உங்கள் வருகைக்கு நன்றி

மன அழுத்த மருந்துகள் இல்லாமலேயே அமைதியும் ஆனந்தமுமான வாழ்க்கை பெற

புதன், 13 ஜூன், 2012


நல்ல புத்தகங்கள் வாசியுங்கள்...
ஓய்வே இல்லாமல் வேலை, வேலை என்று நேரம் பார்க்காமல் பணத்திற்காக மட்டுமே நேரத்தைப் பயன்படுத்தும் சிலர் உண்டு. அவர்களைக் கனடாவில் பணம் கொடுத்து  பார்க்கில் உட்காரச் செய்திருக்கிறார்கள் ஆராய்ச்சிக்காக கரும்பு தின்னக் கூலிதான்.
மக்களின் மனஅழுத்தத்துக்குக் காரணம், தங்கள் நேரத்தைப் பணம் சம்பாதிப்பதுடன் அதிக அளவு பிணைத்திருப்பதாகக் கனடா டொராண்டோ பல்கலைக் கழகத்தில் கண்டுபிடித்துள்ளனர். இங்குள்ள ராட்மன் நிர்வாக இயல் கழக ஆய்வாளர்கள்.
நேரத்தை பணத்துடன் தொடர்புபடுத்திவிட்டு. பொழுது போக்காக நல்ல செய்திகளை கேட்பது, வாசிப்பது போன்ற விஷயங்களில் மகிழ்ச்சி கொள்ளாமல் இருப்பதால் மன அழுத்தம் அதிகமாகக்கூடும்என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

ஓய்வு நேரத்தை உண்டாக்கிக் கொண்டு அவற்றைச் சந்தோஷமாகக் கழிக்கும் திறனோ, வாய்ப்போ இல்லாதவர்களுக்குப் பொறுமையின்மை அதிகரித்து மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வாளர்கள் சான்போர்டிலோ, ஜுலியன் ஹவுஸ் ஆகியோர் அறிவுறுத்துகிறார்கள்.

பசுமை சூழலில் வசியுங்கள்!
வேலை இல்லாதவர்களுக்கும் வேலை இழந்தவர்களுமான மன நெருக்கடி உள்ளவர்கள்; வேலை செய்தும் உரிய வருவாய் இல்லாமல் குறைவாகப் பெறுகின்றவர்கள்; தீவிரமான படபடப்பு உள்ளவர்கள் இத்தகையவர்களாக 35 வயது முதல் 55 வயது வரையானவர்கள் சிலரின் உமிழ் நீர் மாதிரிகளைப் பெற்று ஆராய்ச்சி செய்தனர்.
மன அழுத்தத்துக்கு ஏற்ப வெளியாகும் கார்ட்டிசோலின் என்ற ஹார்மோனை வெளிவிட்டனர். அவர்களில் மிகக்குறைந்த பசுமைச் சூழலில் வசிக்காதவர்களின் கார்டிசோல்ஸ் ஆரோக்கியமில்லாதிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி ஆராய்ச்சிமையம் இந்த விந்தையான ஆராய்ச்சியை நடத்தியது. இதன் இயக்குநர் கேத்ரீன் வார்டு தாம்சன் பசுமை சூழ்நிலையை உருவாக்கி, அந்தச் சூழலில் வசிப்பதன் மூலம், பக்கவிளைவுகள் தரக்கூடிய மன அழுத்த மருந்துகள் இல்லாமலேயே அமைதியும் ஆனந்தமுமான வாழ்க்கை பெறலாம்என்று கூறுகின்றார்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets