உடலில் ஏற்படும் ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு காரணம் இருக்கு
ஞாயிறு, 21 ஏப்ரல், 2019
நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு
சத்தத்துக்கும், ஒரு காரணம் இருக்கும். எனவே, அவற்றை அலட்சியப் படுத்த கூடாது. மார்பு
பகுதியில் விசில் ஒலிப்பது போன்ற சத்தம் கேட்கும். மூச்சுக் குழாயில் தற்காலிகமாக
தசை சுருக்கம் ஏற்பட்டு, அடைப்பு ஏற்படுவதே, இதற்கு காரணம்.இதில், முதல் மற்றும் இரண்டு நிலைகள், மருத்துவர்கள்
பரிசோதிக்கும்போது மட்டுமே சத்தம் கேட்கும். மூன்றாம் நிலை, அமைதியான
புறச்சூழலிலும், நான்காம் நிலையில், நன்றாகவும் சத்தம் கேட்கும். சுவாசக் கோளாறு, ஆஸ்துமா
பாதிப்புகளால் இது ஏற்படும். உடனடியாக சிகிச்சை எடுப்பது நல்லது.சிலருக்கு
அடிக்கடியும், அதிக சத்தத்தோடும், தொடர்ச்சியாகவும் ஏப்பம் வரும். எண்ணெயில் சமைத்த, வறுத்த
உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், வயிற்றின் மேற்பகுதியில் வாயு உண்டாகி, இது
ஏற்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவு சாப்பிடுவதை குறைத்தால், இதில்
இருந்து தப்பலாம். பாதாம், முந்திரி, பிஸ்தாவை அளவுக்கதிகமாக சாப்பிட்டால், வாயு தொல்லை
ஏற்பட்டு,
வயிற்றில், 'கடமுட' சத்தமும், வாயுவும்
அடிக்கடி வெளியேறும் என்பதால், அளவாக சாப்பிடுவது நல்லது. வயதானவர்களில் சிலருக்கு, கால்களை
மடக்கி, நீட்டும்போது, மூட்டுகளில், 'க்ளிக்
க்ளிக்' என சத்தம்
கேட்கும். முறையான உடற்பயிற்சியும், தேவைப்பட்டால் மூட்டுகளுக்கான திரவத்தை செயற்கையாக
செலுத்தியும் சரிசெய்யலாம்.கழுத்து வீக்கம் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, துாங்கும்போது
மூச்சுக்குழாய் சுருங்கிவிடும். அதனால், நுரையீரலுக்கு போதிய ஆக்சிஜன் செல்லாமல், சற்று
அழுத்தமாக மூச்சுவிடுவதால், குறட்டை சத்தமாக வெளியே வரும். இதற்கென உள்ள, 'பைபேப்' கருவியை, துாங்கும்போது
வாயில் பொருத்தினால், குறட்டை சத்தம் வராது. தேவைப்பட்டால், அறுவை
சிகிச்சை செய்தும் சரிசெய்யலாம்.சிலருக்கு காதுகளில் வித்தியாசமான ஒலி கேட்கும்.
இதற்கு, மொபைல் போனை
அதிக சத்தமாக பயன்படுத்துவது, 'ஹெட்போனில்' அதிக சத்தமாக பாடல் கேட்பதை தவிர்க்க வேண்டும். யாரோ
பேசுவது,
கூப்பிடுவது
போல சத்தம் கேட்டால், அது, மனநலம் சார்ந்த பாதிப்பாக இருக்கும் என்பதால், மனநல
மருத்துவரிடம் செல்வது நல்லது. துாங்கும்போது சிலர், 'நறநற'வென பற்களை கடிப்பர். மூளை தொடர்பான
பாதிப்பு இருந்தால், இந்த பிரச்னை வரலாம். மன நல பாதிப்புகளாலும் ஒரு சிலருக்கு, பற்களை
கடிக்கும் பழக்கம் இருக்கலாம். அதற்கான சிகிச்சை மேற்கொண்டால், இதில்
இருந்து விடுபடலாம்.