உங்கள் வருகைக்கு நன்றி

டெங்குவும், சிக்குன் குனியாவும் அவசியம் அறிந்து கொள்வோம்

திங்கள், 4 ஜூன், 2012


டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் எஜிப்டி என்ற கொசுதான், சிக்குன் குனியாவையும் உண்டாக்குகிறது. டெங்குக்கும், சிக்குன் குனியா நோய்க்கும் அறிகுறிகளில் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த இரண்டிற்கும் காய்ச்சல், தலைவலி, உடல் வலிதான் இருக்கும். ஆனால், டெங்கு காய்ச்சலில் உடலில் ரத்த போக்கு இருக்கும். சிக்குன் குனியாவில் ரத்த போக்கு இருக்காது. கை, கால்களில் உள்ள மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். கடுமையான வலி இருக்கும். டெங்கு, சிக்குன் குனியா மழைக்காலங்களில் தீவிரமடையும். குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே எளிதாக தாக்கக்கூடியது. தற்போது பள்ளிக்கூடங்கள் திறந்துவிட்டன. அதனால், பொது சுகாதாரம், நகராட்சி, உள்ளாட்சி, பொதுப்பணித்துறை, சமூக நலம் என அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால்தான் டெங்குவையும், சிக்குன் குனியாவையும் முழுமையாக ஒழிக்க முடியும்.
      
2
வகை கொசுக்களும் பகலில் கடிக்கும்

ஈடிஸ் என்ற குடும்பத்தில் எஜிப்டி மற்றும் ஆல்போ பிக்டஸ் என 2 வகை கொசுக்கள் உள்ளன. எஜிப்டி என்ற கொசு டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது. இந்த வகையான கொசு வீட்டில் உள்ள நீர்த்தேக்க தொட்டி, தேங்காய் ஓடு, ஏசி, பிரிட்ஜ், டயர், வாளி, ஆட்டுக்கல், பூந்தொட்டி மற்றும் உடைந்த பாத்திரங்களில் தேங்கும் சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தி ஆகிறது.
மற்றொரு வகையான பிக்டஸ் என்ற கொசு காடுகள், மலைகள், கற்குவியல், மரபொந்து, ரப்பர் தோட்டம், வாழைத்தோட்டம் போன்ற இடங்களில் முட்டையிட்டு உற்பத்தியாகுகிறது. இந்த பிக்டஸ் கொசு காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்துவிட்டது. திருவனந்தபுரம், ஆலப்புழா, கன்னியாகுமரி மாவட்டம் போன்ற இடங்களில் தற்போது வாழ்ந்து வருகிறது என 2009ம் ஆண்டே மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்திருந்தது. பிக்டஸ் கொசுவும் டெங்கு மற்றும் சிக்குன் குனியாவை பரப்பக்கூடியது. இந்த இரண்டு வகை கொசுக்களும் பகலில் மட்டுமே மனிதனை கடிக்கக்கூடியது.

என்ன காய்ச்சல்...? ரத்த பரிசோதனை முக்கியம்

டெங்கு சாதாரண காய்ச்சல், டெங்கு ரத்த போக்கு காய்ச்சல், டெங்கு அதிர்ச்சி நோய் 3 கட்டங்களை கொண்டது. முதல் கட்ட காய்ச்சல் வந்தால் குளிர் காய்ச்சல், உடல் வலி, கண்ணுக்கு பின்னால் வலி, அதிக தலை வலி உட்பட சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருக்கும். இரண்டாம் கட்ட காய்ச்சலின்போது கண், மூக்கு, நக கண், பல் ஈரில் போன்றவற்றில் ரத்தம் வெளியேற தொடங்கும். உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். அதன்பின், உடலில் அம்மை போன்று சிறு புள்ளிகள் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும். மலம் கருப்பாகவும், சிறுநீர் சிவப்பு நிறத்திலும் போகும்.  டெங்குவின் மூன்றாம் கட்டமான அதிர்ச்சி நோய் ஏற்பட்டால் உடலில் உள்ளேயும், வெளியேயும் அதிக அளவு ரத்த போக்குவரத்து இருக்கும். இதையடுத்து சுயநினைவு இழக்கும். நினைவுகள் தடுமாறும். அதன்பின், கோமா நிலைக்கு சென்று உயிரிழப்பு ஏற்படும். டெங்கு காய்ச்சலை 2ம் கட்டத்திலேயே கண்டுபிடித்து விட்டால், உயிரிழப்பை தடுத்து விடலாம். அதனால், காய்ச்சல் வந்தால் கட்டாயம் உடனடியாக ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு என்ன காய்ச்சல் வந்துள்ளது என்பதை முழுமையாக கண்டுபிடிக்க முடியும்.


Medicinal Tips (மருத்துவ குறிப்புகள்)
டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி...



டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Step1 

ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

Step2

கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும்.

Step3

அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற கரும்பு சக்கரையையும், ஒரு டேபிள் ஸ்பூண் YEAST ம் மிக்ஸ் பண்ணி நன்றாக கரைக்கவும். (சீனி எனும் சாதா சர்க்கரையையும் பயன்படுத்தலாம்)

Step4

வெட்டி எடுத்த பாட்டிலின் மேல் பகுதியை தலை கீழாக கவிழ்த்து புனல் போல் கரைசல் உள்ள பாட்டிலை மூடவும். 

Step5

இந்த பாட்டிலின் சுற்று சுவரை கறுப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும்.

Step6

இந்த கரைசல் உல்ள பாட்டிலை உங்கள் ரூமின் ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான் நம் வேலை.

இந்த கரைசலில் இருந்து கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயு வெளி வந்து கொண்டிருக்கும். இதனால் கொசுக்கள் கவரப்பட்டு இந்த பாட்டிலை நோக்கி படையெடுத்து வந்து பாட்டிலில்ன் உள்ளே செல்லும். அப்போது அங்குள்ள இனிப்பு கரைசலில் ஒட்டிகொண்டு வெளி வர முடியாமல் அங்கேயே சமாதியடையும்.

(
அடையனும்..ஹூம்....நமக்கு இவ்வளவு அறிவு இருப்பதை தெரிந்து இதிலிருந்தும் தப்பிக்க ஒருவேளை பாழாய்ப் போன கொசுக்கள் புதிய யுக்தி எதையாவது கடைப் பிடிக்க ஆரம்பித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அவ்வளவு தான் இப்போதே சொல்லிப்புட்டேன்.)

நம்மை கொசுக்கள் கடிப்பதற்கு நம் மேலுள்ள கோபமோ, அன்போ காரணமல்ல. நாம் வெளிவிடும் கார்பண்டை ஆக்ஸைடு எனும் வாயுவால் கவரப்பட்டு தான் அவைகள் நம்மை நோக்கி வருகின்றன. இப்போது அந்த வேலையை கரைசல் உள்ள பாட்டில் கவனித்துக் கொள்ளும்.
இதன் பலனை 4x5 நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

3
வாரங்களுக்கு ஒரு முறை கரைசலை மாற்றி விட வேண்டும்.

எப்படியோ இந்த வழியிலாவது கொசுக்கள் ஒழிந்தால் சரி தான். இந்த எமன்களிடமிருந்து நம்மை காப்பாற்ற இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும் என இறையை வேண்டும் உங்கள்

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets