உங்கள் வருகைக்கு நன்றி

பழங்களைவிட, உலர் பழங்களை தின்பதால் நன்மையா ?

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை,தீமைகள் குறித்து இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால், பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன், கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் பருமன் உண்டாகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும், சாறில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

அதாவது, 1 டம்ளர் பழச்சாறில், 5 ஸ்பூண் அளவு சர்க்கரை உள்ளது. எனவே, பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு டம்ளர் பழச்சாறில், 4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம், பழங்களைவிட, உலர் பழங்களை தின்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெற்றோர் எவ்வாறு, அவ்வாறே பிள்ளைகளும்,

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

குழந்தைகள் எப்போதும் மிகவும் சுறுசுறுப்பாகத் தான் இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் இருப்பதால் அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது. அந்த அட்டகாசத்தின் போது வீடு மிகவும் மோசமானதாக இருக்கும். எவ்வளவு தான் வீட்டை சுத்தம் செய்தாலும், குழந்தைகள் இருக்கும் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் அட்டகாசம் செய்யும் அவர்களுக்கு தங்கள் வீட்டை அசுத்தப்படுத்துவது ஒரு தவறு புரியாது. ஆகவே அவர்களுக்கு பெற்றோர்கள் தான் சுத்தத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு உதாரணமாக கோபம் வந்தால் பொருளை கண்ட இடத்தில் தூக்கிப் போடுதல், படிக்கும் போது பென்சில் சீவுவதை அப்படியே போடுதல், பேப்பரை கிழித்து போடுதல் போன்றவை. அதிலும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, மிகவும் பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* முதலில் அவர்களுக்கு சுத்தத்தின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, ஒரு விளையாட்டோடு சொல்லிக் கொடுத்தால், அவர்கள் மனதில் அது நன்கு பதியும். மேலும் அந்த சுத்தத்தால் பல அந்நியாவசிய வேலைகளை தவிர்க்கலாம் என்று சொல்ல வேண்டும். உதாரணமாக, வீட்டு அலமாரியில் துணிகளை அழகாக மடித்து வைத்து, பயன்படுத்தினால், அவசரமாக வெளியே செல்லும் போது எதையும் தேட வேண்டிய அவசியமிருக்காது என்று சொல்ல வேண்டும். அதை விட அவர்களுக்கு அதை ஒரு முறை செய்து காண்பித்தால், அவர்கள் மனதில் விரைவில் பதியும்.
* முக்கியமாக அனைத்து குழந்தைகளும் அவர்களது பெற்றோர் எவ்வாறு நடக்கின்றனரோ, அவ்வாறே பின்பற்றுவார்கள். ஆகவே அவர்கள் முன்பு நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது, அவர்களுக்கும் சுத்தம் செய்ய வேண்டும் என்று தோன்றும். மேலும் எப்போதும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் முறையில் சொல்லிக் கொடுத்தால், அவர்கள் நன்கு புரிந்து கொள்வர். குறிப்பாக அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது அப்பா என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே இதனை அவர்களது அப்பாக்கள் சொல்லிக் கொடுத்தால் நல்லது.
* வீட்டை சுத்தம் செய்வதை பெற்றோர்களே சோம்பேறித்தனமாக நினைக்க வேண்டாம். அவ்வாறு நினைத்தால் குழந்தைகளுக்கும் அது சோம்பேறித்தனத்தை எற்படுத்திவிடும். பின் என்ன சொன்னாலும் அவர்கள் செய்யமாட்டார்கள். மேலும் எந்த வேலை செய்யும் போதும் முழு கவனத்துடன் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுங்கள். அதனால் அறிவுக் கூர்மையடையும் என்பதையும் சொல்லுங்கள். முக்கியமாக வீட்டை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யும் பழக்கத்தை பின்பற்றுங்கள். மேலும் நீங்கள் வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் இருக்கும் போது, குழந்தைகளையும் அழைத்து, தங்களுடன் வீட்டை சுத்தம் செய்யும் வேலையை செய்யச் சொல்லுங்கள்.
வேண்டுமென்றால், குழந்தைகளிடம் அவ்வப்போது கிப்ட் கொடுத்து ஊக்குவிக்கலாம். இது குழந்தைகளுக்கு ஒருவித உற்சாகத்தைத் தருவதோடு, அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கும்.

குழந்தைகளுக்கு உணவின் மீதான விருப்பத்தை அதிகரிக்க!

அம்மாக்கள் கவனத்திற்கு!  என்னிடம் வரும் பெற்றோர், பெரும்பாலும் கூறும் ஒரே புகார், "என் பசங்க சாப்பிடவே மாட்டேங்கறாங்க...' என்பது தான். குழந்தைகள் குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடுவதற்கு, பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் அவையெல்லாம் கவலைப்படக் கூடிய காரணங்கள் இல்லை."நம்ம குழந்தை நன்றாக சாப்பிடட்டும்' என்ற எண்ணத்தில், வயிற்றுத் தேவையைவிட, அதிக அளவிற்கு டிபன் பாக்சில் நிரப்பி அனுப்புகின்றனர் பல அம்மாக்கள். அதிலிருந்து, தங்கள் தேவைக்குச் சரியாகச் சாப்பிட்டு விடுகின்றனர் குழந்தைகள். மீதி, அப்படியே டிபன் பாக்சில் உள்ளது, என்பதை உணர வேண்டும்.காலை, இரவு மற்றும் விடுமுறை நாட்களில், சுவையாக சாப்பிட்டுப் பழக்கப்படும் குழந்தைகள், பள்ளியில் ஆறிப் போன உணவைத் தான் சாப்பிட வேண்டிய கட்டாயம். ஆறிய உணவில், இயல்பாகவே சுவை குறைவதால், சாப்பிடும் ஆர்வம் குறைவதும் இயல்பே.அதே போல், பெரும்பாலான பள்ளிகளில், உணவு இடைவேளை போதுமான அளவிற்கு இருப்பதில்லை. குழந்தைகள் உணவை வெறுக்க, இதுவும் ஒரு காரணம்.எந்நேரமும், குழந்தைகளுக்கு, நொறுக்குத் தீனி கொடுப்பதையும், "ஜங்க் புட்' கொடுப்பதையும் நிறுத்துங்கள். அவற்றின் தீமைகளை நன்கு புரியும் விதத்தில் அடிக்கடி நினைவூட்டி, வீட்டில் சமைத்த உணவின் அருமையை உணர்வதுடன், பெற்றோரும் அதையே உண்ண வேண்டும். காலை, மதியம், மாலை, இரவு என, நான்கு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். மற்ற நேரம் எதுவும் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்ற கொள்கையை, பெற்றோர் கடைப்பிடித்தாலே, குழந்தைகள் ஆரோக்கியமான வீட்டு உணவை விரும்ப ஆரம்பித்து விடுவர்.செய்யும் உணவுகளில், சிறிய மாற்றங்களையும், சுவையையும் அதிகரிக்க வேண்டும். இதுவே போதும், குழந்தைகளுக்கு உணவின் மீதான விருப்பத்தை அதிகரிக்க!    
 குழந்தை மன நல மருத்துவர் கண்ணன்:

ஏன்? யோசியுங்கள்.

புதன், 14 ஆகஸ்ட், 2013

*  நீங்கள் விரும்பும் "வெற்றி' எது என்று தெளிவாக வரையறுத்துக்கொள்ளுங்கள். வெறுமனே பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியாகிவிடாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ரொம்பச் சிரமப்பட்டு எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேறியாகவேண்டும். அதேநேரம், உங்களைப்போல் கஷ்டப்பட்டு உழைக்காமல் முன்னுக்கு வருகிறவர்களும் இருப்பார்கள். அவர்களைப் பார்த்துப் புலம்பாமல், உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
*  
உங்களுடைய வெற்றி, தோல்வி இரண்டுமே எதேச்சையாக வருபவை இல்லை. அதிர்ஷ்டத்தாலோ துரதிருஷ்டத்தாலோ நிகழ்பவை இல்லை. எல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது.
*
வெற்றிக்கு சில பழக்கங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் அவசியம். ஜெயித்தவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்களிடம் உள்ள எந்தெந்தப் பழக்கங்கள் உங்களிடம் உள்ளன? எவையெல்லாம் விடுபடுகிறது? ஏன்? யோசியுங்கள்.
*  
உங்களுக்கு சின்னச் சின்ன உதவி செய்தவர்களுக்குக்கூட மனமார நன்றி சொல்லப் பழகுங்கள்.
*  
திறமை உள்ளவர்களுக்கு மரியாதை கொடுங்கள். மற்றவர்களைவிட நீங்கள்தான் உசத்தி என்கிற அகம்பாவம் வேண்டாம்.
*  
உங்களை உழைக்கத் தூண்டுவதற்கு இன்னொருவரை எதிர்பார்க்காதீர்கள்.
சில சமயங்களில் ஒன்றைப் பெறுவதற்காக நீங்கள் இன்னொன்றை இழக்கவேண்டியிருக்கலாம். அதுமாதிரி தருணங்களில் எது முக்கியம் என்று நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.
*  
எல்லோருக்கும் 24 மணி நேரம்தான் . ஆகவே "எனக்கு நேரமே போதலை' என்று புலம்பாதீர்கள்.
வெற்றியைத் துரத்தும் அவசரத்தில் உங்கள் உடம்பை மறந்துவிடாதீர்கள்.
தோல்வியே இல்லாத வாழ்க்கை போரடிக்கும். பெரிய வெற்றியாளர்கள்கூட அவ்வப்போது தோற்றிருக்கிறார்கள். நீங்களும் எப்போதாவது தோற்கலாம். தப்பில்லை.
*  
நீங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் சரி, எத்தனை உயரத்துக்குச் சென்றாலும் சரி " நல்ல மனிதர்' என்று பெயர் எடுக்காவிட்டால் அவை எல்லாம் அர்த்தம் இழந்துவிடுகின்றன. வெற்றிக்காகக் குணத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். "நான் நல்லவனாக வாழ்ந்தேன்' என்கிற திருப்திதான் மற்ற எல்லாவற்றையும்விட மிகப்பெரியது!.

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets