உங்கள் வருகைக்கு நன்றி

ஏன்? யோசியுங்கள்.

புதன், 14 ஆகஸ்ட், 2013

*  நீங்கள் விரும்பும் "வெற்றி' எது என்று தெளிவாக வரையறுத்துக்கொள்ளுங்கள். வெறுமனே பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியாகிவிடாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ரொம்பச் சிரமப்பட்டு எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேறியாகவேண்டும். அதேநேரம், உங்களைப்போல் கஷ்டப்பட்டு உழைக்காமல் முன்னுக்கு வருகிறவர்களும் இருப்பார்கள். அவர்களைப் பார்த்துப் புலம்பாமல், உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
*  
உங்களுடைய வெற்றி, தோல்வி இரண்டுமே எதேச்சையாக வருபவை இல்லை. அதிர்ஷ்டத்தாலோ துரதிருஷ்டத்தாலோ நிகழ்பவை இல்லை. எல்லாம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது.
*
வெற்றிக்கு சில பழக்கங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் அவசியம். ஜெயித்தவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்களிடம் உள்ள எந்தெந்தப் பழக்கங்கள் உங்களிடம் உள்ளன? எவையெல்லாம் விடுபடுகிறது? ஏன்? யோசியுங்கள்.
*  
உங்களுக்கு சின்னச் சின்ன உதவி செய்தவர்களுக்குக்கூட மனமார நன்றி சொல்லப் பழகுங்கள்.
*  
திறமை உள்ளவர்களுக்கு மரியாதை கொடுங்கள். மற்றவர்களைவிட நீங்கள்தான் உசத்தி என்கிற அகம்பாவம் வேண்டாம்.
*  
உங்களை உழைக்கத் தூண்டுவதற்கு இன்னொருவரை எதிர்பார்க்காதீர்கள்.
சில சமயங்களில் ஒன்றைப் பெறுவதற்காக நீங்கள் இன்னொன்றை இழக்கவேண்டியிருக்கலாம். அதுமாதிரி தருணங்களில் எது முக்கியம் என்று நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.
*  
எல்லோருக்கும் 24 மணி நேரம்தான் . ஆகவே "எனக்கு நேரமே போதலை' என்று புலம்பாதீர்கள்.
வெற்றியைத் துரத்தும் அவசரத்தில் உங்கள் உடம்பை மறந்துவிடாதீர்கள்.
தோல்வியே இல்லாத வாழ்க்கை போரடிக்கும். பெரிய வெற்றியாளர்கள்கூட அவ்வப்போது தோற்றிருக்கிறார்கள். நீங்களும் எப்போதாவது தோற்கலாம். தப்பில்லை.
*  
நீங்கள் எவ்வளவு ஜெயித்தாலும் சரி, எத்தனை உயரத்துக்குச் சென்றாலும் சரி " நல்ல மனிதர்' என்று பெயர் எடுக்காவிட்டால் அவை எல்லாம் அர்த்தம் இழந்துவிடுகின்றன. வெற்றிக்காகக் குணத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். "நான் நல்லவனாக வாழ்ந்தேன்' என்கிற திருப்திதான் மற்ற எல்லாவற்றையும்விட மிகப்பெரியது!.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets