உங்கள் வருகைக்கு நன்றி

மனிதன் இந்தப் பூமியில் வாழவேண்டும் என்றால்

வெள்ளி, 15 ஜூன், 2012


நம் எல்லோருக்குமே வீடுதான் மிகவும் பாதுகாப்பான இடம். வீடுகளின் வடிவத்திலும் வசதியிலும் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் வீடு என்பது நமக்கு எக்காலத்திலும் அன்பிற்குரியது. சரிஇந்த வீடு எனும் கற்பனை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது என்று தெரியுமாவீட்டின் சரித்திரத்தை அறிவதற்கு நாம் கடந்த காலத்தைப் பார்க்கவேண்டும்.

மனிதன் இந்தப் பூமியில் வாழவேண்டும் என்றால் இயற்கையின் சவால்களை எதிர்கொண்டே தீர வேண்டும். கடுங்குளிரிலும்கடுமையான வெப்பத்திலும்பெருமழையிலும் மனிதர்கள் வாழ்வது சிரமம். அதுபோன்ற பருவ நிலைகளில் என்ன வேண்டும்பாதுகாப்பாக வசிப்பதற்கு ஒரு இடம் வேண்டும். தாக்க வரும் மிருகங்களிடமிருந்து தப்பிக்க வேண்டும். குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும். இதுபோன்ற கட்டாயங்கள் ஏற்படும்போதுதான்,மனிதனுக்கு வீடு என்பது இன்றியமையாத்     தேவையாகியது.

அப்போது மனிதன் முதன் முதலாகஒரு வசதியான தங்குமிடத்தைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான். மரத்தின் அடிப் பகுதியோஅல்லது மரக்கிளைகளின் மறைவோகுகையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முதலில் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும். எனவே மனிதன் அப்படிப்பட்ட ஒரு இடத்தைக் கண்டுபிடித்தான்.
மனிதன் முதன் முதலில் தங்கத் தொடங்கியது குகைகளில்தான். இன்றும் ஆப்பிரிக்காவிலும்ஆசியாவிலும் சில பகுதிகளில் குகைகளில் மனிதர்கள் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு மனிதன் தான் வேட்டையாடிப் பிடித்த மிருகங்களின் தோலையோ மரக்கிளைகளையோ விரித்து அதன் கீழே தங்குவதற்கு முயன்றான். பிறகு இந்த விரிப்பு என்பது நான்கு புறங்களாகவும்உயர்ந்த மேற்பகுதியுடையதாகவும் வளர்ச்சியடைந்தது. அப்போது அது ஒரு கூடாரமாகியது.

நீங்கள் சர்க்கஸ் கூடாரத்தைப் பார்த்திருப்பீர்களேஏறத்தாழ அதுபோல இருந்தது. சில நாடோடிகள் சாலையோரங்களில் அமைக்கின்ற கூடாரங்களையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். பழங்காலத்து மனிதர்கள் மிருகங்களின் தோலையும் மரக்கிளைகளையும் பயன்படுத்திக் கூடாரம் அமைத்தார்கள் என்றால் இக்காலத்தில் உள்ளவர்கள் கனமான கேன்வாஸ் துணிகளையும். மரச்சட்டங்களையும்இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்திக் கூடாரம் அமைக்கிறார்கள். இன்றும் வனப் பகுதிகளுக்கோமலைப் பகுதிகளுக்கோ ஆய்வுக்காகச் செல்லும் விஞ்ஞானிகள் கூடாரம் அமைத்துத் தங்குவது உண்டு. உல்லாசப் பயணம் செல்பவர்களும் மற்றவர்களும்கூட கூடாரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

பிறகு மனிதர்களின் அறிவு விரிவடைந்தது. தங்களுக்குக் குகைகளைவிடவும்,    கூடாரங்களைவிடவும் நல்ல தங்குமிடங்கள் வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. அப்போது அவர்கள்தாங்கள் வாழும் சுற்றுப் புறத்திலிருந்து கிடைத்த இலை தழைகளையும்கிளைகளையும்மிருகங்களின் தோல்களையும் பயன்படுத்தி புதுவிதமான வீடுகளை உருவாக்கினார்கள். இன்றும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் மனிதர்கள் இவ்வகையான வீடுகளைக் கட்டுவதுண்டு. அடுத்தபடியாக மரங்களைப் பயன்படுத்தி வீடு கட்டினார்கள். பழங்கால மனிதர்கள் வீடு கட்ட கற்களை உபயோகப்படுத்தவில்லை. மிகவும் முக்கியமான கட்டடங்களைக் கட்டுவதற்காகத்தான் அக்காலத்தில்   கற்களைப் பயன்படுத்தினார்கள். புராதன எகிப்தியர்கள் வீடு கட்டுவதற்கான கற்களையும் காரைப் பூச்சையும் கண்டுபிடித்த பிறகு வீடுகள் கட்டுவதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

பழங்கால வீடுகள் பல வடிவங்களில் இருந்தன. நாடுகளுக்கும் அதன் பருவ நிலைகளுக்கும் ஏற்ற வகையில் வீட்டின் வடிவமும்அதைக் கட்டப் பயன்படுத்துகின்ற பொருட்களும் மாறுகின்றன. வெப்ப நாடுகளில் கட்டப்பட்ட வீடுகள் ஏறத்தாழ பெட்டி வடிவத்தில் இருந்தன. வெள்ளை நிறச் சுவர்களைக்கொண்டிருந்தன. சன்னல்கள் மூடப்பட்டிருந்தன. இவ்வகையான வீடுகளின் உள்ளே குளிர்ச்சியாக இருக்கும்.
பனி பொழிகிற நாடுகளில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் மிகவும் சரிந்திருக்கும். ஏன் இப்படி? பனி பொழியும்போது வடிந்து இறங்க வேண்டும் அல்லவாஅதற்காகத்தான். தட்டையான கூரையாக இருந்தால் பனி அங்கேயே குவிந்து கிடக்கும். அளவுக்கு அதிகமாக பனி சேரும்போது கூரை அப்படியே விழுந்துவிடக்கூடிய அபாயம் உண்டு.

எதிர்பாராத வகையில் திடீர் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்படுகிற சில நாடுகள் இருக்கின்றன. "ஹோயாங்ஹோநதியை சீனாவின் துயரம் என அழைப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். எதிர்பாராத நேரத்தில் அந்த நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அப்போது இரு கரையிலும் உள்ளவையெல்லாம் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும். இத்தகைய நதிகள் இந்தியாவிலும் உண்டு. அங்கெல்லாம் மிக உயரமாகத்தான் வீடுகளை அமைப்பார்கள். வெள்ள ஆபத்து ஏற்படக்கூடிய இடங்களில் நாட்டப்பட்டிருக்கும் தூண்களின் மீதுதான் வீடுகளை அமைப்பார்கள்.

நீங்கள் பூகம்பத்தைப் பற்றியும் அறிந்திருப்பீர்கள். பொதுவாக நம் நாட்டில் இவ்வகையான இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதில்லை. ஆனால் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதிகளில் உள்ள வீடுகளைமிகவும் எடை குறைந்த பொருட்களைப் பயன்படுத்தித்தான் கட்டுவார்கள். இவை மிகவும் செலவு குறைந்த வீடுகளாக இருக்கும். இவை பூகம்பத்தில்   இடிந்து விழுந்தாலும் யாருக்கும் பெரிய ஆபத்தோ,  பெரிய பண நஷ்டமோ ஏற்படாது.

பனிக்கட்டி மட்டுமே கிடைக்கக்கூடிய ஆர்ட்டிக் பிரதேசங்களில் வசிக்கின்ற       எஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளைக் கொண்டுதான் வீடுகள் கட்டுகிறார்கள். இதுபோன்ற வீடுகள் "இக்ளூஎன்று அழைக்கப்படுகின்றன. பனிக்கட்டியை செங்கற்கள் வடிவத்தில் வெட்டி எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.    இக்ளூ கட்டி முடிக்கப்பட்ட பிறகு எஸ்கிமோக்கள் அதன் உள்ளே சென்றுமிருகக் கொழுப்பை எண்ணெயாகப் பயன்படுத்தி நெருப்பு உருவாக்குகிறார்கள். அந்த வெப்பத்தில்இக்ளூவின் உட்பகுதியிலிருக்கும் பனி சற்று உருகும்கட்டும்போது ஏற்பட்ட இடுக்குகளிலும் பிளவுகளிலும் ஒழுகும். அப்போது சட்டென்று கதவைத் திறந்துதுருவக்காற்றை  உள்ளே விடுவார்கள்.
நனைந்திருக்கின்ற பனிக்கட்டிகள் குளிர்ந்து உறைந்துஇடுக்குகள் அடைபட்டுப்போகும். வெளியே எவ்வளவு குளிராக இருந்தாலும் உள்ளே கதகதப்பாக இருக்கும்.
சீனாவைச் சேர்ந்த மீனவர்கள், "ஹெüஸ் போட்டுகள்எனப்படும் படகு வீடுகளில்தான் துறைமுகங்களிலும் நதிகளிலும் வசிக்கிறார்கள். இதுபோன்ற படகு வீடுகளை கேரளத்திலும்காஷ்மீரிலும் நிறையப் பார்க்கலாம்.
சைபீரியாபோன்ற குளிர் நாடுகளில் மனிதர்கள் உருவாக்குகின்ற வீடுகளைக் குழி வீடுகள் என்று அழைக்கலாம். சுவர்களின் மேற்பகுதியும்மேற்கூரையும் மட்டுமே தரை மட்டத்தில் இருக்கும். வீட்டின் மற்றப் பகுதிகள் தரை மட்டத்திற்குக் கீழேதான் இருக்கும்.
ஜிப்ஸிகள் என்று அழைக்கப்படுபவர்கள் நாடோடிகள். அவர்கள் தாங்கள் பயணம் செய்யும் வண்டிகளிலேயே தங்கிக்கொள்வார்கள்.
இந்தியாவில் சில பிரதேசங்களில் கொல்லர்களும்ஆசாரிகளும் தங்கள் பணிக் கருவிகளுடன் கை வண்டிகளைத் தள்ளியபடி தங்கள் குடும்பத்துடன் பயணம் செல்வது வழக்கத்திலிருந்தது. குடிசை அமைப்பதற்குத் தேவையான பொருட்களைச் சுமந்து பயணம் செல்லும்    நாடோடி மேய்ப்பர்கள் தமிழ் நாட்டில் உண்டு. இவர்கள் தங்கள் கால்நடைகளுடன் புதிய மேய்ச்சல் இடங்கள் தேடிச் செல்வார்கள். தங்களுக்கு ஏற்ற இடத்தை அடைந்த பிறகு அங்கேயே குடிசை அமைத்துத் தங்குகிறார்கள். இவர்களின் குடிசை "பட்டிக் குடிசைஎனப்படுகிறது.

கீற்று வேய்ந்த வீடுகள் உள்ளன. ஓடுபோட்ட வீடுகளும் உண்டு. காங்கிரீட் கட்டடங்களும் இருக்கின்றன. ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் கூரை அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் தகரக் கூரை அமைக்கப்பட்ட வீடுகளும் இருக்கின்றன. ஆனால் ஆஸ்பெஸ்டாஸ்மற்றும் தகர வீடுகளில் கோடைகாலத்தில் வசிப்பது மிகவும் சிரமம். பல வீடுகள் கொண்ட ஒரு கட்டடத்திற்குஅடுக்கு மாடிக் குடியிருப்பு என்று பெயர். நகரங்களில் நிறைய அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உள்ளன. நகரங்களில் மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருக்கும். எல்லோரும் தனித்தனியாக வீடு கட்டுவதற்கு இடம் இருக்காது. அப்போது மக்கள் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் குடியேறுகிறார்கள்.
ஆனால் நம் நாட்டில் தங்க இடம் எதுவும் இல்லாமல் தெருவோரங்களில் வசிப்பவர்கள் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். மனிதர்கள் வசிப்பதற்குக் கொஞ்சமும் தகுதியற்ற இடங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் எண்ணற்றோர் உள்ளனர்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets