கிரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்ட் வரும்போது கொஞ்சம் ஷாக் ஆகி இருப்பீங்க..
வியாழன், 21 ஜூன், 2012
முன்பெல்லாம் வெளிநாட்டுக்குப் போகிறவர்கள்... நம்ம ஊர்
கரன்சியை போகிற நாட்டு கரன்சிக்கு தகுந்த மாதிரி மாற்றி எடுத்துச் செல்ல
மெனக்கெடுவார்கள். இப்போது அந்தப் பிரச்சனைக்கு ஃபாரின் கிரெடிட் கார்டு தீர்வாக
வந்துவிட்டது.
எப்பவுமே
உங்களுக்குன்னு ஒரு பட்ஜெட் இருக்கும் இல்லையா...அந்த பட்ஜெட்டோட வெளிநாட்டில
இன்னொன்றையும் மனசுல வெச்சுக்குங்க.. அதாவது நீங்க பயணம் மேற்கொள்கிற நாட்டோட
கரன்சிக்கு நம்ம கரன்சியோட மதிப்பு என்னன்னு? இப்படி கால்குலேட் பண்ணிகிட்டே ஷாப்பிங், டைனிங், டிக்கெட் வாங்குறதுன்னு எல்லா இடங்களிலும் தைரியமாக
கிரெடிட் கார்டை நீட்டுங்க... எல்லா செலவும் செய்துவிட்டு கிரெடிட் கார்ட்
ஸ்டேட்மெண்ட் வரும்போது கொஞ்சம் ஷாக் ஆகி இருப்பீங்க...ஒரு 5 அல்லது 6 சதவீதம் உங்களோட கால்குலேஷனிலிருந்து எகிறியிருக்கும்...அது
எப்படி வந்துச்சுன்னு மண்டையை போட்டு பிய்ச்சுக்காமல் வங்கி சேவை மையங்களை அழைத்து
விளக்கம் கேட்டலாம் அவர்கள் என்ன சொல்வார்கள்?
3 வகையான சேவை கட்டணத்தை பற்றி விலாவாரியாக விளக்கி உங்களை
சமாதானப்படுத்துவார்கள்..
முதலாவது
கரன்சி கன்வெர்ஷன் கட்டணம் பற்றி சொல்வாங்க.. எப்பவெல்லாம் உங்களோட மாஸ்டர் கார்டு
அல்லது விசா கார்டு மூலம் வெளிநாட்டில் பணம் எடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் 1 முதல் 2 சதவீதம் வரை கரன்சி கன்வெர்ஷன் கட்டணம் வசூலிக்கப்படும்.
அடுத்ததாக
ஓவர்சீஸ் டிரான்ஸாக்ஷன் கட்டணம்... வெளிநாட்டில் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதற்காக 2.5 முதல் 3 .5 சதவீதம் உங்கள் செலவில் இருந்து கூடுதலாக வசூலிக்கப்படும்.
கேஸ்
வித்டிராவல் கட்டணம்.. இந்த அனுபவம் பொதுவானது... இந்தியாவுக்குள்ளேயே கூட பணம்
வித்டிராவல் செய்வதற்கே கூடுதல் கட்டணம் எடுக்கப்படும்போது வெளிநாட்டில் சொல்ல
வேண்டுமா?. இதுவும் உங்களை ஷாக்கடிக்க வைக்கக் கூடியதாக இருக்கும்.
இந்த
வகையில் தான் உங்கள் கால்குலேஷனில் 5 முதல் 6 சதவீதம் கூடுதலாகி இருக்கும். முன்னரே இதைத் தெரிந்து
கொண்டால் ஷாக்கிலிருந்து தப்பிக்கலாம்..