வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் தேர்வு செய்யும் விஷயங்களால் வருகிறது.
செவ்வாய், 12 ஜூன், 2012
'லட்சியக் கனவை அடையும் வகையில் படிக்க
வேண்டும், பிளஸ் 2 வரை மதிப்பெண் பெறுவதற்காக படித்து வந்திருப்பீர்கள். இனி மதிப்பெண்
பெறுவதற்கு படிப்பதுடன், நாம் என்ன படிக்கிறோம் என்பதை புரிந்து
கொண்டும் படிக்க வேண்டும். பிளஸ் 2 வரை படிப்பில்
இருந்த அழுத்தத்தை போக்குவதற்காக கல்லூரிக்கு வந்த முதல் ஆண்டில் வால் தனம்
செய்வதும், இறுதி ஆண்டு, செய்வது
புரியாமல் விழிப்பதும் பலரின் வழக்கமாக இருக்கிறது. படிக்கும்போது எதற்கு, ஏன் என கேள்வி கேட்டு படிக்க பழகுங்கள்.
கடினமான பாடங்களை சவாலாக எடுத்துக் கொண்டு
படியுங்கள். ஒரு போதும் ஊக்கத்தை கைவிட்டு விடாதீர்கள். நமக்கு நாமே தரும் உள் ஊக்கத்துடன், மற்றவர்கள் தரும் ஊக்கத்தையும் நாம் பெற வேண்டும். படிக்கும்
பாடத்தை பகுத்தறிந்து படிக்க பழக வேண்டும். நமது பாடத்தில் சாதனையாளராகும் வகையில்
படிக்க வேண்டும். எதையும் புரியாமல் படிக்காதீர்கள். ஆசிரியர் நடத்துவதை புரிந்து
கொள்ளுங்கள். தெரியாதவற்றை அவரிடமே கேளுங்கள். உங்கள் லட்சியக் கனவு எதுவோ அதை
அடையும் வகையிலான படிப்புகளை தேர்வு செய்து அதற்கேற்ப படிக்க வேண்டும். நம்
லட்சியம் எது என்பதை துணிச்சலாக வெளியில் சொல்லும் அளவுக்கு நம் செயல்பாடுகள்
இருக்க வேண்டும். சரியான பாடத்தை தேர்ந்தெடுத்து விட்டால் அதன் பிறகு நம்
லட்சியத்தை அடைவது எளிது. மாணவர்களும், பெற்றோர்களும்
கல்லூரிக்குச் சென்று, அங்கு படிக்கும் மாணவர்களை சந்தித்து, அங்குள்ள வசதிகள், வேலைவாய்ப்பு குறித்து கேட்டு அறிய வேண்டும்,
ஒரு பெரிய கூட்டத்தில் ஒருவராக இருக்கப்
போகிறோமா, தனித்துவம் வாய்ந்த குழுவில் ஒருவராக
இருக்கப் போகிறோமா என்பது முற்றிலும் உங்கள் கையில் தான் உள்ளது. வாழ்க்கையில்
வெற்றி என்பது நாம் தேர்வு செய்யும் விஷயங்களால் வருகிறது. நம்முடைய அப்பா, அம்மா என்னவாக இருக்கின்றனர், எந்த பள்ளியில் படித்தோம் என்பதன் மூலம் நமது
வெற்றி அமைவதில்லை.
நமக்குள் உள்ள திறமைகள் மூலமாகவே நம்முடைய
வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு உறுதியான மனப்பான்மை வேண்டும். ஒரு
விஷயத்தில் மிகுந்த ஆவல் இருந்தால், உங்களால் அந்த
விஷயத்தை கண்டிப்பாக வெற்றிகரமாக முடிக்க முடியும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்
கலாம் கனவு காணுங்கள் என்றார், நமக்கு கனவு என்பது எது என்றே தெரியாமல்
உள்ளது. தூக்கத்தில் வருவது அல்ல கனவு; தூங்க விடாமல்
செய்வது தான் கனவு. நாம் தேர்ந்தெடுக்கும் விஷயத்தை முடிக்க வேண்டும் என்ற உறுதி
வேண்டும். கடின உழைப்பும் மிகவும் அவசியம். கடின உழைப்பும், அதிர்ஷ்டமும் சேர்ந்து தான் வரும்.
எந்த படிப்பை தேர்வு செய்யலாம், எதற்கு நல்ல வேலைவாய்ப்பு ஐ.டி., துறை 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து மீண்டும்
வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. சிவில், மெக்கானிக்கல், பேஷன் டிசைன் என எந்த படிப்பை படித்திருந்தாலும், ஐ.டி., கம்பெனியில் வேலைக்கு எடுக்கின்றனர்.
மாணவர்களும், பெற்றோரும் கல்லூரிக்குச் சென்று, அங்கு படிக்கும் மாணவர்களை சந்தித்து, அங்குள்ள
வசதிகள், வேலைவாய்ப்பு குறித்து கேட்டு அறிய வேண்டும்.
மாணவர்கள் குறைந்த வாய்ப்புகளும், அதிக போட்டியும் உள்ள பிரிவுகளை தேர்ந்தெடுக்கக் கூடாது. அதிக வாய்ப்புகளும், குறைந்த போட்டியும் உள்ள துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கம்ப்யூட்டர்
சயின்ஸ் படிப்பில், சைபர் செக்யூரிட்டி, டேட்டா ஸ்டோரேஜ் ஆகிய பிரிவுகளில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இ.சி.இ., படிப்பில், ஆர்.எப்.ஐ.டி., மொபைல்
டெக்னாலஜி, சர்பேஸ் மவுன்டிங் டெக்னாலஜி ஆகிய
பிரிவுகளில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. நாடு முழுவதும் மின்சார பற்றாக்குறை
நிலவுவதால், எலக்ட்ரிக்கல் பாடம் உள்ள இ.இ.இ., படித்தால், நல்ல வாய்ப்புகள் உள்ளன. சிவில் படிப்பில்
கடல்சார் பாடம், நிலநடுக்கம் குறித்த பிரிவுகளுக்கும், மெக்கானிக்கல் படிப்பில் வெல்டிங், பைப்பிங், தெர்மல் எனர்ஜி ஆகிய பிரிவுகளுக்கும் வரவேற்பு உள்ளது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய
நான்கு மாதங்களில் மாணவர்கள், செய்தித்தாள் வாசித்தல், பொது அறிவு, ஆங்கில மொழித் திறன் உள்ளிட்ட திறமைகளை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
படித்தால் 100 சதவீத வேலை வாய்ப்பு உள்ளவை மெரைன்
இன்ஜினியரிங், நாட்டிக்கல் சயின்ஸ் ஆகிய கடல்சார்
படிப்புகள். இத்துறையில் எட்டு மாதம் கடலில் வேலை செய்தால், நான்கு மாதம் வீட்டில் இருக்கலாம்.