உங்கள் வருகைக்கு நன்றி

தகிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க சோயா பால், பிரிசர்வேட்டிவ் ஜூஸ்

செவ்வாய், 27 டிசம்பர், 2011


பச்சை சோயா பீன்ஸ் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம். சோயா பால் தயாரிப்பதன் மூலம் நிறைய வருமானமும் அந்த பாலின் விதையின் கழிவிலிருந்து உணவுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கலாம். அதிலிருந்து டிரை சோயாபீன்ஸ் தயாரித்து நாமே சொந்தமாக கடைக்கு சந்தைப்படுத்தினால் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யலாம்.

சோயா பாலை எந்தவிதமான கெமிக்கல் இல்லாமல் இயற்கையில் எளிய முறையில் மதிப்புகூட்டும்   முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருந்து இந்த சோயா பாலிலிருந்து பாதாம்பால் தயாரித்து விற்பனை செய்தால், லாபம் அடையலாம்.

சோயா பாலில் சர்க்கரை, எசன்ஸ், சிறிது சமையலுக்கு பயன்படும் உப்பு சேர்த்து சுவையான பாதாம்பால் தயாரிக்கலாம். சோயா பீன்சிலிருந்து மூன்று விதமாக சோயாபால் எடுக்கலாம்.
* சிவப்பு சோயா பால் விதையில் தோல் உரிக்காமல் அப்படியே பால் எடுக்லகாம். ஆனால் அதன் நிறம் இளம் ஊதா நிறத்தில் இருக்கும்.
* சோயா விதையில் அதன் தோலை நீக்கி அதன் வெள்ளைநிற சோயா விதையிலிருந்து பால் எடுத்தோமானால் சோயா பால் வெள்ளையாக இருக்கும்.
* மளிகை கடைகளில் விற்கும் சோயா பீன்ஸ் டிரை சோயா பீன்ஸ் ஆகும்.
வாங்கி வந்த சோயா பருப்பை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து மறுபடியும் சோயா பருப்பை கழுவி சுத்தம் செய்து அதிலிருந்து சோயா பால் தயாரிக்கலாம். இதன் சுவை மணமும், நிறமும் சற்று மாறுதலாக இருக்கும். தரம் குறைவாக இருக்கும். சோயா பால் தயாரிப்பதற்கு இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தின் பெயர் சோயா டைரக்ட் என்பதாகும். இதன்மூலம் குறைவான பாலை உற்பத்தி செய்ய முடியும். ஆட்டோமெடிக் இயந்திரம் உள்ளது. ஒவ்வொரு பிராண்டைப்பொறுத்து அதன் கொள்ளளவு பொறுத்து விலை 3 லட்சம் முதல் கிடைக்கும்.
மாட்டு பாலுக்கு மாற்றாக பயன்படுத்தி சோயா பாலிலிருந்து பத்து வகையான உணவு தயாரிக்கலாம். 1. பாதாம்பால், 2. பிஸ்தா மில்க், 3. ஏலக்காய் மில்க், 4. ரோஸ் மில்க்
5. ஸ்ட்ராபெரி மில்க், 6. பைன் ஆப்பிள் மில்க், 7. வெண்ணிலா மில்க், 8. ஜிகர்தண்டா மில்க்
9. சாக்லேட் மில்க், 10. காபி மில்க் ஆகியவை. சோயா பாலிலிருந்து எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே சிறு தொழிலாக அமைத்து பெரிய தொழிலாக மாற்றி அதிக லாபம் அடையலாம்.
இந்த சோயா பீன்ஸ் விதையிலிருந்து பால் எடுத்தபிறகு அதன் கழிவு சத்தான உணவு ஆகும். இதற்கு ஒகாரா என்று பெயர். இதில் அதிகமாக நார்சத்து உள்ளது. இந்த ஒகாரா மாற்று உணவுப் பொருட்களுடன் பிஸ்கட், கோதுமை மாவு, மற்ற தானிய உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல்நலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த சோயா பால் தரமான மாட்டு பாலில் உள்ள சத்துக்களைவிட அதிக சத்துக்கள் கொண்டது. இந்த சோயா பாலில் எனர்ஜி, புரோட்டின், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், கால்சியம்,நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோடியம் உள்ளது. இதைப்போல் 30க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் உள்ளன.
இந்த சோயாபால் தினமும் அருந்தினால் கொலஸ்டிரால் அளவு குறைந்துவிடும். இதயம் மற்றும் சிறுநீரகம் நல்ல ஆரோக்கியமாக செயல்படும். உடலில் கேன்சர் செல் வராமல் தடுக்கும். மூளையின் ஞாபகசக்தி அதிகரிக்கும். மெல்லிய தேகம் உள்ளவர்கள் சோயா பால் அருந்தினால் உடல் வலுப்பெறும். உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பட்டு குறைந்து விடும். 
உடலில் சீக்கிரம் செரிமானமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடலுக்கு ஏற்ற உணவாகும்.
சோயா பாலிலிருந்து பாதாம்பால் தயாரிக்க சிறிய பாதாம்பால் பாட்டில் தேவைப்படும். இந்த பாதாம்பால் பாட்டிலில் பத்து வகையான நறுமண பால் வீட்டிலிருந்தபடியே சிறு தொழிலாக குறைந்த முதலீட்டில் ஒரு பாதாம்பால் தயாரிப்பு செலவு ரூ.5.00. அடக்கவிலை நமக்கு ஏற்படும். அதன் பாட்டிலின்மேல் லேபிள்கம்பெனி பெயர், எக்ஸ்பைரி டேட், எம்ஆர்பி: 15.00 என்று அச்சிட்டு கடைக்கு பாட்டில் ரூ.10.00க்கு விற்பனை செய்ய வேண்டும்.
குறைந்தது ஒரு நாளுக்கு 100 பாட்டில் விற்பனை செய்தோமானால் நமக்கு மாதத்திற்கு செலவு போக ரூ.15,000 லாபம் கிடைக்கும். வீட்டில் உள்ள இரண்டு நபர்கள் தேவைப்படும். நம் வீட்டில் உள்ள அறையே போதுமானதாகும். மாட்டுப்பால், சோயாபால் இந்த இரண்டு வகையான பாலில் நாம் எந்தவிதமான கெமிக்கல் கலந்தாலும் இரண்டு பாலும் கெட்டுவிடும். அதாவது பென்சாயிக் ஆசிட் மற்றும் பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2 கெமிக்கல் கலக்கக்கூடாது.
பாதாம்பால் ஏஜன்சி எடுத்து செய்பவர்கள், ரஸ்னா மோர் தயாரித்து விற்பனை செய்பவர்கள், சோடா கலர் கம்பெனி நடத்துபவர்கள் மற்றும் சாக்லேட், பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் விற்பனை செய்பவர்கள் அனைத்து ஏஜென்சி எடுப்பவர்கள் வீட்டிலிருந்தபடியே சோயாபால் தயாரித்து எளிய முறையில் அதிகமாக சம்பாதிக்கலாம்.
இதனை கையில் எளிய முறையில் தயாரித்தாலும் இயந்திரத்தின் உதவியுடன் தயாரித்தாலும் மிகவும் முக்கியம் ஒவ்வொரு கடைக்கும் சந்தைப் படுத்துவதன் மூலம் இயற்கை அங்காடி, இன்ஜினியரிங் காலேஜ் கேன்டீன், சூப்பர் மார்க்கெட், பள்ளி கேன்டீன் இவற்றின்மூலம் வியாபாரத்தை அதிகப்படுத்தி லாபம் கூடுதலாக சம்பாதித்து வாழ்க்கைத்தரத்தை சொந்த தொழில் மூலம் உயர்த்திக் கொள்ளலாம்.

சந்திரமோகன்,
மொபைல்: 94892 56025



மதிப்பூட்டிய பாதாம்பால் விற்பனை

பாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து வகையான நறுமண பால் தயாரிக்கலாம். 
1.
பாதாம் பால், 
2.
பிஸ்தா மில்க், 
3.
ரோஸ் மில்க், 
4.
ஸ்ட்ராபெரி மில்க்,
5.
ஏலக்காய் மில்க், 
6.
வென்னிலா மில்க்,
7.
பைன் ஆப்பிள் மில்க்,
8.
ஜிகர்தண்டா மில்க்,
9.
சாக்லேட் மில்க்,
10.
காபி மில்க் தயாரித்து கடையில் விற்பனை செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே அதிக லாபம் சம்பாதிக்கலாம்.
பாலை கெடாமல் வைத்திருக்க எந்தவிதமான ரசாயன கெமிக்கல் மற்றும் லிக்விட் பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2, மற்ற கெமிக்கல் எதுவும் கலக்காமல் பாலை எளிய முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் பாலில் பாதாம்பால் தயாரித்து வீட்டிலிருந்தே கடைக்கு விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
ஒரு பாட்டில் பாதாம்பால் தயாரிக்க பாட்டில், பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி, லேபிள் அனைத்து மூலப்பொருட்களும் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 அடக்கவிலை ஆகும். நாம் கடைக்கு ஒரு பாட்டில் ரூ.10 விற்பனை செய்ய வேண்டும். பாட்டிலின் மேல் லேபிளில் எம்.ஆர்.பி. ரூ.15 அச்சிட்டு கடைக்கு விற்பனை செய்ய வேண்டும். கடைக் காரர் ஒரு பாட்டில் ரூ.13 விற்பனை செய்து ரூ.3 லாபம் அடைவார். தினமும் 100 பாதாம்பால் பாட்டில் விற்பனை செய்தால், மாதம் ரூ.1000 லாபம் சம்பாதிக்கலாம்.
இதே முறையில் பாக்கெட் பாலிலிருந்து மற்றும் பசுமாடு, எருமை மாடு வைத்திருப்பவர்களும் பாதாம்பால் தயாரிக்கலாம். 1 லிட்டர் பாலில் வெண்ணெய் எடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 50கிராம் வெண்ணெய் எடுக்கலாம். அதே பாலில் பாதாம்பால் தயாரித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். 5 லிட்டர் பாலில் கால் கிலோ வெண்ணெய் நமக்கு கிடைக்கும். வெண்ணெயின் மதிப்பு ரூ.60. வெண்ணெய் எடுத்த பாலில் பாதாம்பால் தயாரித்தால் பாலின் விலை ஒரு லிட்டர் ரூ.10 அடக்க விலை ஆகும்.
இந்த வகையான பாதாம்பால் எளிய முறையில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் கையால் சோடா மூடி போடும் சிறிய இயந்திரத்தை பயன்படுத்தி குறைந்த முதலீட்டில் தயாரிக்கலாம். சோடா மூடி இயந்திரத்தின் விலை ரூ.2000. வீட்டில் உள்ளவர்கள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 பாட்டில் தயாரிக்கலாம்.
மற்றொரு முறை முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி பாதாம்பால் தயாரிக்கலாம். இதில் இரண்டு வகைகள் உள்ளது.
1.
வெர்டிகல் டைப் - இதன் மூலம் ஒரு நாளைக்கு 2000 பாதாம்பால் பாட்டில் தயாரிக்கலாம். வேலை ஆட்கள் 6 பேர் தேவைப்படும். இதன் விலை 2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 2. ஹரிஜான்டல் டைப் - இதன் இயந்திரத்தின் விலை 4 லட்சம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பாதாம் பாட்டில் தயாரிக்கலாம். வேலையாட்கள் 10 பேர் தேவைப்படும். இதன் இரண்டுக்கும் இடம் 1000 சதுர அடி தேவைப்படும். தொடர்புக்கு: பி.சந்திரமோகன், 94892 56025.
-
கே.சத்தியபிரபா, உடுமலைப்பேட்டை. 


**************************************************************
பிரிசர்வேட்டிவ் ஜூஸ்
 
தகிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்பான கடைகளில் குவிகிறது கூட்டம். மக்களின் இந்தத் தேவையையே தனது பிசினஸூக்கான அஸ்திவாரமாக்கி ஜெயித்தவர்தான் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சௌமியா.

கிட்டத்தட்ட சென்னை முழுக்க பல கடைகளுக்கும் சப்ளை ஆகின்றன, இவர் கைகளால் தயாராகும் பிரிசர்வேட்டிவ் ஜூஸ் வகைகள்!

''குடும்பம், குழந்தைகள்னு இயல்பா நகர்ந்துட்டு இருந்துச்சு வாழ்க்கை. குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் எனக்குள்ள பிசினஸ் ஆசை முளை விட்டுச்சு. அந்த ஆசைக்கு நான் காலேஜ் படிச்சப்ப கத்துக்கிட்ட இந்தத் தொழில் 'ஜூஸ்' ஊத்த, ஒரு நல்ல தொடக்கம் கிடைச்சுது. நம்ம சென்னையில வருஷத்துக்கு முக்கால்வாசி நாள் வெயில்தானே.. அதான், அந்த கதிரவன் கடாட்சத்துல மூணு வருஷமா நல்லபடியா போய்க்கிட்டிருக்கு என்னோட ஜூஸ் பிசினஸ்'' என்றவரிடம், திராட்சைப் பழ ஜூஸ் செய்யும் விதத்தை விசாரித்தோம்..

தேவையான பொருட்கள்:
திராட்சைப் பழம் - அரை கிலோ, சர்க்கரை - ஒரு கிலோ, சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன், டோனோவின் எஸன்ஸ் - ஒரு டீஸ்பூன், சோடியம் பென்ஸோயேட் - அரை டீஸ்பூன்.

இவற்றையெல்லாம் எடுத்து வைத்து, விளக்கத்தை சொல்லியபடி, மடமடவென ஜூஸை செய்யத் துவங்கினார்..

''அரை கிலோ திராட்சைப்பழத்தை உதிர்த்து, கழுவிக்கணும். அதை கரண்டியால ஓரளவுக்கு மசிச்சுட்டு, அடுப்புல வச்சு பத்து நிமிஷம் சூடாக்கணும். அடுப்புலருந்து இறக்கி, ஆறுனதும் அதுலயிருந்து சாறு எடுத்துக்கணும்.

சாறு எப்படி எடுக்குறதுனு பார்க்கலாம்.. ஆறின பழத்தை மிக்ஸியில நல்லா அடிச்சுக்கணும். இதை கொஞ்சம் பெரிய துளை இருக்குற வடிகட்டியில வடிகட்டணும். அப்போதான், வெறும் சாறு மட்டும் இறங்காம, கொஞ்சம் சதையும் கலந்து அடர்த்தியா இறங்கும். ஜூஸ் பார்க்குறதுக்கு ஃப்ரெஷ் ஜூஸ் மாதிரி தெரியணும் இல்லையா? அதுக்குத்தான் இந்த ஏற்பாடு!'' என்றவர், ஜூஸர் இருப்பவர்கள் அதைப் பயன்படுத்தினால், ஜூஸ் இன்னும் நன்றாக வரும் என்றொரு டிப்ஸூம் கொடுத்தபடியே தொடர்ந்தார்..

''ஜூஸ் மேக்கர்ல, மேற்புறம் பிளேடும் அடிப்புறம் வடிகட்டியும் இருக்--கும். சாறு இறங்க கீழ ஒரு பாத்திரத்தை வச்சு, அது மேல ஜூஸரை வச்சு, பழங்களைப் போடணும். மேலே உள்ள கைப்பிடியை சுத்திட்டே வந்தா, கீழ இருக்கற பாத்திரத்தில ஜூஸ் சேரும்.

