உங்கள் வருகைக்கு நன்றி

ரத்த அழுத்தம், ரத்தசோகை கட்டுப் படுத்துவது எப்படி

சனி, 24 டிசம்பர், 2011


இந்தியர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி வருகிறது. ஏறத்தாழ 15 கோடி பேருக்கு இந்த பிரச்னை இருக்கிறது. இது உலகெங்கும்  உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 15 சதவீதம். மற்ற நாடுகளில் உயர் அழுத்தம் குறையும் நேரத்தில் இந்தியாவில் அது மேலே செல்வது உண்மையில் கவலைக்குரிய விஷயம். சைஸ்டாலிக் பிரஷர் என்று சொல்லப்படும் ரத்த அழுத்த அளவின் சராசரி 120 என்று கூறலாம்.
அதை தாண்டுவது நல்லதல்ல. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது பெரிய சவால் கிடையாது. உணவு கட்டுப்பாடுஉடற்பயிற்சி அல்லது நடை போதும். டாக்டர் சொல்லியிருந்தால் மாத்திரை தவறாமல் சாப்பிட வேண்டும். இந்த வழிகளை பின்பற்றியதால் கடந்த 30 ஆண்டுகளில் உலக அளவில் உயர் அழுத்தம் 2 புள்ளி 3 எம்எம் குறைந்தது. ஆனால்நமது நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட அதே அளவு அதிகமாகி இருக்கிறது.
அதிக ரத்த அழுத்தம் ஒரு நிலைதானே தவிர நோயல்ல என்று டாக்டர் ஆறுதலாக சொல்வதை அப்படியே பிடித்துக் கொள்வதால் பலர் இதில் அக்கறை காட்டுவதில்லை. அந்த நிலை & கண்டிஷன் & கொடிய பல நோய்களுக்கு நுழைவாயில் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதய நோய்களின் தொடக்கம் ரத்த அழுத்த உயர்வுதான். ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இவ்வாறு இதய நோய்களால் மரணம் அடைகின்றனர். மூளையில் ரத்தக் குழாய் வெடிப்பதால் ஏற்படும் மரணங்களில் 57 சதவீதமும்மாரடைப்பால் நிகழும் சாவுகளில் 24 சதவீதமும் உயர் ரத்த அழுத்தத்தில் உருவானவைதான் என கணக்கிடப்பட்டுள்ளது.
எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவதை உயர் ரத்த அழுத்தத்தின் பிரதான அடையாளமாக குறிப்பிடுகின்றனர். ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு நாளில் ஒரு முறையாவது டென்ஷன் ஆகாத மனிதர்கள் எவரும் இருக்க முடியாது. வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருக்கக்கூடும். அடக்கி வைத்தாலும் அழுத்தம் ஏறத்தான் செய்யும். இந்தியர்களை பொருத்தவரை உணவில் உப்புஎண்ணெய்அரிசிகோதுமை குறைத்து தினமும் அரை மணி நேரமாவது நடந்தால் போதும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முடிவு கட்டி விடலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

ரத்தசோகை என்றால் என்ன ?
ரத்த சோகை என்பது ஒரு நோய் அல்ல என்று அப்போலோ மருத்துவமனையின் முதுநிலை ஆலோசகர் மருத்துவர்  கூறியுள்ளார்.
இரும்பு சத்து பற்றாக்குறை தான் ரத்தசோகைக்கு காரணம்.
இது ஒரு நோய் அல்ல, நோயின் தோற்றம். அனைத்து வகை ரத்த சோகையும் இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படுவதில்லை. ஒரு சில ரத்த சோகையில் இரும்பின் அளவு அதிகரித்திருக்கும்.
ரத்தசோகை ஏற்பட மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
போதிய அளவு ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியின்மை,
போதிய இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடாதிருத்தல் அல்லது குறைந்த அளவு சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையை உடம்பு கொண்டிருத்தல்.
மலேரியாவால் அதிகளவு ரத்த சிகப்பணுக்கள் சேதமடைந்தால், ஹீமோகுளோபின் குறைவை ஏற்படுத்துவதுடன் தசைகளுக்கு ஆக்சிஜன் செல்வதையும் தடுக்கும்.பெண்களின் பிரசவ காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கும் இதற்குக் காரணம்.இரும்புச்சத்தை உடம்பு கிரகித்துக்கொள்ள சாப்பாட்டுடன் இறைச்சி, மீன், கோழி இறைச்சி மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்தவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.மேலும், முழு தானியங்கள், அரைத்த தானியப் பொருள்கள், கறி சாண்ட்விச்கள், உலர் பழங்கள், கொட்டைகள், சோயா பொருள்களை சாப்பிட வேண்டும். உணவைத் தவிர்க்கவோ அல்லது பட்டினி கிடக்கவோ கூடாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.


கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets