உங்கள் வருகைக்கு நன்றி

இது சாத்தியம்,'' என்று சொல்லுங்கள்.

சனி, 7 செப்டம்பர், 2013


படிக்கிறது எதுக்காக அறிவை வளர்த்துக்கத்தான். படிப்பு நமக்கு தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் கொடுக்கணும். கோழையாக மாத்தக் கூடாது,''  
பரீட்சையில் பெயிலாகிட்டா, உலகமே அஸ்தமிச்சு போயிடுமா. இரண்டு மாசத்தில் அட்டெண்ட் பண்ணி, இந்த வருஷமே காலேஜில் சேரலாம்.

"சரி, அப்படியே மார்க் குறைஞ்சு போனாலும், இன்ஜினியரிங் தவிர, வேறு படிப்பே இல்லையா. பிடிச்ச சப்ஜெக்ட் எடுத்து படிக்க, எத்தனையோ படிப்புகள் இருக்கு.  "கெய்டு' வாங்கி பரீட்சை முடிஞ்சதும், அதை புரட்டிப் பாருங்கள். எது சரியா வரும்ன்னு பார்ப்போம்.

நாம் வாழற வாழ்க்கை தான், நம்ப வெற்றி தோல்வியை தீர்மானிக்கணும். அதை நாம் எப்படி சந்திக்கிறோம்கிறதில் தான் எல்லாமே இருக்கு.

பிடிச்ச சப்ஜெக்டில் ஈடுபடுத்தி முன்னுக்கு வர எத்தனையோ வழிகள் இருக்கு 
"வெற்றி, தோல்வி இரண்டையுமே இயல்பாக ஏத்துக்கணும். தோல்வி, இன்னும் முன்னேறுவதற்கான உத்வேகத்தைத் தரணும். வாழ்க்கைப் பாதையில், முட்செடிகளை நிரப்பறோமா, பூச்செடிகளை நடறோமாங்கிறது, நம் மனவலிமையைப் பொறுத்தது.


தோல்வி பயத்தை, தேவையில்லாத மன அழுத்தத்தை தூக்கியெறியுங்கள். மனசில் நம்பிக்கையை விதை. தெளிந்த மனசோடு, அடுத்த பரீட்சைக்கு படிக்க ஆரம்பி. உங்களுக்கு நிச்சயம் வளமான எதிர்காலம் இருக்கு. அதை ஆணித்தரமாக நம்புகள். இன்ஷாஅல்லாஹ். அதுக்கு கல்வியை ஊன்றுகோலாக பயன்படுத்துங்கள் '
முடிவு பண்ணுதுன்னு முட்டாள்தனமாக முடிவுக்கு வராமல், படிப்பை என் அறிவை வளர்த்துக்கிற கருவியாக்கி, வாழ்க்கையில் உயர்ந்து காட்டுவேன். இது சாத்தியம்,'' என்று சொல்லுங்கள். இறைவன் உதவி செய்வான்

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets