உங்கள் வருகைக்கு நன்றி

பரோட்டா, இதுதான் ஆபத்தை விலைகொடுத்து வாங்குவது என்பது

செவ்வாய், 19 ஜூன், 2012


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

Paratha

பரோட்டாவின் மூலப் பொருளான மைதாவில்தான் பிரச்னை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட!
மைதா எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
நன்கு மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள், அதுவே மைதா. Benzoyl peroxide நாம் தலைமுடியில் அடிக்கும் "டை'யில் உள்ள ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள ல்ழ்ர்ற்ங்ண்ய் உடன் சேர்ந்து சர்க்கரை நோய்க்குக் காரணியாய் அமைகிறது.
இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது.
மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது.
இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.

இதில் Alloxan சோதனைக் கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது. ஆக, பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் சர்க்கரை நோய் வர துணை புரிகிறது.
மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார்ச் சத்து கிடையாது. நார்ச் சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்துவிடும். எனவே இரவில் கண்டிப்பாய் பரோட்டா சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளுக்கு மைதாவினால் செய்த bakery பண்டங்களைக் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஐரோப்பா, சீனா, லண்டன் ஆகிய நாடுகள் மைதா பொருட்களை விற்க தடை விதித்துள்ளன.
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets