பி மின் இணைப்பு (ரூ.2 ஆயிரம்) வேண்டும்.

முதலீடு: பேப்பர் கவர் இயந்திரம் ரூ.2.5 லட்சம், 2 டேபிள் ரூ.8 ஆயிரம், 4 அலுவலக சேர்கள் ரூ.1,000, பசை காய்ச்ச இரும்பு அடுப்பு, அலுமினிய பாத்திரம், பிளாஸ்டிக் வாளி ,  2 மக் உள் ளிட்ட இதர பொருட்கள் ரூ.1000. 

முதலீட்டுக்கு ரூ.2.82 லட்சம் தேவை. (முதல் மாத உற்பத்தி செலவு ரூ.1.68 லட்சம் தனி) 

தேவையான பொருட்கள் : பேப்பர் கவருக்கென பிரவுன் நிற கிராப் பேப்பர் (கிலோ ரூ.29), ரப்பர் பேண்ட் (கிலோ ரூ.350), பசை காய்ச்ச மரவள்ளிக்கிழங்கு மாவு, துத்தம், பிளாஸ்டிக்  கட்டு கயிறு.
கிடைக்கும் இடங்கள்: பேப்பர் கவர் இயந்திரங்கள் பொள்ளாச்சி, கோவை நகரங்களிலும், கிராப் பேப்பர் உடுமலை உள்ளிட்ட பேப்பர் மில்களிலும் கிடைக்கிறது.  

விற்பனை வாய்ப்பு: மருந்து கடையில் சிறிய பேப்பர் கவர்கள்  பயன்படுத்தப்படுகிறது.  பேக்கரி, பேன்சி ஸ்டோர், டெக்ஸ்டைல், லாண்டரி, டெய்லரிங் ஆகியவற்றில் பெரிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. கடைகளுக்கு நேரடியாகவோ, பேப்பர் கவர் மொத்த விற்பனை கடைகளுக்கோ வாடிக்கையாக சப்ளை செய்யலாம்.


தயாரிப்பு முறை

பேப்பர் ரோல் 13.5 செமீ, 15.5, 19.5, 21.5, 25.5, 29.5, 37.5, 45.5, 53.5, 63.5, 73.5 செமீ என பல்வேறு அகலங்களில் கிடைக்கிறது. அதன் மூலம் 10 செமீ நீளம், 6 செமீ அகல கவர் முதல் 7ஜ்12, 9ஜ்13, 10ஜ்16, 12ஜ்19, 14ஜ்18, 14ஜ்22, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39, 31ஜ்44, 36ஜ்48 ஆகிய அளவுள்ள கவர்கள் தயாரிக்கலாம்.
வெவ்வேறு அளவு கவர்களை தயாரிக்க அதற்குரிய பிளேட், பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்த வேண்டும். கவரின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதியை ஒட்ட தேவையான பசையை இயந்திரத்தில் உள்ள டேங்க்கில் நிரப்ப வேண்டும்.   

பின்னர் இயந்திரத்தை இயக்கினால் பிளேட்டின் கீழ்பகுதி வழியாக பேப்பர் ஓடும். அதன் மேல் பகுதியில் பேப்பர் மடித்து, கவரின் மத்திய பகுதியில் பசை ஒட்டும். அங்கிருந்து நகரும் பேப்பர் குறிப்பிட்ட அளவில் துண்டிக்கப்பட்டு அடுத்த பகுதிக்கு செல்லும். அங்கு கீழ் பகுதி ஒட்டப்பட்டு கவர் தயாராகும். உற்பத்தியான கவர் 50 எண்ணிக்கை சேர்ந்தவுடன் ஒரு முறை விளக்கு எரியும். கவர்களை 50 அல்லது 100 எண்ணிக்கையில் அடுக்கி ரப்பர் பேண்ட் போட்டால் விற்பனைக்கு தயார். இயந்திரம் துவக்கத்தில் ஓடும்போது பசை சீராக செல்கிறதா, ஒட்டப்படுகிறதா, சரியான அளவுகளில் வெட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டம் சீரானவுடன் ஒரு இயந்திரம் மூலம் நாள்தோறும் 8 மணி நேரத்தில் 200 கிலோ பேப்பரில் கவர் தயாரிக்கலாம். அளவுகளுக்கேற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும்.

 tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets