உங்கள் வருகைக்கு நன்றி

மூட்டு வலியை தீர்க்கும் முத்ரா பயிற்சி

வெள்ளி, 5 செப்டம்பர், 2014


நம் உடலில் ஏற்படும் பிரச்னைகள் அனைத்திற்குமே மருத்துவரை சென்று அனுகுவதை விட சில எளிய பயிற்சிகள் மேற்கொள்வதின் மூலம் அவற்றை சுலபமாக சரிசெய்யலாம்.
40 வயதை கடந்து விட்டாலே மூட்டு வலி ஏற்படும் என்பதெல்லாம் அந்த காலங்க. இப்போதெல்லாம் சிறிய வயதுள்ளவர்களுக்கும் மூட்டு வலி பிரச்னை ஏற்படுகிறது. இதனை சில எளிய முத்ரா பயிற்சிகள் செய்வதன் மூலம் நிவாரணம் பெறலாம்.
வாயு முத்ரா எனப்படும் முத்ரா பயிற்சி செய்வதன் மூலம்  மூட்டு வலியை சரிசெய்யலாங்க....
செய்யும் விதம்: ஆள்காட்டி விரலை நன்றாக மடக்கி கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடும்படி வைக்கவும். ஆட்காட்டி விரலின் நகத்தின் மேல் உள்ள சதைப் பகுதியில் கட்டை விரலை பதிய வையுங்கள். மற்ற மூன்று விரலையும் நேராக நிமிர்த்தி வையுங்கள் இதுவே வாயு முத்திரையாகும். தினந்தோறும் இந்த பயிற்சியை 15 நிமிடங்கள் தொடர்ந்து செய்து வர விரைவில் குணமாகும்.
இந்த முத்ராவை செய்வதன் மூலம் மூட்டுக்களில் ஏற்படும் பிரச்னைகள் அகலும். மேலும் இந்த மூத்திராவானது பக்கவாத வியாதியை வராமல் தடுக்கும் ஆற்றலுடையது. உணவு உண்ட பிறகு ஜீரணம் ஆவதற்கு கடினமாக உணர்ந்தால்
வஜ்ர ஆசனா முறையில் அமர்ந்து இந்த முத்ராவை செய்யலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets