உங்கள் வருகைக்கு நன்றி

தேவையில்லாத குற்ற உணர்ச்சி, அவப்பெயர் ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

நாம் இரட்டைக் குதிரையில், சவாரி செய்ய போகிறோம் என்பதால், அதற்கான சாதக, பாதகங்களை மனதளவில் ஏற்றுக் கொள்வது, மன அழுத்தத்தை குறைக்கும். உடனடியாக முடிக்க வேண்டியது, கூடிய விரைவில் முடிக்க வேண்டியது, தாமதமாக செய்தாலும் பரவாயில்லை என, வீட்டு, அலுவலக வேலைகளை பிரித்து, அதற்கேற்ப நேரம்ஒதுக்கலாம். முந்தைய நாள் இரவே, மறுநாளுக்கான சமையலுக்கு தேவையானதை,  வாங்கி வைத்து விடுவேண்டும். குழந்தைகளுக்கும், கணவருக்கும் எடுத்த பொருளை, எடுத்த இடத்தில் வைக்க, பழக்கி வைக்க வேண்டும்.
.இதிலேயே பாதி டென்ஷன் குறைந்து விடும். நம்மை வெகுவாக சார்ந்திராமல் இருக்க, அவர்களுடைய வேலைகளை, அவர்களே பார்க்கவும் பழக்கப்படுத்தி வைக்க வேண்டும்.

மேலும், மாதாந்திர கட்டணங்களுக்கான கடைசி தேதிகளை, சார்ட் ஆக தயாரித்து, ஆன்லைன் அல்லது, 'ஆப்' மூலமாகவே, அவற்றை செலுத்தி விடவேண்டும். அதற்கான தேதிகள், மொபைல் போன், 'ரிமைண்டரில்' இருக்க வேண்டும்.
உடைகளை அவ்வப்போது, துவைத்து விடுவதும், வார இறுதி யில், அயர்ன் செய்து வாங்குவதும், சிறந்த பழக்கம். இதனால், திங்கள் அன்று காலையில் பரபரப்பாக உடை தேடி, அயர்ன் செய்யும் டென்ஷன் இல்லை.மளிகை மற்றும் அத்தியாவசிய தேவைகளை, மாதம் ஒருமுறைபட்டியலிட்டு, மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வது சிறந்தது. ரெடிமிக்ஸ் பொடிகளை வீட்டிலேயே, தயாரித்து வைத்திருங்கள். மின்சாரம் இல்லை, வீட்டுக்கு வர தாமதம் போன்ற, அவசர தருணங்களில் இப்பொடிகள் கை கொடுக்கும்.
அலுவலகத்துக்கு கிளம்பும் வழியில், டூவீலர் அல்லது காரில் பெட்ரோல் மற்றும் டீசல் போடுவது டென்ஷனைக் கூட்டும். அதனால், முதல் நாள் மாலையே, 'செக்' செய்து விடுங்கள்.

முடிந்தவரை குழந்தைகளின் பள்ளி நிகழ்ச்சி கள், உறவினர் நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டி விடுங்கள். அப்படி போக முடியாத பட்சத்தில், கணவரையும், குழந்தைகளையும் அனுப்பி விடுங்கள். இதனால், தேவையில்லாத குற்ற உணர்ச்சி, அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
மனதை எப்போதும், புத்துணர்வுடன் வைத்திருக்கும் பெண்களால், இரட்டைக் குதிரைச் சவாரியை எளிதாக செய்ய முடியும். 

பட்டா, சிட்டா, அடங்கல்

சனி, 14 ஜனவரி, 2017

சொந்தமாக நிலம் வாங்கும் போது அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களின் விவரம்:

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு,யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை:  வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி,சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்...


நன்றி.சிந்திங்க

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி ?.

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் .சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதுபொதுவாகவே  சி (EC - Encumbrance Certificate) எனப்படும்(வில்லங்க சான்றிதழ்கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லதுமூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம்அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பிவைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய்முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய்பத்து வருடத்திற்க்குதோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவுஇதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவுஆன்லைனில்நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பிசிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும்சென்னைகடலூர்கோயம்புத்தூர்,திருச்சி,சேலம்மதுரைதஞ்சாவூர்வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்அது போக ஆங்கிலத்திலும்,தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம்அதற்கு சார்ஜ் 1ருபாய்.கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள்சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூடஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும்இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp


  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets