உங்கள் வருகைக்கு நன்றி

மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை.

புதன், 3 ஜூலை, 2013


ம.பி., மாநில தலைநகர் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியர் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவ்வாறு இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர்,

யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் வசித்து வந்தது முகமது அலி குவாய்சர் குடும்பம். 17 வயதான குவாய்சர் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர். போபால் விஷவாயு சம்பவம் நடந்த போது அவரது முழு குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டது. குவாய்சரின் தாய் இந்த சம்பவத்தில் இறந்து போனார். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற காரணத்தால் குவாய்சர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்பட்டார். தனது தாய் இந்த சம்பவத்தில் இறந்துவிட்டார் என்பதையறிந்த குவாய்சர், தான் ஒரு டாக்டராகி தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்தார்.

எனினும் அவருக்கு டாக்டர் படிப்பு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இலவசமாக மருத்துவம் படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வில் இரண்டு முறை தோல்விடைந்த அவர், மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கோட்டா இல்லாத நிலையில், பொதுப்பிரிவில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். பின்னர் எம்.பி.பி.எஸ்., முடித்த குவாய்சர் முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கு பணிபுரிந்தால் தன்னால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இயலாது எனக்கருதி, அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் சம்பாவனா டிரஸ்ட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.

நீங்கள் பணம் தான் வேண்டும் என விரும்பினால் அது உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை. அதனால் தான் பணம் அதிகம் வரும் அரசு டாக்டர் வேலையை விட்டு விட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்கு பணிபுரிகிறேன்" என்கிறார் முகமது அலி குவாய்சர்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets