திட்டமிட்டு செய்ததால் வெற்றி,
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, விண்ணமங்கலம் கிராமத்தில், ஒருங்கிணைந்த விவசாய பண்ணை நடத்துவது பற்றி ஜெகன் வின்சென்ட்: அமெரிக்கா வில், மென்பொருள் துறையில், வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அங்கே, கொஞ்ச விவசாய நிலத்தில், நிறைய லாபத்தை விவசாயிகள் பார்த்தனர். குறிப்பாக, சிறிய இடத்தில், மீன் குட்டை போட்டு, அதில் மீன் வளர்ப்பர்; அதன் மேல் தொட்டிகள் கட்டி, செடிகள், பயிர்களை வளர்ப்பர்.இது போன்ற விவசாயத்தை, 'அக்வாபோனிக்ஸ்' என்றும், 'ஹைட்ரோபோனிக்ஸ்' என்றும் அழைக்கின்றனர். 2003ல், நாடு திரும்பியதும், இந்த, 1.25 ஏக்கர் இடத்தை வாங்கி, நவீன விவசாயம் செய்யத்
துவங்கினேன்.முதலில், 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட, மீன் தொட்டி அமைத்தேன். அதன்மேல், கான்கிரீட் இணைப்புகளை ஏற்படுத்தி, அதில் சிறிய தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகளில் செடிகள், பூக்கள், பயிர்களை வளர்க்கத் துவங்கினேன்.அப்படியே படிப்படியாக, மீன் தொட்டியின் அளவை, 70 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது போல, அதன் மேல் உள்ள வாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து உள்ளேன். மேலும், உயர் மட்டத்தில் வளரும் செடிகள், கொடிகள் போன்ற வற்றை வளர்த்து, அதன் மூலம் காய்கறிகளை பயிரிடுகிறேன்.கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா என, ஒன்பது வகையான மீன்களை வளர்க்கிறேன். அது போல, தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளையும் பயிரிடுகிறேன். தரையில் கிடைக்கும் மகசூலை விட, பக்கெட்டில் வளரும் செடிகள் மூலம், கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
இதில் பல நன்மைகள் உண்டு. ஒரு பக்கெட்டில் வளரும் செடியில் நோய் தாக்கினால், அந்த பக்கெட்டை மட்டும் அப்புறப்படுத்தி வைத்து விட முடிகிறது; இதனால், பிற செடிகளுக்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
இது போன்ற, பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நல்ல விளைச்சல் மட்டும் லாபம் சம்பாதிக்கிறேன். இந்த பண்ணையை துவக்க, இதுவரை, 35 லட்சம் ரூபாய் வரை, செலவு செய்து உள்ளேன். ஆனால், ஆண்டுதோறும், அந்த தொகையை விட, அதிக லாபம்
சம்பாதிக்கிறேன்.ஆண்டிற்கு, 30 டன் மீன் கிடைக்கிறது. இதிலிருந்து மட்டுமே, 54 லட்ச ரூபாய் கிடைக்குது. அது போல, மாதம், 3 டன் காய்கறிகளும் உற்பத்தியாகின்றன. அந்த லாபம் தனி. இது போக, கடக்நாத் கோழிகளையும் வளர்க்கிறேன்.
இப்படி ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வதால், 7 ஏக்கர் நிலத்தில் கிடைக்கும், விளைச்சல் மற்றும் லாபத்தை, 1.25 ஏக்கரில் எடுக்கிறேன்!
Read more...