உங்கள் வருகைக்கு நன்றி

வெளிநாட்டு பொருட்கள் வாங்குகிறீர்களா? நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் எச்சரிகைகள்

ஞாயிறு, 3 ஜூன், 2012


வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் பலரிடம் உண்டு. ஆனால், அவற்றை வாங்கும்போது, நுகர்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பணி நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும், பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர். அப்போது, அங்கிருந்து எலக்ட்ரானிக் மற்றும் வேறு சில பொருட்கள் வாங்கி வருகின்றனர். சில பொருட்கள், வாங்கிய சில மாதங்களிலேயே பழுதடைந்து விடுகின்றன. இதனால், நுகர்வோருக்கு பல ஆயிரங்கள் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அளித்த விளக்கம்:

*
எலக்ட்ரானிக் பொருட்கள், நம் நாட்டில் வேலை செய்யுமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு நாட்டிலும் அவர்களது மின் சப்ளைக்கு ஏற்ப பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.

*
பொருட்கள் வாங்கும் கடையின் கிளைகள் நம் நாட்டில் இருக்கிறதா? சேவையாளர்கள் இருக்கின்றனரா? என்பதை, பொருள் வாங்கும் முன் கடைக்காரரிடம் விவரமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

*
ஒரு நாட்டில் ஒரு பொருளுக்கு கொடுக்கப்படும் உத்திரவாதம், மற்றொரு நாட்டில் செல்லுபடியாகுமா என்பதை கவனித்து வாங்க வேண்டும். பொதுவாக, அயல்நாட்டில் வாங்கும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை.

தவறு நடந்தால்?பொருள் வாங்கிய கடை நிர்வாகத்தை பேக்ஸ் அல்லது இ-மெயில் மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும். கடை நிர்வாகத்திடம் இருந்து சரியான பதில் வராவிட்டால், இலவச ஆலோசனை கூறும் நுகர்வோர் மன்றங்களை நாடலாம்.அயல்நாட்டில் வழக்கு தொடுப்பது எளிதான காரியம் அல்ல. அதிக செலவும், காலதாமதமும் ஏற்படும்.

எந்த சட்டம் செல்லும்?இண்டர்நெட் மூலம் சிங்கப்பூரில் இருந்து பொருட்கள் வாங்கும் போது, இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் செல்லுபடியாகுமா அல்லது சிங்கப்பூர் சட்டமா என்பதை, பொருட்கள் வாங்குவதற்கு முன்பே வெப்சைட் மூலமாக தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகே பொருட்களை வாங்க வேண்டும்.
இவ்வாறு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets