உங்கள் வருகைக்கு நன்றி

உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க

சனி, 23 ஜூன், 2012


பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனை வளர்ப்பதில்அவர்கள் படிக்கும் நேரத்தைவிடஅன்றாட சுகாதார செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கின்றன எனஆய்வு ஒன்றில் தெரிய வந்ததுள்ளது.

இந்திய மருத்துவக் கழகம்சென்னைமும்பைடில்லிகோல்கட்டா ஆகிய பெருநகரில், "பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனில்அவர்களின் அன்றாட சுகாதார செயல்பாடுகளின் பங்குஎனும் தலைப்பில்ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது.

500 பேரிடம் சோதனைஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், 500 பெற்றோரிடம், 40 குழந்தை நல மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள்:

1.    தேர்வுகளில், 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் மற்றும் பள்ளி வருகைப்பதிவு கொண்ட மாணவர்கள் ஒரு குழுவாகவும் (குழு 1); 80 சதவீதத்திற்கு குறைவானவர் மற்றொரு குழுவாகவும்(குழு 2) பிரித்து ஆய்வு செய்ததில்பள்ளி வருகைப்பதிவுக்கும்மதிப்பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

2.    தினமும் குளித்தல்உணவு அருந்தும் முன் கை கழுவும் பழக்கம்உறங்கும் கால அளவுவெளிப்புற விளையாட்டு ஆகிய காரணிகள்இவ்விரு குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளின் உடல் சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுமாணவர்களின் வருகைப் பதிவேட்டில் எதிரொலிப்பதும் தெரிய வந்துள்ளது.

தொற்று நோய் பாதிப்பு:

அதாவதுதினமும் குளிப்பதுஅவ்வபோது கை கழுவுவது போன்ற அடிப்படை சுகாதாரத்தைகுழு 1ல், 68 சதவீதம் பேர் மற்றும் குழு 2ல், 19 சதவீதம் பேர் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக,இரண்டாவது குழுவைச் சேர்ந்த சேர்ந்த மாணவர்கள்உடல்நல பாதிப்பால்குறிப்பாக குடல் சார்ந்த தொற்றால் பாதிக்கப்பட்டுபள்ளிக்கு அதிகம் விடுப்பு எடுத்துள்ளனர்.

குழு 2ல், 43 சதவீதம் பேர் மட்டும்ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் படிப்பது, 39 சதவீதம் பேர்ஒரு நாளைக்கு மணி நேரத்திற்கு குறைவாக உறங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாறாககுழு1ல், 63 சதவீதம் பேர்ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் படிப்பது, 15 சதவீதம் பேர் மட்டும்,ஒரு நாளைக்கு மணி நேரத்திற்கு குறைவாக உறங்குகின்றனர்.இவ்வாறுஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு தேவைஇந்திய மருத்துவ கழக பொதுச் செயலர் கூறும்போது, ""ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கஅன்றாடம் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை சுகாதார பழக்க வழக்கங்கள் குறித்துபள்ளி குழந்தைகளுக்குபெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets