உங்கள் வருகைக்கு நன்றி

சத்துக்கள் நிறைந்த முள்ளங்கியின் மருத்துவ குணம்!

புதன், 18 ஏப்ரல், 2012



முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். இது ஆண்டு முழுவதும் எந்த தங்கு தடையும் இன்றி கிடைக்கும். மேலும், குளிர் காலத்தில் அதிகமாக விளையும் காய்கறி வகையாகும். முள்ளங்கி காய் மட்டுமல்லாமல், அதன் கீரையும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் முள்ளங்கி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
சத்து மாத்திரைகளுக்கும், டானிக்குகளுக்கும் செலவிடுவதை விட்டுவிட்டு இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் வாங்கி உண்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.
100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம்.
17 கலோரி, 2 கிராம் நார்ச்சத்து, 15 மில்லி கிராம் விட்டமின் சி, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில், காய்கறிளிலேயே விட்டமின் சி அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான். அதேப்போல, கால்சியமும், பாஸ்பரசும் முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது அதன் சிறப்பாகும்.
முள்ளங்கியை விட அதன் கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
100 கிராம் கீரையில்...
41கே கலோரியும், 3.8 கிராம் புரதமும், 1 கிராம் நார்ச்சத்தும், 81 மில்லி கிராம்  விட்டமின் சி ((ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் அடிப்படையான விட்டமின் சி இதில் இரண்டு மடங்கு உள்ளது), 5295 மைக்கோ கிராம் பீடா கரோடின் (இதுவும் இரு மடங்கு உள்ளது), 400 மில்லி கிராம் கால்சியம் (ஒரு மனிதனுக்கு 100 கிராம் தேவை), 59 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்கள் பெருமளவு இந்த முள்ளங்கியில் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே, வெறும் நீர்க்காய் என்றோ, சளிப்பிடிக்கும் என்றோ, சுவையற்றது என்று கூறியோ முள்ளங்கியையோ, அதன் கீரையையோ வெறுக்காமல், அவ்வப்போது உணவில் முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையை சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கலாம்.



முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

முள்ளங்கியில் நிறைந்துள்ள சத்துக்கள் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அதுபோல முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
உடல் எடை குறைய
குறைந்த கலோரி கொண்ட காய்கறி முள்ளங்கி என்பதால், இதனை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் உடல் எடைக் கூட வாய்ப்பில்லை. மேலும், அதிகமாக பசிக்கும், ஆனால் உணவை சாப்பிட்டால் உடல் எடை கூடி விடுமோ என்று பயப்படுபவர்கள் முள்ளங்கியை அதிகமாக சாப்பிட்டாலும், வயிறு நிறையுமேத் தவிர உடல் எடைக் கூட வாய்ப்பில்லை.
நீரிழிவுக்கு ஏற்றது
முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
தாய்மார்களுக்கு ஏற்றது
புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது. அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

Read more...

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்


பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக தலைமுடி உள்ளது. உடலில் விட்டமின் பி, இ, இரும்பச் சத்து, கால்சியம் போன்றவைக் குறைவதையே தலைமுடி உதிரல் காட்டுகிறது. நீரிழிவு, பொடுகு போன்றவை அதிகமாக முடி உதிரக் காரணமாக அமையலாம். சில மருந்துகளின் பக்க விளைவாலும், சிகிச்சைகள் காரணமாகக் கூட தலை முடி உதிரலாம்.

தலை முடி சுத்தமில்லாமல் இருப்பது, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டீஷனர் காரணமாகக் கூட தலைமுடி உதிரலாம். அடிக்கடி டிரையர் உபயோகிப்பது, அழுத்தமாக சிகை அலங்காரம், அயர்னிங் போன்றவையும் தலைமுடி உதிரக் காரணமாகலாம். அதிகமான மன அழுத்தம் கூட முடி உதிரக் காரணமாக இருக்கும். இதற்கு யோகா போன்ற தியானங்கள் பலனளிக்கும். பொதுவாக தலைமுடி உதிர்ந்து போன பிறகு அதற்காக சிகிச்சை செய்வதை விட, தலைமுடி நன்றாக இருக்கும் போதே அதனை சரியாக கவனித்தால் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

எப்போது ஷாம்புவோ அல்லது எண்ணெயையோ தலைக்கு வைக்கும் போது தலையில் இருந்து ஆரம்பித்து தடவுங்கள். தலைமுடியின் நுனிப் பகுதியை அவ்வப்போது வெட்டி விடுங்கள். இதனால் தலைமுடி நுனி உடைவது தடுக்கப்படும். தலைக்கு தடவும் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதனை தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்வதால் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிகமாக தண்ணீர் பருகினால் சருமப் பிரச்னைகள் குறையும். இதனால் தலைமுடி உதிர்வது கட்டுப்படும். சரியான தூக்கம் எந்த அளவிற்கு உடலுக்கு அவசியமோ அதே அளவிற்கு தலைமுடிக்கும் தேவைப்படுகிறது. அதிகமாக தலை முடி உதிர்பவர்களுக்கு... இளநீர் தண்ணீரை அல்லது தேங்காப் பால் கொண்டு தலை முடியைக் கழுவுங்கள். தயிர் அல்லது டீ டிக்காஷனை தலைக்கு குளிக்கும் போது தலை முடிக்கு போட்டு தேய்த்துக் குளிக்கலாம். கறிவேப்பிலையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இருக்கும் தலைமுடிக்கு அதிகமாக பலம் கிடைக்கும். இதற்கு மேலும் தலைமுடி உதிர்ந்தால் அது உங்கள் பரம்பரை சார்ந்த விஷயமாக இருக்கலாம்.

Read more...

சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் முன்பு


கோடை விடுமுறைகள் துவங்கிவிட்டன.  பள்ளி, கல்லூரிகளுக்கு இறுதியாண்டு தேர்வுகள் முடிந்ததும் சுற்றுலாவிற்கு கிளம்பிவிடுவார்கள் பலரும். சுற்றுலா கிளம்புவதற்கும், மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

உங்கள் கேள்விக்கான பதில்

பொதுவாக குடும்பத்துடன் சுற்றுலா செல்வது என்றால், குடும்பத்தில் வயதானவர் முதல் சிறியவர் வரை இருக்கக் கூடும். குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சில உடல் உபாதைகள் இருக்கலாம். அவரை எவ்வாறு சுற்றுலா அழைத்துச் செல்வது என்று யோசித்து சுற்றுலா திட்டத்தை கைவிட வேண்டாம். நோயுற்றவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவரை பரிசோதனை செய்து சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் விஷயத்தைக் கூறி ஆலோசனை பெறலாம்.  மருத்துவர் சுற்றுலா செல்ல அனுமதி அளித்தால் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்று வாருங்கள். சுற்றுலா செல்வதற்கு முன்பு, உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை தேவையான அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள் பற்றியும், உங்களுக்குள்ள நோய் மற்றும் பிரச்சினை குறித்து உங்களுடன் சுற்றுலா வரும் ஒரு நபர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருப்பின், உங்களுடன் மற்றொரு கண்ணாடியையும் கூடுதலாக எடுத்துச் செல்லுங்கள். ஏதேனும் காரணத்தால் உங்கள் கண்ணாடி உடைய நேரிட்டால் அது உதவும். சில நாடுகளுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால், ஒரு சில வியாதிகளுக்கு தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும் என்று அந்நாடு வலியுறுத்தும். எனவே, அது பற்றி உடனடியாக அறிந்து கொண்டு ஒன்றரை முதல் 2 மாதங்களுக்கு முன்னதாகவே அதுபோன்ற தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுங்கள். வெளிநாடுகளுக்கு திடீரென சுற்றுலா செல்ல திட்டமிட்டால், அது பற்றி மருத்துவரிடம் கூறி அதற்கான தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளலாம்.

எங்கு சென்றாலும் சுத்தமான நீரை குடியுங்கள். ஐஸ், ஜுஸ் போன்றவற்றை சாப்பிடாதீர்கள். எந்தப் பகுதிக்கு சுற்றுலா செல்கின்றீர்களோ, அப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலையை முன்னதாக அறிந்து கொண்டு அதற்கேற்ற ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள். சுகாதாரமான முறையில் நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுங்கள். உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை சாப்பிட்டு உடல்நிலையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets