உங்கள் வருகைக்கு நன்றி

உடல் குண்டாக இருந்ததால் தற்கொலையா ?

வெள்ளி, 29 ஜூன், 2012


தற்கொலைக்கு எத்தனையோ காரணங்கள் படித்திருக்கிறோம். உடல் குண்டாக இருந்ததால் மனம் வெறுத்து உயிரை மாய்த்தது புதியது. அதுவும் கல்லூரி பேராசிரியை. 
இதற்கெல்லாமா விரக்தி என்று பிறர் நினைக்கலாம். அனுபவித்த,அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். மன பாரத்துக்கு சற்றும் இளைத்ததில்லை உடல் பாரம். சர்வதேச அளவில் பெரிய உயிர்க்கொல்லியாக பருமன் உருவெடுப்பதாக உலக நல நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரத்த அழுத்தம் முதல் பக்கவாதம் வரையிலும் பலதரப்பட்ட நோய்களுக்கு பருமன் அழைப்பு விடுப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ஆரோக்யம் தவிரவும் முக்கியமான பல பிரச்னைகள் இதனால் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று சுற்றுச்சூழல் பிரச்னை. குண்டான உடலுக்கு நிறைய உணவும் தண்ணீரும் தேவைப்படுகிறது. இருக்கிற ஜனத்தொகையின் பசியும் தாகமும் தீர்க்க ஆதாரங்கள் போதாத நிலையில் இது கூடுதல் சுமை. 

இந்த கணக்கை பாருங்கள்: குண்டாக இருப்பவர்களால் பூமியின் எடை165 லட்சம் டன் அதிகரிக்கிறதாம். இது உண்மையான ஜனத்தொகையைவிட கூடுதலாக 24.2 கோடி பேர் இருப்பதற்கு சமம். பஸ், ரயில், விமானம் என அனைத்து வாகனங்களிலும் சீட் அளவை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் பயணிகள் எண்ணிக்கை குறையும்.  இழப்பை ஈடுகட்ட கட்டணம் உயரும். ஒல்லியாக இருப்பவர்களும் அதை செலுத்த நேரும். எட்டு பேர் செல்லக்கூடிய லிப்டில் உ.ப ஆசாமிகள் ஏறினால் ஐந்தாறுக்கு மேல் இடமிருக்காது. இப்படி அடுக்கிக் கொண்டே போகிறது ஆய்வறிக்கை. என்னதான் தீர்வு

கோககோலாவை தடை செய் என அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது. ஒன்றரை லிட்டர், இரண்டு லிட்டர் கோக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க நியூயார்க் மேயர் முயற்சி செய்கிறார். அதிகபட்சம் 16அவுன்சுக்கு மேல் விற்கக்கூடாது என்கிறார். அரை லிட்டருக்கும் குறைவு. எல்லாரும் கோக் குடித்துதான் குண்டாகிறார்களா என்று கோக் நிர்வாகிகள் சீறுகின்றனர். ஃபாஸ்ட்ஃபுட் ரகங்கள் எல்லாமே பருமனுக்கு காரணம் என்பதால் அனைத்தையும் தடை செய்ய சொல்கிறது ஒரு கோஷ்டி. பேக்கரிகள், ஸ்வீட் கடைகளையும் விடக்கூடாது என்கிறது. சிகரெட்டையும் மதுவையும் ஒழிக்க முடியாத அரசாங்கம் ஃபாஸ்ட்ஃபுட், ஸ்வீட், கோலா மீது கைவைக்க முடியுமா,என்ன? 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets