கருவேப்பிலையை ஏன் உணவில் சேர்க்க வேண்டும்
வியாழன், 7 ஜூன், 2012
கறிவேப்பிலை நாம் அனைவருக்கும் தெரிந்ததே. பொதுவாக நம்
அன்றாட உணவில் சேர்க்கப்படும் பொருள் தான். ஆனால் சிலர் சாப்பிடும் போது அதை தனியாக எடுத்து வைத்து
விடுவார்கள். கேட்டால் பிடிக்காது என சாக்கு போக்கு சொல்வார்கள்.
கறிவேப்பில்லையின் மகிமை தெரிந்தால் அதை வெறும் வாயிலேயே
சாப்பிடுவீர்கள். இதில் அதிகளவில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிகளவு ஜீரணம்
செய்யும் சக்தியும் கறிவேப்பிலைக்கு உண்டு. மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும்
சக்தியும் இதற்கு உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பொதுவாக பெண்களுக்கு உள்ள முக்கிய பிரச்சனை முடி உதிர்வது.
கருவேப்பிலையை தினமும் வெரும் வாயில் 4 இலைகளை மென்று தின்றாலே போதும் முடி உதிரும்
பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு அடர்த்தியான கூந்தலையும் பெறலாம்.
வாரம் இருமுறை கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலை நன்கு
அரைத்து விழுதை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால் முடி
அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
மேலும் கறிவேப்பிலையை காய வைத்து அதனுடன் துவரம் பருப்பு
மற்றும் கடலை பருப்பு, கடுகு, சிரகம், வெந்தயம் போன்றவற்றை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு
தினமும் உணவில் நெய் அல்லது நல்லெண்னண சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு பசியை துண்டும் ஆற்றலும்
இதற்கு உள்ளது. உடலை சமநிலையில் வைக்கவும் இது உதவுகிறது.