'அட... போப்பா.. நீ வேற...
சனி, 26 ஏப்ரல், 2014
கண்டதைக் கடியதைத் தின்றுவிட்டு கன்னாபின்னாவென்று உடல் குண்டாகி கவலைப்படுகிறவர்களுக்கு உடல் எடையைக் குறைக்க ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள ஓரிகான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களும், கேப்டவுனில் உள்ள ஸ்டெலன்போஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களும்.
அப்படி என்ன வழி? உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் எழுந்து ஓட வேண்டுமாம். முன்னாலல்ல. பின்னால் ஓட வேண்டுமாம்.
பின்னால் ஓடினால் கலோரிகள் அதிக அளவில் எரிக்கப்பட்டு, உடல் எடை மளமளவென்று குறைந்துவிடுகிறதாம். பின்புறமாக ஓடினால் முன்னால் ஓடுவதைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகக் கொழுப்பு உடலில் இருந்து கரைந்து விடுகிறதாம். இதயநோய்கள், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை பின்னால் ஓடுபவரைக் கண்டதும் தலைதெறிக்க ஓடிவிடுகிறதாம். முதுகுவலி, மூட்டுவலி குறைந்துவிடுகிறதாம். இதுதவிர பின்னால் ஓடும்போது உடலை நன்கு பேலன்ஸ் பண்ண முடிகிறதாம். பின்னால் ஓடும்போது தலையைப் பின்னால் திருப்பி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே ஓட வேண்டியிருக்கிறது. இதனால் ஓரக் கண் பார்வை வலுவடைகிறதாம்.
எவ்வளவு தூரம் ஓடவேண்டும் ?
100 அடி பின்னால் ஓடுவது 1000 அடி முன்னால் ஓடுவதற்குச் சமம். அதனால் நீங்கள் முன்னால் ஓடுவதைவிட பத்துமடங்கு குறைவாகப் பின்னால் ஓடினால் போதும்.
இங்கிலாந்தில்
பின்னால் ஓடுபவர்களுக்கென்றே போட்டிகள் வேறு வைக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் மான்செஸ்டரில் இந்தப் போட்டி நடைபெறவிருக்கிறது.
என்ன பின்னால் ஓடத் தயாராகிவிட்டீர்களா?
'அட... போப்பா.. நீ வேற... காலையில் எழுந்து நடைப் பயிற்சியே செய்ய முடியலை... இதுல எங்க பின்னால ஓடுறது...' என்று அலுத்துக் கொள்கிறீர்களா?
உங்கள் குண்டு உடலை யாராலும் எதாலும் ஒன்றுமே...மே.... செய்ய முடியாது!
அப்ப்டி ஓடினால் ஆட்டோ, இருசக்கரவாகனம் ஓடாத நேரத்துலே பார்த்து ஓடுங்க,,,