பெண்களுக்கு அதிக அளவில் முதுகுவலி ஏன்?
புதன், 13 ஜூன், 2012
பெண்களுக்கு அதிக அளவில் முதுகுவலி
உள்ளது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். உயரத்திற்கேற்ற சரியான எடை இருந்தால்
பெரும்பாலும் முதுகுவலி வருவதில்லை. பெண்களுக்கென மட்டுமே உள்ள சில முக்கிய காரணங்களால் முதுகுவலி
ஏற்படலாம்.
முதுகு சம்பந்தமில்லாத நோயினால் கூட
பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். பி.ஐ.டி. என்ற வெள்ளைப்படுதல் நோய், கால்ஷியம் சத்து குறைவினால் வரும் வலி
பைப்ரோ மயால் ஜியா என்ற சதை நோய்வலி போன்றவை முதுகுவலிக்கு மட்டுமே சிகிச்சை
செய்வதால் பல பெண்கள் தீராத முதுகுவலியுடன் அவதிப்படுகின்றனர்.
வெள்ளைப்படுவதை கிருமி நீக்கும்
மருந்துகள் மூலமாகவும் தீர்க்க முடியும். கால்ஷியம் சத்து மாத்திரையினால்
வயதானவர்களுக்கு ஏற்படும் முதுகு வலியை குறைக்கலாம். பைப்ரோ மையால்ஜியா என்ற தசை
வலி நோயும், பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கு முக்கிய காரணமாகும்.
இந்நோய் உள்ளவர்களுக்கு முதுகு தவிர
உடலின் பல பாகங்களிலும் வலி இருக்கும். தூக்கமின்மை, வயிற்று கோளாறுகள் மனதளர்வு, ஞாபக மறதி, சோர்வு போன்றவையும் காணப்படும். இந்நோய்
உள்ளவர்கள் முதுகுவலி சிகிச்சை மட்டும் எடுத்துக் கொண்டால் தீர்வு கிடையாது.
பலர் முதுகு அறுவை சிகிச்சையும் செய்த
பின்பும் வலி தீராமல் அவதிப்படுவர். இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை பயனளிக்காது.
சில சமயம் அறுவை சிகிச்சைக்கு பின்பு வலி அதிகமாகலாம். இந்நோயை மருந்து
மாத்திரைகள் மூலமாக மட்டுமே சரி செய்ய இயலும்.