வாத
நோய்களில் நாள்பட்ட மூட்டு வலி மிகவும் கடுமையாக இருக்கும். அதிலும் இந்த வலி
வந்தால், மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான
வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம் உடலில யூரிக் ஆசிட்டின் அளவு
அதிகமாக இருப்பதே ஆகும். சில மக்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னரே இந்த
மாதிரியான வலிகளுக்கு ஆளாவார்கள். சிலரோ பிறப்பிலிருந்தே
பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இத்தகைய மூட்டுகளில் ஏற்படும் வலிகளை ஒருசில
உணவுகள் மூலம் சரிசெய்ய முடியும். உதாரணமாக, ஆலிவ்
ஆயில் மற்றும் வெங்காயம் நாள்பட்ட மூட்டு வலிகளை குணமாக்கும். மேலும் கரோட்டீன்
அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் சரிசெய்யலாம். அதே சமயம் எப்படி ஒருசில
உணவுகள் மூட்டு வலிகளுக்கு தீர்வு தருகின்றதோ, அதேப்
போல் ஒருசில உணவுகள் பாதிப்பையும் ஏற்படுத்தும். ஒருவேளை மூட்டு வலிகளுக்கு
பாதிக்கப்பட்டிருப்பவர், யூரிக்
ஆசிட் அதிகம் உள்ள உணவுகளான தக்காளியை சாப்பிட்டால், இன்னும்
மூட்டு வலியானது அதிகமாகுமே தவிர குணமாகாது. எனவே வாத நோய்கள் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் எந்த ஒரு உணவையும் அவசரப்பட்டு சாப்பிடாமல், உடலுக்கு
ஏற்ற உணவு தானா என்று அறிந்து பின்னரே உண்ண வேண்டும். சரி, இப்போது ஆர்த்ரிடிஸ் என்னும் வாத நோய்
வந்துவிட்டால், எந்த
உணவுகளை உண்ண வேண்டும், எந்த
உணவுகளை உண்ண கூடாது என்று பார்ப்போமா!!!
காய்கறிகளில்
கத்திரிக்காய், சிவப்பு
குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றில் அல்கலாய்டுகள் அதிகம் இருப்பதால், அவை மூட்டுகளில் காயங்களை அதிகப்படுத்தி, குணமாகிக் கொண்டிருக்கும் மூட்டு
வலியையும் குணமாகாமல் தடுக்கும்.
இஞ்சியிலும்
மஞ்சளைப் போன்ற மருத்துவக் குணம் உள்ளது. எனவே மூட்டு வலிகள் இருப்பவர்கள் தினமும்
இஞ்சியை சேர்த்துக் கொள்வது சிறந்த நன்மையைத் தரும்.
மசாலாப்
பொருட்களில் மஞ்சளும் ஒன்று. அதுமட்டுமின்றி, மஞ்சள்
ஒரு கிருமி நாசினி. எனவே இதில் உள்ள மருத்துவப் பொருளானது, உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை
குறைத்துவிடும்.
வெங்காயத்தில்
க்யூயர்சிடின் (quercetin) என்னும்
கெமிக்கல் உள்ளது. இந்த கெமிக்கல் அஸ்பிரின் (aspirin) போன்றே, ஒரு சிறந்த வலி நிவாரணி.
மூட்டு
வலிகளுக்கு சர்க்கரை மிகவும் கேடு விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள். ஏனெனில்
சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல்
எடை அதிகமாவதால், மூட்டுகளில்
அழுத்தம் அதிகரித்து, வலியும்
அதிகமாகும்.
இந்த
எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி
ஆசிட் உள்ளதால், அவை
மூட்டுகளில் எந்த பிரச்சனை இருந்தாலும் சரிசெய்யும்.
பாலில்
அதிகமான அளவில் ப்யூரின் இருப்பதால், அவை
யூரிக் ஆசிட்டின் அளவை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
க்ரீன்
டீயில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும்
வலியின் அளவை குறைத்துவிடும். மேலும் இதில் உள்ள நிக்கோட்டின் ஒரு சிறந்த வலி
நிவாரணி.
மீனில்
உள்ள ஒமேகா-3 ஃபேட்டி
ஆசிட் அதிகம் உள்ளதால், அவை
உடலின் மூட்டுகளில் உள்ள காயங்களை குணப்படுத்தும். மேலும் அவை உடலில் உள்ள
குருத்தெலும்பு திசுக்களை சாப்பிடும் நொதிகளின் உற்பத்தியை தடுத்துவிடும்.
தக்காளியின்
விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது
அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே
இதனை தவிர்ப்பது நல்லது.
Read more...