அடுத்ததா அரை லிட்டர் தண்ணியை கொதிக்க வெச்சுக்கணும். அதுல ஒரு கிலோ சர்க்கரையை கொட்டி, ஒரு டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட்-ஐ சேர்க்கணும். சர்க்கரை கரைஞ்சு நல்லா கொதிச்சதுமே, அதை இறக்கிடணும். இந்த சர்க்கரை கரைசலை நல்லா ஆறவிட்டு, அதுல வடிகட்டி வச்சிருக்குற பழச்சாறை சேர்க்கணும்.

இப்போ, இதுல டோனோவின் எஸன்ஸ் ஒரு டீஸ்பூனும், பிரிசர்வேட்டிவ்வான சோடியம் பென்ஸோயேட் அரை டீஸ்பூனும் கலக்கணும். இதை ஒரு சுத்தமான பாட்டில்ல ஊத்திடணும். அவ்வளவுதான். ஜூஸ் ரெடி!'' என்றவர், இந்த ஜூஸை பயன்படுத்தும் விதத்தையும் விளக்கினார்..

''பிரிசர்வேட்டிவ் போட்டிருக்கறதால, அது ஜூஸோட செட் ஆக ரெண்டு நாள் ஆகும். அதுக்கு அப்புறமாத்தான் எடுத்து பயன்படுத்தணும். இந்த ஜூஸ் ஒரு வருஷம் வரை அப்படியே இருக்கும். ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒன்றரை வருஷம் வரை இருக்கும். ஒரு பங்கு ஜூஸூக்கு மூணு பங்கு தண்ணி கலந்து குடிக்கலாம்.

இந்த முறையில அரை லிட்டர் ஜூஸ் செய்ய அதிகபட்சமே 25 ரூபாய்தான் செலவாகும். அதை குறைந்தபட்சம் 50 ரூபாய்க்கு விக்கலாம்.. டபுள் மடங்கு லாபம் கேரன்ட்டி!'' என்றவர் இன்னும் சில டிப்ஸ்களை கொடுத்தார்..

''வாங்குறது, விக்கிறது இந்த ரெண்டுலயும் கவனமா இருந்தா இன்னும் அதிக லாபம் பார்க்கலாம். அதாவது எந்த பழங்கள் எந்த சீஸன்ல விலை கம்மியா கிடைக்கும்னு பார்த்து வாங்கி ஜூஸ் செஞ்சு வைக்கணும். இதுல செலவு 60%-க்கும் மேலயே மிச்சமாகும். அந்த சீஸன் போனதுக்கு அப்புறமா அதை விக்கணும். இதுல சூப்பர் லாபம் கிடைக்கும். மே, ஜூன் மாசங்கள்ல மாம்பழ ஜூஸையும், ஜூன், ஜூலையில எலுமிச்சை ஜூஸை-யும், செப்டம்பர்ல சாத்துக்குடி, ஆப்பிள், திராட்சை ஜூஸ்-களையும் செய்யலாம்..'' என்றவர், மார்க்கெட்டிங் விவரங்களையும் தந்தார்..

''தெரிஞ்ச வீடுகள்ல தொடங்கி, ஜூஸ் கடைகள், பலசரக்கு கடைகள்னு எல்லா இடத்துலயும் கொடுக்கலாம். சேல்ஸ் கேர்ள்ஸ் சிலரைப் பிடிச்சு, அவுங்ககிட்ட கொடுத்துவிடலாம். அப்பறம் என்ன.. அமர்க்கள பிக் அப் தான்!'' - ஸ்வீட்டாக முடித்தார் சௌமியா.

இன்னும் விபரங்களுக்கு இதோ இருக்கே சௌமியாவோட தொடர்பு எண்.. 9840609790.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets