தேவையில்லாத குற்ற உணர்ச்சி, அவப்பெயர் ஏற்படுவதை எப்படி தவிர்ப்பது.
ஞாயிறு, 29 ஜனவரி, 2017
நாம் இரட்டைக் குதிரையில், சவாரி செய்ய போகிறோம் என்பதால், அதற்கான சாதக, பாதகங்களை மனதளவில் ஏற்றுக் கொள்வது, மன அழுத்தத்தை குறைக்கும். உடனடியாக முடிக்க வேண்டியது, கூடிய விரைவில் முடிக்க வேண்டியது, தாமதமாக
செய்தாலும் பரவாயில்லை என, வீட்டு, அலுவலக வேலைகளை பிரித்து, அதற்கேற்ப நேரம்ஒதுக்கலாம்.
முந்தைய நாள் இரவே, மறுநாளுக்கான சமையலுக்கு தேவையானதை, வாங்கி வைத்து விடுவேண்டும். குழந்தைகளுக்கும், கணவருக்கும் எடுத்த பொருளை, எடுத்த இடத்தில் வைக்க, பழக்கி வைக்க வேண்டும்.
.இதிலேயே பாதி டென்ஷன் குறைந்து விடும். நம்மை வெகுவாக சார்ந்திராமல் இருக்க, அவர்களுடைய
வேலைகளை,
அவர்களே பார்க்கவும் பழக்கப்படுத்தி வைக்க வேண்டும்.
மேலும், மாதாந்திர கட்டணங்களுக்கான கடைசி தேதிகளை, சார்ட் ஆக தயாரித்து, ஆன்லைன் அல்லது, 'ஆப்' மூலமாகவே, அவற்றை செலுத்தி விடவேண்டும். அதற்கான தேதிகள், மொபைல் போன், 'ரிமைண்டரில்' இருக்க வேண்டும்.
உடைகளை அவ்வப்போது, துவைத்து விடுவதும், வார இறுதி யில், அயர்ன் செய்து வாங்குவதும், சிறந்த பழக்கம். இதனால், திங்கள் அன்று காலையில் பரபரப்பாக உடை தேடி, அயர்ன் செய்யும் டென்ஷன் இல்லை.மளிகை மற்றும் அத்தியாவசிய தேவைகளை, மாதம் ஒருமுறைபட்டியலிட்டு, மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வது சிறந்தது. ரெடிமிக்ஸ் பொடிகளை வீட்டிலேயே, தயாரித்து வைத்திருங்கள். மின்சாரம் இல்லை, வீட்டுக்கு வர தாமதம் போன்ற, அவசர தருணங்களில் இப்பொடிகள் கை கொடுக்கும்.
அலுவலகத்துக்கு கிளம்பும் வழியில், டூவீலர்
அல்லது காரில் பெட்ரோல் மற்றும் டீசல் போடுவது டென்ஷனைக் கூட்டும். அதனால், முதல் நாள் மாலையே, 'செக்' செய்து
விடுங்கள்.
முடிந்தவரை குழந்தைகளின் பள்ளி நிகழ்ச்சி கள், உறவினர் நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டி விடுங்கள். அப்படி போக முடியாத
பட்சத்தில், கணவரையும், குழந்தைகளையும் அனுப்பி விடுங்கள். இதனால், தேவையில்லாத குற்ற உணர்ச்சி, அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
மனதை எப்போதும், புத்துணர்வுடன் வைத்திருக்கும் பெண்களால், இரட்டைக் குதிரைச் சவாரியை எளிதாக செய்ய முடியும்.
மனதை எப்போதும், புத்துணர்வுடன் வைத்திருக்கும் பெண்களால், இரட்டைக் குதிரைச் சவாரியை எளிதாக செய்ய முடியும்.