உங்கள் வருகைக்கு நன்றி

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பெண் சிசுக்கொலைகளும், கருக்கொலைகளும் சமீபகாலமாக அதிகளவில் நடைபெற்று வருகிறது. பெண் குழந்தைகளின் உயிர் வாழ்தல் மற்றும் மேம்பாட்டுக்கான உரிமையை பாதுகாக்கும் நோக்கில்பெண் குழந்தைகளின் நிலையை உயர்த்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு குழந்தைகளுக்கான தேசிய செயல் திட்டம் 1992ல் உருவாக்கப்பட்டது.
2011
ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பாலின விகிதம் 26 மாநிலங்களில்(1,000 ஆண் குழந்தைகளுக்கு) 952க்கும் குறைவாக உள்ளது. இதில் தமிழ்நாடும் ஒன்று. இந்தியாவில் 6 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பாலின விகிதம் 914ஆகவும், தமிழகத்தில் இந்த பாலின விகிதம் 946ஆகவும் உள்ளது. குறிப்பாக கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையானது 900 என்ற அளவில் உள்ளது. 
2001
முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகால இடைவெளியில் இந்திய அளவில் 31,33,281 பெண் குழந்தைகளையும், தமிழக அளவில் 19,848 பெண் குழந்தைகளையும் காணவில்லையென புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் 952க்கும் குறைவான பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.
பெண் கருக்கொலையின் மூலமாக பெண் குழந்தைகள் பிறப்பது தடுக்கப்பட்டு வருகிறது. இதனை முற்றிலும் தடுப்பது அவசர தேவையாகும். கருவுறுவதற்கு முன்பு மற்றும் பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டறிய உதவும் தொழில்நுட்பங்கள் சட்டம் 2002 மற்றும் மருத்துவரீதியான கருக்கலைப்பு சட்டம் 1971ஐ தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாக்க 1992ல் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் அமலில் இருந்தும்கூட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனையளிக்கிறது.
இதுபற்றி பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசார இயக்க(காசா) மையக்குழு உறுப்பினர் ஜீவா கூறுகையில், ‘‘பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கும் இலக்கு நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.

பெண்சிசுக் கொலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் 2 கோடி ஆண்கள் தனியாக வாழ நேரிடும் என தேசிய பெண்கள் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டரீதியான உரிமை பற்றி பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தேசிய பெண்கள் கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  அவர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லை. பெண் சிசுக் கொலை சம்பவங்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது. பெண் சிசுக் கொலை தொடர்ந்தால், 2 கோடி ஆண்கள் திருமணம் செய்ய முடியாமல் தனியாக வாழ வேண்டிய நிலை ஏற்படும். பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டரீதியான உரிமை பற்றி அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.  

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets