உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தை வளர்ப்பு.

வெள்ளி, 20 டிசம்பர், 2019


வீட்டின் சின்னச்சின்ன வேலைகளில், குழந்தைகளை ஈடுபடுத்துவதால், அவர்களின் ஆற்றல் மேம்படு.,  குழந்தை கள், 2 வயதாக இருக்கும் போது, தட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்து தாங்களே சாப்பிட துவங்குவர். பெற்றோர் போல, ஆபிஸ் கிளம்புவது, சமைப்பது என, நடிக்கத் துவங்குவர். குழந்தைக்கு, 3 வயதானதும், கழிவறைக்கு தானே சென்று வர பழக்க வேண்டும். 4 வயதானதும், கழிவறையை சுத்தப்படுத்த, அந்தக் குழந்தையை பழக்க வேண்டும். இப்படியே, 5 வயது குழந்தை, பள்ளிக்கூட பை மற்றும் சாப்பாட்டு கூடையை மறக்காமல் எடுத்து வர வைக்க வேண்டும்.நன்கு நடமாட, பேச, வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தெரிய துவங்கிய குழந்தைகளுக்கு, வீட்டின் சின்னச்சின்ன வேலைகளை செய்ய கொடுக்கலாம். உதாரணமாக, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது; சாப்பிட உணவு தட்டை எடுத்து வருவது; ஷூ பாலிஷ் போடுவது; விடுமுறை நாட்களில், வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது என்பன போன்ற வேலைகளை செய்ய சொல்லலாம்.எனினும், சமையல் அறையில் நேரடியாக ஈடுபடுத்துவது, துணிகளை இஸ்திரி போடுவது போன்ற கடினமான பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தவே கூடாது. மாறாக, மீன் வளர்த்தல், பறவை, நாய்க்குட்டி, பூஞ்செடிகள் பராமரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யுங்கள். இவ்வாறு அவர்கள் வேலை செய்யும் போது, அவற்றில் குறைகளை காண்பிக்காமல், இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்பதை, பக்குவமாக சொல்லிக் கொடுங்கள். முடிந்த வரை, மொபைல் போன்கள், கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி போன்றவற்றில், அவர்களின் ஆர்வம் செல்லாத வகையில், பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.இதனால், எந்தச் சூழ்நிலை என்றாலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் மனப் பக்குவம், திறமை குழந்தைகளுக்கு வந்து விடும். இதற்கு, பெற் றோரின் ஒத்துழைப்பும், அரவணைப்பும் குழந்தைகளுக்கு அவசியம்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், 'அன்றாட வீட்டு வேலைகளில் இருந்து குழந்தைகளை விலக்கி வைப்பது தவறு. அவ்வாறு செய்தால், குழந்தைகளின் திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மன தைரியம், வெற்றி, தோல்விகளை பகுத்தறியும் பக்குவம், உடனிருப்போருடன் உறவாடும் உளவியல் தன்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்' என்கிறது.வீடு என்றால், வேலைகளை எல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை, குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள்!
நாகர்கோவில்குழந்தைகள் டாக்டர் ஷபி:

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets