சாப்பிட்டவுடன் ஒவ்வொரு முறையும் பல் துலக்குவது சரியா ?
வியாழன், 7 ஜூன், 2012
சாப்பிட்டவுடன்
ஒவ்வொரு முறையும் பல் துலக்குவது பற்களுக்கு கேடு விளைவிக்கும் என்று
ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக
காலையிலும் இரவிலும் 2 வேளை
அவசியம் பல் துலக்க வேண்டும் என்பது மருத்துவ பரிந்துரை. ஆனால் உணவு, ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொண்ட பின்
பல் துலக்குவதை பலர் வழக்கமாகவே கொண்டுள்ளனர். இது ஆரோக்கியத்துக்கு பதில்
பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பல முறை பல்
துலக்குவது பற்களுக்கு வலுசேர்க்கும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் இத்தகவல்
வெளியாகி உள்ளது.
குறிப்பாக அமில தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கின்றனர். அமெரிக்காவில் உள்ள அகடமி ஆஃப் டென்டிஸ்ட்ரி அமைப்பின் தலைவர் டாக்டர் ஹோவர்ட் கேம்பிள் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வுத் தகவல் குறித்து கேம்பிள் கூறியதாவது: அடிக்கடி பல் துலக்குவது, உணவு உட்கொண்ட பின்னர் பல் துலக்குவது பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள உணவுகளை உட்கொண்ட பின்பும், நுரை ததும்பும் பானங்களை அருந்தியவுடனும் பல் துலக்குவதை தவிர்க்க வேண்டும்.
இவற்றை உட்கொண்ட பின் பல் துலக்கினால் பல்லின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கும் எனாமல் படிமம் அதற்கு உள்ளிருக்கும் ‘டென்டின் பகுதி ஆகியவை முற்றிலும் பாதிக்கும். இதனால் உணவின் அமிலத்தன்மை பற்களின் உட்பகுதிகளில் எளிதாக ஊடுருவி உட்பகுதிகளுக்கும் கேடு விளைவிக்கும். எனவே பற்களை பாதுகாத்து கொள்ள உணவு உட்கொண்டவுடன் பல் துலக்குவதை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆனால் வெறும் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது நல்லது. இவ்வாறு கேம்பிள் கூறியுள்ளார்.