உடல் மாதிரியே மனமும் ஆரோக்கியம் ஆக வேண்டுமா /
திங்கள், 11 ஜூன், 2012
உடல்
ஆரோக்கியம் மட்டுமே ஒருவருக்கு போதுமானதல்ல. மனஆரோக்கியமும் முக்கியம். மனதை
கண்டபடி ஒடவிட்டு தேவையில்லாத பிரச்சினைகளையெல்லாம் மூளைக்குள் திணித்து விட்டு, உடலுக்கு மட்டும் பயிற்சி கொடுப்பது எந்த விதத்திலும்
சரியாக இருக்காது. இம்மாதிரியாக மனதை பாதிக்கும் முதல் விஷயம் எது என்று
பட்டியலிட்டால், முதல் இடத்தில் வந்து நிற்பது பொறாமை.
தெரிந்தவர்கள் யாராவது உங்களை விட பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தால் அப்போது ஒட்டிக் கொள்கிறது பொறாமை. மற்றவர்களோடு உங்களை எப்போதும் ஒப்பிட்டுப் பார்க்கும் குணம் தான் கடைசியில் இந்த பொறாமையை உங்களுக்குள் அனுமதித்து விடுகிறது. ஏற்றத்தாழ்வு என்பது எப்போதுமே நம்முடன் கலந்துபோன ஒரு விஷயம்.
இது பணம் படைத்தவர்களிடம் தொடங்கி பிச்சைக்காரர்கள் வரை பரவிக் கிடக்கிறது. தனக்கு சமமான பணம் படைத்த ஒருவர் திடீரென புதிதாக ஒரு எஸ்டேட் வாங்கி விட்டால், இந்த பணக்காரர் மனதளவில் சோர்ந்து விடுகிறார். தன் அந்தஸ்தை சுட்டிக்காட்ட அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிடுவதிலேயே அவர் நேரம் கரைகிறது.
இதில் தன் குடும்பத்தையும் வலிய இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்களையும் பாடாய்ப்படுத்துபவர்களும் உண்டு. மற்றவர்கள் வளர்ச்சியை பார்த்து நாமும் அவர்கள் மாதிரி உயர எந்த மாதிரியான வாய்ப்பு இருக்கிறது என்பதை சிந்திக்க தடையாக இருப்பதே பொறாமைக் குணம் தானே. எனவே பொறாமையை விட்டொழிப்போம். அப்போது உடல் மாதிரியே மனமும் ஆரோக்கியம் ஆகி விடும்.