யார் கிண்டல் செய்தாலும், நான் அதை பொருட்படுத்தாமல் இருந்ததால்,
வெள்ளி, 8 நவம்பர், 2013
தன்னம்பிக்கை
இழக்காத மாற்றுத் திறனாளி சங்கரலிங்கம்: சிவகாசி அருகில் உள்ள கிராமத்தில் ஓர்
ஏழ்மை குடும்பத்தில் நான்காவது மகனாக பிறந்தேன்.நான் பிறந்த எட்டாவது மாதத்தில்
நடந்தேன். ஆனால், என்
மூன்றாவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டேன். நான்
எட்டாம் வகுப்பு படிக்கும்போது, குடும்ப
சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தி விட்டு, சில
வருடங்கள் என் தந்தை வைத்திருந்த பெட்டிக் கடையில் அவருக்கு உதவியாக இருந்தேன்.
என் 19ம்
வயதில், வறுமை காரணமாக நாங்கள் குடும்பத்துடன், சிவகாசிக்கு வந்தோம். சில காலம் டீ கடையிலும், தீப்பெட்டித் தொழிற்சாலையிலும் பணிபுரிந்தேன்.ஆனால், அதில் எனக்கு திருப்தி இல்லை. சுயதொழில் செய்ய
விரும்பிய நான், பிளாட்பாரத்தில் காய்கறி
கடை நடத்தினேன். எனக்காக, தினமும்
காய்கறி வாங்கும் என் தாய் படும் கஷ்டத்தைப் பார்த்து, அந்த தொழிலையும் விட்டு விட்டேன்.என் அண்ணன்
வைத்திருந்த ஆட்டோவை கஷ்டப்பட்டு ஓட்டிப் பழகினேன். அதுவே பிற்காலத்தில் எனக்கு
கைகொடுத்தது. ஒரே இடத்தில் எனக்கு வேலை செய்ய பிடிக்காததால், சொந்தமாக ஆட்டோ வாங்க கடன் கேட்டேன். சில சிரமங்களுக்கு
பின், நண்பர்கள் உதவியால் கடன் கிடைத்தது. இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்ததற்கு பயனாக, இரண்டு ஆட்டோவுக்கு உரிமையாளர் ஆகி உள்ளேன். யார்
கிண்டல் செய்தாலும், நான்
அதை பொருட்படுத்தாமல், தன்னம்பிக்கையுடன்
உழைத்ததற்குக் கிடைத்த பரிசு தான் ஆட்டோ!