உங்கள் வருகைக்கு நன்றி

பப்பாளியை சாதாரமாக நினைக்காதீங்க !

சனி, 2 ஜூன், 2012



 அனைவருக்கும் ஏற்ற பழம் பப்பாளி
 *  கலோரியும், கொழுப்பும் குறைவாக உள்ள பழம் என்பதால் பப்பாளி உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. 100 கிராம் பப்பாளியில் கிடைக்கும் கலோரியின் அளவு 32 தான்.
 *  பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உப்பு போன்றவை ரத்தக் கொதிப்பைக் குறைக்கும்.
 *  வயிற்றில் புழு, பூச்சிகளால் அவதிப்படுகின்றவர்களுக்கும் ஜீரணசக்தி கோளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியில் "பாப்பைன்' எனும் பொருள் உதவுகிறது.
 *  பலமான விருந்துக்குப் பிறகு பப்பாளி பழத்துண்டுகள் ஐந்தாறு சாப்பிட்டால் போதும். உடனே ஜீரணமாகிவிடும்.
 *  உடலில் இறந்து போன செல்களை நீக்கவும், தோலை வளவளப்பாக வைக்கவும் பப்பாளி சிறந்த கருவி.
 *  மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகளை எளிதில் குணமாக்கும்.
 *  100 கிராம் பப்பாளி பழத்தில் பெண்களின் ரத்தசோகையைப் போக்கும் திறன் உள்ளது.
 *  பப்பாளியில் உள்ள " பெப்சின்' என்ற பொருள் மலச்சிக்கலும், வயிற்றுக்கோளாறும் வராமல் தடுக்கிறது.
 *  மாம்பழத்திற்கு அடுத்த வைட்டமின் "ஏ' அதிகம் உள்ள பழம் பப்பாளி.
 *  பப்பாளியை தொடர்ந்து உட்கொண்டால் பார்வைத்திறன் அதிகரிக்கும்.
 *  ஒரு தேக்கரண்டி பப்பாளி விதைகளை அரைத்து அதில் பத்து துளி எலுமிச்சம்பழ ரசத்தை விட்டு ஒருமாதம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெறும். இதே காலகட்டத்தில் தினமும் ஒரு பப்பாளி பழமும் சாப்பிட்டு வர வேண்டும். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets