உங்கள் வருகைக்கு நன்றி

குளிர்கால வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க

வெள்ளி, 9 டிசம்பர், 2011

குளிர்காலத்தில்  பனி ஒத்துக்கொள்ளாமல்சீதோஷ்ண நிலை மாறுபடுவதால் பலருக்கு தும்மல்மூக்கடைப்பு,சளி பிடித்தல் என்று இருக்கும். சுவாசக் கோளாறுகள் செரிமான பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது. அஜீரணம், கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டது போன்ற உணர்வு, உப்பிசம், வயிற்றில் அதிக அமிலசுரப்பு போன்ற தொந்தரவுகள் இருக்க வாய்ப்புண்டு. குளிருக்காக அடிக்கடி அதிகம் காபி, டீ குடிப்பதும் வயிற்றுப் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். புகை பிடிப்பவர்கள் குளிர்காலத்தில் அதிகமாக பிடிக்கிறார்கள். இதுவும் சுவாசக் கோளாறுகளையும், செரிமான தொந்தரவுகளையும் உருவாக்குகிறது.

காலை, மாலை, இரவு நேரங்களில் செரிமானத்திற்கு எளிதான உணவுகளை உட்கொள்ளலாம். மதிய நேரத்தில் மட்டும் அசைவம், கொழுப்பு பொருட்கள் சேர்ப்பது நல்லது. பொதுவாகவே அசைவ உணவுகளை எக்காலத்திலும் மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். அசைவ உணவுடன் பப்பாளி பழத்தை சேர்ப்பது ஜீரணிக்க உதவும்.
                              
வறுத்த உணவுகள், சிப்ஸ், வெண்ணெய், க்ரீம் சேர்ப்பது பலருக்கு செரிக்காது. ஒத்துக்கொள்ளாத உணவை விலக்கி விடவேண்டும். வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம். ஒரு சிலருக்கு நான் என்ன சாப்பிட்டாலும் எந்த பிரச்சினயும் எனக்கு வராது என்பார்கள். அதுவும் சாத்தியம்தான்.

கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த்து போன்ற உணர்வு சிலருக்கு இருக்கும். இத்தொல்லை இருக்கும்போது சாப்பாட்டுடன் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலிஃபிளவர், முட்டைக்கோஸ், வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்டவை வாயுவை அதிகரிக்கும். இவற்றையும் தவிர்க்கலாம்.
                              
பொதுவாக உணவு ஆலோசனை என்பது அவரவர் குடும்ப வருமானம், உடல்நிலை, நோய்கள், வயது, கிடைக்கும் சூழல் என்று பல காரணிகளைக் கொண்டு இருக்கும். மேலே சொல்லப் பட்டவைகள் பொதுவானவையே. கவணத்தில் கொண்டால் குளிர்காலவயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்கலாம்

இரவில் இட்லி, தோசை, தேங்காய்ச் சட்னி, தயிர், குளிர்ந்த தண்ணீர் போன்றவற்றை நீங்கள் சாப்பிட வேண்டாம். உளுந்து சேரும் உணவு வகைகளால் தொண்டையில் கபக்கட்டு ஏற்படும். அதன் இனிப்புச் சுவையாலும், எளிதில் செரிமானமாகாத தன்மையாலும் கபத்தை வளர்க்கிறது. சளி உற்பத்தியைத் தடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது - ஒரு பிடிக் கொள்ளு, பயத்தம் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, துவரம் பருப்பு ஆகியவற்றைச் சுமார் 3 லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, அரை லிட்டராகத் தண்ணீர் குறுகியதும் வடிகட்டி, சூடு ஆறியதும் சிட்டிகை இந்துப்பு கலந்து, அரை ஸ்பூன் தேனும் சேர்த்து, இரவு உணவாகப் பருகுவதுதான். மேலும் தொண்டையில் சளி உற்பத்தியைப் பெருமளவு தடுக்கும் ஒரு சில உணவுப் பொருட்களின் தொடர் உபயோகத்தின் மூலமாகவும் நீங்கள் பயன்பெறலாம். அதன் விவரம் வருமாறு:

 *   ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை கிளாஸôக ஆனதும் வடிகட்டி, இரவில் படுக்கும் முன், தொண்டையில் படும் வகையில் விட்டு, கொப்பளித்துத் துப்பிவிடவும். தொண்டைப் புண் ஏதேனுமிருந்தால் ஆறிவிடும். சளி முறிந்து எளிதில் வெளியாகும்.
 *  மிளகைத் தூள் செய்து தேனில் குழப்பி நடுவிரலில் தோய்த்துத் தொண்டையினுள் தடவ, உள்நாக்கு தொங்குதல், டான்ஸில் சதை வளர்ச்சி, தொண்டையில் கட்டி, சளி அடைப்பு போன்றவை நீங்கிவிடும். மிளகையும் வால் மிளகையும் நல்லெண்ணெய்யில் பொரித்துச் சாப்பிட, தொண்டையில் சளி கட்டாது. இவற்றையே நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், தொண்டை வேக்காளத்தைக் குறைத்து வறண்ட இருமலையும், தொண்டை எரிச்சலையும் போக்கும்.
 *   4 - 5 பூண்டைப் போட்டு விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் 10 மி.லி. வீதம் சேர்த்துக் காய்ச்சி, 5 மி.லி. வீதம் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நுரையீரல், தொண்டைப் பகுதிகளில் அடைந்து கிடக்கும் கபத்தை இளக்கி வெளியே கொண்டு வந்துவிடும். கபத்திலுள்ள நாற்றத்தைப் போக்கும். அதிலுள்ள கிருமிகளை அழித்துவிடும். குழந்தைகளுக்கு ஏற்படும் அள்ளுமாந்தம் எனும் நுரையீரல் கப உபாதையிலும் இதனைக் கொடுக்கலாம். உள்ளிப் பூண்டின் சாறு 1 அவுன்ஸ் (30 மி.லி.), தேன் 1/2 அவுன்ஸ் (15 மி.லி.) சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு தினம் 3, 4 வேளை உள்நாக்கில் படும்படி தடவி வர, தொண்டை சளி ஏற்படாமல் பாதுகாக்கும்.
 *   ஒன்றிரண்டு வெற்றிலையுடன் சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து உணவுக்குப் பிறகு சாப்பிட, சளி அடைப்பைப் போக்கிவிடும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets