ஒரு பொருளை பயன்படுத்தும் போது, அதனால், எந்த மாதிரியான பாதிப்புகள் வரும்
வெள்ளி, 8 நவம்பர், 2013
நாம்
முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, ஒரு பொருளை
பயன்படுத்தும் போது, அதனால், எந்த மாதிரியான பாதிப்புகள் வரும் என்பது பற்றிதான். நம் தோலுக்கு ஹேர் டை
ஒப்புக் கொள்ளாவிட்டால், சிறிய கொப்புளங்கள் வரலாம். சிலருக்கு, முகத்தின் இரு பக்கங்களிலும் கறுக்கும், முகம் முழுக்க கறுப்பதும் உண்டு. தோல் தடித்து அரிப்பு வரும்.
சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஹேர் டையில் பி.பி.டி., எனும் வேதிப் பொருள் உள்ளது. இது சூரிய ஒளியை அதிகமாக உறிஞ்சி, தலைமுடிக்கு நல்ல கறுப்பு நிறத்தைத் தரக் கூடியது. நாம் பயன்படுத்தும் ஹேர் டையில் இந்த
பி.பி.டி.,யின் அளவு 2.5 என்ற அளவிற்கு
குறைவாக இருக்க வேண்டும். அதுதான் நல்ல ஹேர் டை. அதேபோல் அமோனியா இல்லாத ஹேர் டையை
மட்டுமே பயன்படுத்த வேண்டும். அமோனியா அமிலத்தன்மை உடையது. அமிலத்தின் குணம் எந்த
பொருளின் மீது பட்டாலும் அதை அரித்துவிடும். ஹேர் டையை குறைந்தது, ஒரு மாத
இடைவெளியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்ட பின், சீப்பால் சீவக் கூடாது. கறுப்பு நிறம் வெயிலை ஈர்க்கும்
என்பதால் டை போட்டு விட்டு, வெளியில் போவது தவிர்க்கப்பட வேண்டும். இப்போது பல நிறங்களில், ஹேர் கலரிங் வருகிறது.